For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

’கூரன்’ - திரைப்பட விமர்சனம்!

09:10 PM Mar 02, 2025 IST | admin
’கூரன்’   திரைப்பட விமர்சனம்
Advertisement

நாயை...நாய் என்று சொன்னால், நம்மை கடிந்து கொள்ளும் பலரை பல சூழலில் சந்தித்து இருக்கலாம். நாயை தன் குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே குறிப்பாக அந்த நாயை குழந்தையாக பாவிக்கிறார்கள். மரியாதையோடு பெயர் வைத்து கூப்பிடுகிறார்கள்.அந்தளவிற்கு சக மனிதனுக்கு மதிப்பு கொடுக்காது,தன் நாய்க்கு மதிப்பு கொடுக்கும் மனிதர்களை கண் கூட கண்டிருக்கலாம். இதையும் கன்றின் மீது தேர் ஏற்றிக்கொன்ற தன் மகனுக்கு அதே தேர் சக்கரம் ஏற்றி தண்டனை அளித்த மனுநீதி சோழன் கதையை அடிப்படையாக வைத்து கார் சக்கரம் ஏற்றி தன் குட்டியை கொன்ற கயவனுக்கு தண்டனை கோரி நீதிமன்ற வாசலுக்கு செல்லும் ஒரு நாயின் கதையை சுவைபட வழங்க முயன்றிருக்கிறார்கள்.

Advertisement

அதாவது கொடைக்கானல் சாலையில் ஒரு நாய் தனது குட்டி நாயுடன் சாலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்த நேரத்தில், தாறுமாறாக ஓடிய கார் ஒன்று குட்டி நாய் மீது ஏற்றி அதனை கொன்று விட்டு, நிற்காமல் சென்று விடுகிறது.இதனால், தாய்நாய் மிகவும் கவலையில் மூழ்கினாலும், இந்த விபத்துக்கு நியாயம் கேட்டு போலீஸ் ஸ்டேசன் செல்கிறது அம்மா நாய்.ஸ்டேஷனி அங்கு யாரும் இந்த நாயின் வேதனையை புரிந்து கொள்ள முடியவில்லை. அதனைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் வக்கீல் எஸ்.ஏ சந்திரசேகர் பத்து வருடங்களாக எந்த வழக்கிலும் ஆஜராகாமல் வீட்டில் இருக்கிறார். அவரது வீட்டு கதவை தட்டுகிறது பட நாயக/நாயகி நாய். முதலில் அந்நாய் ஏதோ சொல்ல முயல்கிறது என்று புரிந்தாலும் விசயம் புரியாமல் தவிக்கும் எஸ்ஏ சந்திரசேகர் ஒரு கட்டத்தில் தன் குட்டியை கார் ஏற்றி கொன்றவனுக்கு தண்டனை வாங்கி தர வேண்டும் என்பதை அதன் பாணியில் உணர்த்துவதை புரிந்து கொள்கிறார். இதை அடுத்து நாயின் புகாரை காவல்துறை ஏற்க வைப்பதோடு, அந்த வழக்கில் வாதிட்டு தாய் நாய்க்கு நீதி வாங்கிக் கொடுக்க போராடுகிறார். அவரது போராட்டம் வெற்றி பெற்றதா? தாய் நாய்க்கு நீதி கிடைத்ததா ? என்பதை நம்பமுடியாத காட்சிகளுடன், நம்பும் வகையில் தொழில்நுட்ப கருவிகள் மூலம் சொல்வதே ‘கூரன்’படக் கதை.

Advertisement

மெயின் ரோலில் சுப்ரீம் கோர்ட் வக்கீலாக நடித்திருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் வயதுக்கு ஏற்ற வேடத்தில் கூர்மையாக நடித்திருக்கிறார். வசன உச்சரிப்பு, உடல் மொழி என அனைத்திலும் நிதானமாக செயல்பட்டிருப்பவர் ,தன்னையே சுற்றி சுற்றி வரும் நாய்க்கு என்ன வேண்டும் என்பது தெரியாமல் அதற்கு பிஸ்கட் தருவது, உணவு தருவது என்று பரிவு காட்டும் எஸ்.ஏ சந்திரசேகர் ஒரு கட்டத்தில் அது தன் குட்டியை கார் ஏற்றி கொன்றவனுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதை உணர்த்துவதாக அறிந்து வழக்கறிஞர் கோட்டை மாட்டிக்கொண்டு கோர்ட்டுக்கு விரைவதும், கோர்ட்டில் அவர் தொடக்க காட்சிகளில் எடுத்து வைக்கும் விவாதத்தைக் கேட்டால் ஏதோ சாதாரண வழக்காக முடிந்துவிடும் என்று நினைத்தால் அதை சீனுக்கு சீன் சீரியசான வாதமாக மாற்றி ரசிகர்களை கதைக்குள் இழுத்து விடுகிறார் எஸ் ஏ சந்திரசேகர்.

ஜட்ஜ்ஜாக நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சரவண சுப்பையா, வழக்கறிஞராக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல், சத்யன், ஜார்ஜ் மரியான், கவிதா பாரதி, இந்திரஜா ரோபோ சங்கர் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

கேமராமேன் மார்டின் தன்ராஜ் கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, நாயின் நடவடிக்கைகளை நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார். மியூசிக் டைரக்டர்
சித்தார்த் விபின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்களத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

ஜென்ஸி மற்றும் பைரவா என்ற பெயர் கொண்ட நாய் படத்தின் முக்கியமான கதாபாத்திரமாக வலம் வந்திருக்கிறது. சோகமாக முகத்தை வைத்துக்கொள்ளும் நேரத்திலும், கோர்ட்டு கூண்டில் ஏறி வக்கீல் கேட்கும் கேள்விக்கு பதில் அளிப்பதும் ருசிகரமான காட்சிகள்.கோர்ட்டில் நாய் எப்படி சாட்சி சொல்லும் என்று ஒரு குழப்பம் இருக்கத்தான் செய்யும் அந்த குழப்பம் படத்தை பார்த்தால் தீரும்.அதிலும், நாய்க்கும் ஒரு பிளாஷ்பேக் வைத்திருக்கிறார் இயக்குனர் நிதின் வேமுபதி. நாய் கோர்ட்டில் வந்து சாட்சி சொல்லும் கதை என்று மேம்போக்காக சொல்லிவிடாமல் அதற்காக மெனக்கெட்டு ஸ்கிரிப்ட் எழுதி விலங்குகளுக்கான நீதியை ஒரு சில நிஜ சம்பவங்களை வைத்து அலசி இருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.

மொத்தத்தில், ‘கூரன்’ - சகலருக்கும் பிடித்த நவீன அம்புலிமாமா கதை

மார்க்- 2.5/5

Tags :
Advertisement