பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்!
சமீபத்தில் வட மாநிலத்தில் நடந்த ஒரு கோரமான வன்முறை வீடியோவைப் பார்த்தேன். அது எந்த மாநிலம் என்று தெரியவில்லை. கிறிஸ்தவர்கள்.. கிறிஸ்துமஸ் கொண்டாடினார்கள் என்ற காரணத்தாலேயே இரு கிறிஸ்தவப் பெண்களை தெருமுக்கில் ஒரு மரத்தில் கட்டி வைத்து பல அத்துமீறல் கொடூரங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள் பொந்து ve றியர்கள். அந்த அக்கிரமத்திற்கு ஒரு மனிதன் நின்று நிதானமாக விளக்கம் வேறு சொல்லிக் கொண்டிருந்தான். கூட நின்ற ஒரு பெண் அவர்களிடம் சத்தமான குரலில் பேசிக் கொண்டிருந்தாள்.அந்த பாதிக்கப்பட்ட சிறுபான்மை ஆதரவற்ற பெண்களுக்காக வாதாடினாளா இல்லை அந்த பெண்களுக்கு எதிராகப் பேசினாளா என்று எனக்கு புரியவில்லை. அந்த வீடியோவை மேற்குலக கீச்சர்கள் பகிர்ந்து இந்தியாவில் கிறித்தவ பெண்களுக்கு நடக்கும் கொடுமையைப் பாரீர் என்று முழங்கி இருந்தார்கள்.
ஒன்று மட்டும் நிச்சயம் மதம், இனம் என்று எந்த பிரச்சினை வந்தாலும் பெண்கள் இலக்காக்கப் படுகிறார்கள் பெண்ணுடல் என்பது சமூகத்தின் பார்வையில் ஓர் உடைமையாக கருதப் படுவதன் பின் விளைவு இது..!வலதுசாரி கொள்கைகள் வலுப்பெறும்போது சாதி ச n டைகள், கல va ரங்கள், மதக் க la வரங்கள், கொ laiகள் கொள்ளைகள் ஆகியவை அதிகரிப்பதை நாம் கண் கூடாக காணலாம். வலதுசாரிப் பின் விளைவு என்பது இதுதான்.அனைத்து சமூக விரோத செயல்களை விட மிக முக்கியமாக இந்த பாலியல் வன் முறைகள் அதிகரிப்பதுதான் வலசாரிப் பின் விளைவில் முக்கியமானது.பர்கூர் என்எஸ்எஸ் கேம்ப்பில் சிறுமிகள் மீதான பாலியல் வன் கொடுமையில் கைது செய்யப் பட்ட சிவராமன் என்ற நாதக வலதுசாரி கட்சியின் உறுப்பினரே இதற்கான மாபெரும் சான்று.
சரி. அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்திற்கு வருவோம்.இது மிக எளிதாக புரிந்து கொள்ளப்பட வேண்டிய வழக்கு.தமிழகத்தில் மிக முக்கியமான ஓர் கல்விச்சாலை வளாகத்திற்குள் ஒரு மாணவியை ஒரு அயோக்கியன் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான். அந்த மாணவியை மிரட்டுவதற்கு அவன் பயன் படுத்தியது அவளது காதல் விவகாரத்தை.. இந்த வலது சாரிகள் இதை வைத்தே மொத்த விவகாரத்தையும் திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள். அந்த பெண்ணின் காதல் விவகாரத்தினால் அந்த குடும்பத்தின் ஏழு தலைமுறைக்கும் அவமானம் என்று துவங்கி ஒரு நேரேட்டிவ செட் செய்கிறார்கள்.இதை திமுக என்ற தனிப்பட்ட கட்சியின் குற்றமாக செட் செய்ய அனைத்து நகர்வுகளையும் செய்து வருகிறார்கள். இந்த வலதுசாரிகளின் நோக்கம் அந்த பெண்ணுக்கான நீதி அல்ல. இவர்களது நோக்கம் இந்த சம்பவத்தை வைத்து திமுக மீது அவப்பெயரை கொண்டு வர வேண்டும் என்பது மட்டுமே.. !
வலதுசாரிகள் பொறுக்கிகள்.வலதுசாரிகள் அயோக்கியர்கள்.அனைத்து அயோக்கியத்தனத்தையும் அவர்கள் செய்துவிட்டு வலதுசாரி அல்லாத ஒருவன் அந்த அயோக்கியத்தனத்தை செய்கையில் ஓடி வந்து வெட்கமே இல்லாமல் கூச்சலிடும் கடைந்தெடுத்த திருட்டுப் பயல்கள்.இந்த நேரத்தில் நமது கடமை என்பது இவர்களது நேரேட்டிவ்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பது அல்ல. இந்த விஷயத்தில் அந்த குற்றவாளி ஞானசேகரன் மீது அவ்வளவு வழக்குகள் இருந்தும் அவன் மேலும் ஒரு குற்றம் செய்ய அவனுக்கு துணிவை தந்தது எது.? ஆளும் அரசு எந்த இடத்தில் தவறு செய்தது. இது போல இனி எந்த சம்பவமும் நடக்காமல் இருக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற விவாதங்களும் அதை நோக்கிய போராட்டங்களை முன்னெடுப்பதும் மட்டுமே நமது கடமை.அதை விட்டுவிட்டு இந்த அயோக்கியப் பயலுகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பது தேவையே இல்லாத ஆணிதான்.!
ஆமாம். எங்கள் பெண்கள் காதலிக்கத்தான் செய்வார்கள். காதலிக்கும் நேரத்தில் காதலர்களுக்குள் சில அந்தரங்கங்கள் நடக்கத்தான் செய்யும். அதப் பத்தி உனக்கென்னடா மானங்கெட்ட நாயே.. நடந்த அநியாயததை தட்டிக் கேட்காமல் எங்கள் பெண்களை கற்பு எனும் கோட்டின் கீழ் கொண்டு வந்து அவர்களையே குற்றவாளியாக செட் செய்ய உனக்கு எவ்வளவு திருட்டுத்தனம் வேண்டும்.. என்று அவர்களை செருப்பாலடிப்பதை வேண்டுமானால் நாம் செய்யலாம்.
ரொம்ப காலத்துக்கு முன் எங்கள் ஊரில் ஒரு மூன்று வயது குழந்தையை அறுபது வயது ஆள் பாலியல் வன்கொடுமை செய்தார். அந்த குழந்தையின் பிறப்புறுப்பு சிதைந்து போனது.. என்னைப் பொறுத்த வரைக்கும் அந்த வன்முறைக்கும்.இந்த அயோக்கியன் ஞானசேகரன் செய்த வன்முறைக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. பொறுக்கிகளை வேரறுப்போம். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்.பாதுகாப்பு கொடு என்று அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்போம். இந்த திமுக என்ற கட்சிக்கு எதிராக அல்ல..!