For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

24 ஆண்டுகளில் 30 சதமாக உயர்ந்த லேடி ஆடிட்டர்கள்!

04:44 PM Mar 21, 2024 IST | admin
24 ஆண்டுகளில் 30 சதமாக உயர்ந்த லேடி ஆடிட்டர்கள்
Advertisement

2023 -24 ஆம் கல்வியாண்டிற்கான ஒன்றிய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்ததையடுத்து கடந்த ஆண்டு இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன் மூலம் பட்டய கணக்காளர் தேர்வை எழுதக் கூடிய மாணவிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.இந்த ஆண்டு பட்டய கணக்கியல் தேர்வு எழுதியவர்களின் மொத்த எண்ணிக்கையில் 43 சதவீதத்தினர் மாணவிகள் என அறிவித்துள்ளனர். இந்த தேர்வை எழுதிய பெண்களில் 48 சதவீதத்தினர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2000 ஆம் ஆண்டில் 8 சதவீதமாக இருந்த பெண் பட்டய கணக்காளர்களின் எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டில் 30 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Advertisement

இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவத்திற்கு இந்தியா முழுவதும் 165 பயிற்சி நிறுவனங்களும், தென்னிந்திய அளவில் 45 நிறுவனங்களும், தமிழக அளவில் 12 நிறுவனங்களும் உள்ளன. இந்த நிறுவனங்களில் பட்டய கணக்காளர் (சி.ஏ) படிப்பை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறோம்.இந்த காலகட்டத்தில் சி.ஏ படிப்பை படிக்க விரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 45% பெண்கள் இந்த படிப்பை படிக்க முன்வருகின்றனர். ஏராளமான வேலை வாய்ப்புகள் இந்த துறையில் உள்ளன.

Advertisement

இந்நிலையில் இது குறித்து இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத் தலைவர் ரஞ்சித் குமார் அகர்வால் பேசிய போது ‘‘சமீப காலமாக, கணக்கியல், வரி, நிதி சார்ந்த துறைகளில் பெண்களின் பங்கேற்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால் பல நாடுகள் கணக்கியலுக்காக இந்தியாவை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணத்துக்கு, அமெரிக்காவிலோ, பிரிட்டனிலோ ஒரு பர்கர் விற்பனை செய்யப்பட்டால் அதற்கான வரவு, செலவு கணக்கை சரிபார்ப்பவர்கள் குர்கானிலோ, கொல்கத்தாவிலோ இருக்கிறார்கள். அதிலும் பட்டய கணக்காளர்களுக்கு சராசரி ஆண்டு வருமானம் ரூ. 12.5 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கடந்த முறை எங்கள் வளாக தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அதிகபட்சம் ரூ.28 லட்சம் வரை ஆண்டு வருமானத்துக்கான வேலை இந்தியாவில் கிடைத்தது. அதிலும் சர்வதேச அளவில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ. 49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. ஐந்தாண்டு பட்டய கணக்கியல் படிப்புக்கு ரூ.75, 000 மட்டும் செலவழித்தால் கை மேல் பலன் கிடைக்கிறது

அந்த வகையில் கடந்த 24 ஆண்டுகளில் பட்டய கணக்காளர் படிப்பில் தேர்ச்சி பெற மாணவிகளின் எண்ணக்கை கணிசமாக உயர்ந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறை வளாக தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அதிகபட்சம் ரூ.28 லட்சம் வரை ஆண்டு வருமானத்துடன் இந்தியாவில் பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக, சர்வதேச அளவில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ. 49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது`` என ரஞ்சித் குமார் அகர்வால் கூறி உள்ளார்.

Advertisement