சில பல குறைகள் இருந்தாலும் வரவேற்க கூடிய படம் குய்கோ..!
அண்ணன் அருள்செழியன் இயக்கிய குய்கோ படம் பார்த்தேன்..
பத்திரிகையாளராக இருந்து திரைத்துறைக்குள் நுழைந்தவர்.. மணிகண்டன் இயக்கிய ஆண்டவன் கட்டளை இவரது கதைதான்..
குய்கோ படம் மூலம் இயக்குனர் ஆகியிருக்கிறார்.. பொதுவாக கன்னியாகுமரி ஆட்களுக்கு மலையாள திரைப்படங்கள் (பிட்டு படமல்ல.. 🙂 ) பிடித்தமானதாக இருக்கும்..
மலையாள இயக்குனர்கள் எளிமையான கதையையும் கதை மாந்தர்களையும் முன் வைத்து படங்கள் பண்ணுவார்கள்.. மசலா கிராஃபிக்ஸ்களைவிட இது போன்ற படங்கள் அங்கு கொண்டாடப்படும்..
சமீபத்தில் வந்து ஹிட் அடித்த ஜெய ஜெய ஜெய ஜெயஹே படமெல்லாம் அந்த ரகம்தான்.
அப்படி ஒரு திடீர் குபீர் பணக்காரனான ஒரு சாதாரணனின் கதையை மலையாள படங்களின் பாணியில் நகைச்சுவையுடன் படமாக்கியிருக்கிறார் இயக்குனர்..
நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.. ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்வதை சரி செய்திருக்கலாம்..
இயக்குனரின் முதல் படம் என்பதால் சில பல குறைகள் இருந்தாலும் வரவேற்க கூடிய படம் குய்கோ..
இயக்குனர் அருள்செழியனுக்கு அடுத்தப் படம் தயாரிப்பாளர்களின் கஞ்சத்தனம் இல்லாமல் சிறப்பான படமாக அமைய வாழ்த்துகள்..!
-©️✍️கார்ட்டூனிஸ்ட் பாலா