பிரிட்டன் மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிப்பு!
தி கிரேட் பிரிட்டன் மன்னர் சார்லஸ் கடந்த 2023-ம் ஆண்டு மன்னராக முடிசூடிக் கொண்டார். பிரிட்டன் வரலாற்றில் மிக அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் இரண்டாம் ராணி எலிசபெத். இவர் 1952இல் தொடங்கி சுமார் 70 ஆண்டுகள் பிரிட்டன் ராணி 2022-ல் உயிரிழந்ததை அடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரியின் தந்தையான சார்லஸ். அண்மையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார். இந்த சூழலில் 75வயதான அவருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதை அடுத்து ராணி 2ம் எலிசபெத் மரணத்தை 15ம் நூற்றாண்டிலேயே கணித்த பிரெஞ்சு ஜோதிடர் மைக்கேல் டி நாஸ்ட்ரேடேம் கூற்று தற்போது விவாத பொருளாகியுள்ளது. அதாவது ராணியின் மறைவுக்கு பிறகு வரும் மன்னர் குறுகிய காலம் மட்டுமே ஆட்சி செய்வார் என்றும், மன்னர் பொறுப்புக்கே வரமாட்டார் என கருதப்படும் ஒருவர் பிரிட்டன் மன்னர் ஆவார் என 400 ஆண்டுகளுக்கு முன்பு கணித்துள்ளார். இதன்காரணமாக தற்போது அரச நடவடிக்கையில் இருந்து விலகியுள்ள ஹாரி பிரிட்டன் மன்னராவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
மன்னர் உடல் நிலைக் குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிவிப்பில் “நோய் கண்டறிதல் சோதனையின் மூலம் மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு அதற்கான மருத்துவ சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. பொதுவெளியில் நடைபெறும் நிகழ்வுகளில் அவர் பங்கேற்க வேண்டாம் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதே நேரத்தில் தனது வழக்கமான மற்ற பணிகளை மன்னர் மேற்கொள்வார். சிகிச்சை முறையில் பாசிட்டிவ் மனநிலையில் உள்ள மன்னர், விரைந்து பொது வாழ்வுக்கு திரும்புவார்.ஊகங்களைத் தடுக்கவும், தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் அறிவித்துள்ளார்” என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.