தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம்!.

05:44 AM Jul 12, 2024 IST | admin
Advertisement

சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி உட்பட தற்போது மொத்தம் 32 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 என்ற நிலையில் 2 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், சூர்ய காந்த் மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய கொலிஜியம், சுப்ரீம் கோர்ட்டுக்கு மேலும் 2 நீதிபதிகள் மற்றும் சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதியை நியமித்து மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது.

Advertisement

சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் ( கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராம்) நியமனம் செய்யப்பட்டுள்ளார். மும்பையில் பிறந்த கே.ஆர்.ஸ்ரீராம், நிதிக் கணக்கியல் மற்றும் மேலாண்மையில் பி.காம் மற்றும் எல்.எல்.பி முடித்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் இருந்து, தொடர்ந்து எல்.எல்.எம். (கடல் சட்டம்) லண்டன் கிங்ஸ் கல்லூரியில் இருந்து. அவர் எல்.எல்.எம் தகுதி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

சென்னை ஐகோர்ட்டின் தற்போதைய பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள ஆர்.மகாதேவன் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. ஆர் மகாதேவன் மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். 1989-ம் ஆண்டு வழக்கறிஞராக இவர் பதிவு செய்துள்ளார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிவில், கிரிமினல் வழக்குகள், மறைமுக வரிகள், சுங்கத்துறை மற்றும் மத்திய கலால் வழக்குகளில் வாதாடியுள்ளார்.தமிழக அரசின் கூடுதல் அரசு ப்ளீடராகவும், மத்திய அரசின் வழக்கறிஞராகவும் ஆயிரக்கணக்கான வழக்குகளை திறம்பட நடத்தியுள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சென்னை ஐகோர்ட்டில் 2-வது மூத்த நீதிபதியாக இருந்த ஆர்.மகாதேவன், சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.

ஜம்மு காஷ்மீர் ஐகோர்ட் தலைமை நீதிபதி என்.கோடீஸ்வர் சிங்-கை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம் செய்யவும் மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை வழங்கியுள்ளது. சுப்ரீம் கோர்ட் உச்ச நீதிமன்ற வரலாற்றில் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த நீதிபதிகள் இதுவரை இடம்பெறாத நிலையில் என்.கோடீஸ்வர் சிங் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால், மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த முதல் சுப்ரீம் கோர்ட் நீதிபதி என்ற அந்தஸ்தை பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Chennai High CourtKR SriramMahadevannew Chief JusticeSC
Advertisement
Next Article