For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

கொட்டுக்காளி மக்கள் மனதில் இடம் பிடிக்கும் - சூரி நம்பிக்கை!

09:26 AM Aug 09, 2024 IST | admin
கொட்டுக்காளி மக்கள் மனதில் இடம் பிடிக்கும்   சூரி நம்பிக்கை
Advertisement

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி நடித்துள்ள திரைப்படம் 'கொட்டுக்காளி'. அன்னா பென் நாயகியாக நடித்துள்ளார். வருகின்ற ஆகஸ்ட் 23ம் தேதி அன்று படம் திரைக்கு வருகிறது. இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும் வென்ற படமிது . இந்த நிலையில், நடிகர் சூரி மற்றும் நடிகை அன்னா பென் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.

Advertisement

கொட்டுக்காளி பட அனுபவம் குறித்து நடிகர் சூரி சொன்னது,

Advertisement

“’விடுதலை’ மற்றும் ‘கருடன்’ படங்கள் ஒரு நடிகராக எனக்கு எப்படி பெயர் வாங்கி கொடுத்ததோ அதை விட பெரிய பெயரை ‘கொட்டுக்காளி’ பெற்று தரும். அப்படிப்பட்ட கதைக்களம் கொண்ட படம் இது. கதைக்களம் மிகவும் புதிதாக இருப்பதோடு, இப்படி ஒரு படம் நம்ம மக்களுக்கு தேவை, அனைவருக்கும் முக்கியமான படமாகவும் இருக்கும்.’விடுதலை’ மற்றும் ’கருடன்’ படங்கள் வசூலித்தது போல் இந்த படமும் வசூலிக்குமா? என்றால், அந்த விசயத்தை இதனுடன் ஒப்பிடக்கூடாது, படம் வெளியான பிறகு இதை மக்களும் புரிந்துக்கொள்வார்கள். இந்த படம் வசூல் ரீதியாக எப்படி வருகிறது என்பதை விட மக்கள் மனதில் நிச்சயம் இடம் பிடிப்பதோடு, தனி வரவேற்பும் பெறும். இப்படி ஒரு சம்பவம் அனைத்து இடங்களிலும் நடந்திருக்கும். இதை நாம் பார்த்திருப்போம், அதை கடந்தும் வந்திருப்போம், ஆனால் படமாக இந்த கதைக்களம் இதுவரை வந்ததில்லை, இது வர வேண்டிய ஒரு களம். இதை என்னிடம் இயக்குநர் சொன்னவுடன், இதில் நான் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதோடு, இதில் நடித்ததற்காக பெருமைப்படுகிறேன், இப்படி ஒரு படைப்பு மிக அவசியமானது.

படத்தை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் எனக்கு அதிகாலை 5 மணியளவில் போன் செய்தார், அவர் சொன்ன வார்த்தைகளை நான் இங்கு சொன்னால் அதிகமாக இருக்கும். ஆனால், அவர் சொன்னது “உங்களை பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது, ஒரு நடிகராக விடுதலை படத்தை விட இந்த படம் உங்களை மிகப்பெரிய உயரத்திற்கு அழைத்து செல்லும்” என்றார். மேலும், பலமுறை படத்தை நான் பார்த்தேன், உங்கள் நடிப்பு மிக சிறப்பாக இருக்கிறது, என்றார். அவருடன் அவரது மனைவி, அம்மா ஆகியோரும் படம் பார்த்தார்கள், அவர்களும் என் நடிப்பும், படமும் சிறப்பாக இருப்பதாக சொன்னதாக சொன்னார். இயக்குநர் அமைதியாக இருந்துக்கொண்டு இப்படி ஒரு படம் செய்துவிட்டாரே, என்றும் பாராட்டினார்.

ஆன நிஜமாக இந்த இடத்தை நான் எதிர்பார்த்ததில்லை. விடுதலை படம் கூட நான் எதிர்பார்க்காதது தான். காமெடி நடிகராக இருந்து கதையின் நாயகனாகி ’விடுதலை’, ’கருடன்’ போன்ற படங்களில் நடித்துவிட்டு, ’கொட்டுக்காளி’ போன்ற படத்தில் நடித்திருப்பது, அதன் மூலம் சர்வதேச திரைப்பட விழாக்களில் நான் பங்கேற்றிருப்பது எல்லாம் சினிமாவில் நான் நேர்மையாக பயணித்ததால் கிடைத்தது என்று நினைக்கிறேன். இது அனைத்தும் எனக்கு புதிய அனுபவமாக இருப்பதோடு, ஒரு நடிகராக பலவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை கொடுக்கிறது.” என்றார்.

நாயகி அன்னா பென் சொன்னது,

‘‘கொட்டுக்காளி ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான படம். என் முதல் தமிழ்ப் படம். மீனாங்கிற கேரக்டர்ல நடிச்சிருக்கேன். இது எனக்குள்ள பெரிய தாக்கத்தை ஏற்படுத்துச்சு. வினோத்ராஜ் சார் என்கிட்ட கதை சொல்ல வந்தபோது, ‘கப்பேலா' படத்துல நான் நடிச்சதைப் பார்த்துதான் ‘கொட்டுக்காளி'க்கு நான் சரியா இருப்பேன்னு தோணுச்சுன்னு சொன்னார். ‘கப்பேலா'ல நான் நடிச்ச ஜெஸ்ஸி கேரக்டருக்கும் ‘கொட்டுக்காளி' மீனா கேரக்டருக்கும் ஒற்றுமைகள் இருக்கு. மீனா ஒரு விஷயத்தைப் பார்க்குற விதமே வித்தியாசமா இருக்கும். அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. நான் எப்பவுமே கதை கேட்டா, ஒரு நாள் டைம் எடுத்துக்கிட்டு நல்லா யோசிச்சுதான் பதில் சொல்லுவேன். ஆனா, இந்தக் கதையைக் கேட்டவுடனே, ‘நான் பண்ணுறேன்'னு உடனே சொல்லிடத் தோணுச்சு. சொன்னேன்.
.
அதிலும் ஒரு வார்த்தைக் கூட பேசாமல் நடிச்சிருக்கேன்.. என்றாலும், உடல் மொழி, முகபாவனை, பார்வை ஆகியவற்றின் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். இதற்கான உடல்மொழியை எப்படி செய்வது என்பது தான் எனக்கு சவாலாக இருந்தது, ஆனால் என்னை ஈர்த்த விசயமும் அது தான், அதை சரியாக செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன் இது ரொம்ப புதிய முயற்சியாக இருந்தது. கலாச்சாரம் சம்மந்தமான கதைக்களம் தான், மதுரை, மொழி என்று குறிப்பிட்ட மக்களின் வாழ்வியலை பற்றி படம் பேசினாலும், இந்த கதை சர்வதேச அளவிலானது. அதனால் எந்த மொழியில் எடுத்தாலும் இந்த படம் மக்களை சென்றடையும். படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருப்பதோடு, அவர்களுக்கான தனித்துவமும் படத்தில் இருக்கிறது’’ என்றார்.

Tags :
Advertisement