For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சிரிப்பது கட்டாயம் - ஜப்பான் அதிரடி!

06:38 PM Jul 12, 2024 IST | admin
சிரிப்பது கட்டாயம்   ஜப்பான் அதிரடி
Advertisement

மது ஆரோக்கியத்தை மேம்படுத்த சிரிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இன்றைய வாழ்க்கைமுறையில் பார்ப்பதற்கே நேரமில்லை. மக்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை சிரிப்பது கடினம். முகம் சுளிக்கவோ அல்லது பதற்றமாகவோ நேரத்தைக் கழிப்பவர்கள் சிரிப்பதற்கு நேரம் ஒதுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. சிரிப்பு நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமானது. அதீத மன அழுத்தம், பதட்டம் போன்றவற்றால் நமது உடல் நலம் பாதிக்கப்பட்டால், நிதானமாகச் சிரித்தால் போதும். உங்கள் நோய்கள் அனைத்தும் குணமாகும். புன்னகைக்காக இப்போது சிரிப்பு சிகிச்சைகள் நடத்தப்படுகின்றன சிரிப்பதற்கும் யோகா வகுப்புகளெல்லாம் நடக்கின்றன.. இச்சூழலில் இதய நோய் உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து சிரிப்பு பாதுகாக்கிறது என்ற ஆய்வின் அடிப்படையில் ஜப்பானின் யமகட்டா மாகாணத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்தின் 8வது நாளை சிரிப்பு தினமாக மக்கள் கடைப்பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

பொதுவாக சிரிப்பு என்பது மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமான ஒரு உணர்வு என்று நாம் நினைத்துக்கொள்கிறோம். ஆனால், அது மனிதர்களுக்கு மட்டும் உள்ள உணர்வு அல்ல என்கிறார் சோஃபி ஸ்காட். குரங்குகளின் இனம் அனைத்தும் சிரிப்பு உணர்வை வெளிப்படுத்துகின்றன. கொரில்லா சிரிக்கும்; சிம்பான்சி சிரிக்கும்; ஒராங்குட்டான் சிரிக்கும் - இவையனைத்தும் மனிதர்களைப் போலவே சிரிக்கும். அவையும் விளையாட்டுத்தனமாக சிரித்து மகிழும். இத்தகைய சிரிப்பை எலிகளிடத்தும், கிளிகளிடத்தும் நாம் காணலாம்."நீங்கள் தொடர்ந்து மிகவும் அதிகமாக சிரிக்கும்போது, அதாவது உங்கள் விலா எலும்பு வரை இழுத்து சிரிக்கும்போது, அது உங்களின் இதயத்திற்கும், நுரையீரலுக்கும் அழுத்ததை ஏற்படுத்தும். உங்களுக்கு இதயம், நுரையீரல், ரத்த நாளங்களில் ஏதேனும் நோய் இருந்தால், இதுபோன்ற தருணங்களில் மேலும் அழுத்தம் ஏற்படும். வரலாற்று பக்கங்களை பார்க்கும்போது, சிரிப்பால் இறந்தவர்கள் பட்டியலும் உள்ளது. ஆனால், சிரிப்பதானால் ஏற்படும் பல நன்மைகள் உண்டு. நீங்கள் சிரிக்கும் போது, மிகவும் நிம்மதியாக உணர்வீர்கள்.

Advertisement

நீங்கள் சிரிக்க தொடங்கும்போது, அட்ரினலின் ஹார்மோன் குறையும். இயற்கையாகவே, எண்டோர்பின் ஹார்மோன் உடல் முழுவதும் சீராக பயணிப்பது அதிகரிக்கும். நீங்கள் சிரிப்பதைப் போல் நடித்தாலும், இத்தகைய நன்மைகள் உங்கள் உடலுக்கு ஏற்படும். இந்த சிரிப்புப் பற்றி ஜப்பானின் யமகட்டா பல்கலையில் சிரிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் இதய நோய் அபாயத்தை குறைக்க சிரிப்பு உதவுவதை உறுதிப்படுத்தியது. அதன்படி, யமகட்டா மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு புதிய உத்தரவை கொண்டு வரப்பட்டுள்ளது.

அதாவது, ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிரிப்பதை கட்டாயமாக்கி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாதத்தின் 8வது நாளை, சிரிப்பு தினமாக மக்கள் கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தினமும் சிரித்தால் மன அழுத்தம், பதற்றம் குறைந்து ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், இந்த உத்தரவு தனிப்பட்ட சுதந்திரத்தை பாதிக்கும் என்றும், நோய் அல்லது வேறு காரணங்களால் சிரிக்க முடியாதவர்களின் உரிமைகளை இந்த உத்தரவு மீறுவதாகவும் அங்குள்ள சில அரசியல்வாதிகள் விமர்சித்துள்ளனர்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
Advertisement