தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பிரதமர் மோடி- போப் பிரான்சிஸ் சந்திப்பு குறித்து கேலி -கேரள காங்கிரஸ் மன்னிப்பு! .

04:54 PM Jun 17, 2024 IST | admin
Advertisement

ஜி7 கூட்டமைப்பின் உச்சி மாநாடு இத்தாலியில் இரு தினங்கள் நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்க இத்தாலி வந்துள்ள அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி வரவேற்றார். இதில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார். அதையேற்று இத்தாலி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisement

மாநாட்டில் வாடிகன் தலைவரான போப் பிரான்சிசை சந்தித்த பிரதமர் மோடி, அவரை கட்டி அணைத்து உரையாடினார். மோடியை போப் பிரான்சிஸ் சந்தித்தது தொடர்பாக கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கிண்டலாக பதிவிட்டுள்ளது. அதில், “இறுதியாக போப்பிற்கு கடவுளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது” என்று ட்வீட் செய்துள்ளது.

Advertisement

காங்கிரஸ் கருத்து குறித்து பாஜக மாநிலத் தலைவர் கே சுரேந்திரன், “கேரளாவில் காங்கிரஸின் சமூக ஊடகங்களை நகர்ப்புற நக்சல்கள் அல்லது தீவிர இஸ்லாமியர்கள் நிர்வகிக்கிறார்கள் என்பது இப்போது உறுதியாகிவிட்டது. அவர்கள் போப்பை அவமதிக்கலாம். கே.சி.க்கு (வேணுகோபால், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்) தெரியாமல் இது நடக்காது. இது ராகுல் காந்திக்கும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் தெரியுமா? கிறிஸ்தவர்களை கேலி செய்யும் வகையில் இதுபோன்ற ஒரு ட்வீட்டை கேரளா இதுவரை பார்த்ததில்லை” எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், ட்வீட் தொடர்பாக மன்னிப்பு கோரிய கேரள காங்கிரஸ், மதம், மதகுருமார்கள் அல்லது எந்த தெய்வத்தையும் அவமதிப்பது கட்சியின் பாரம்பரியம் அல்ல என்பது மக்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளது. இந்தச் சர்ச்சைக்கு விளக்கம் அளித்த ட்வீட்டில் காங்கிரஸ், “கட்சி அனைத்து மதங்களையும் நம்பிக்கைகளையும் ஒன்றாகக் கொண்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் மதிக்கப்படும் போப்பை அவமதிக்கும் எண்ணம் காங்கிரசுக்கு இல்லை. அதேசமயம், தன்னை கடவுள் என்று கூறிக்கொண்டு நாட்டில் உள்ள விசுவாசிகளை அவமதிக்கும் நரேந்திர மோடியை கேலி செய்ய கட்சிக்கு எந்த தயக்கமும் இல்லை” எனத் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, “பாஜகவும் மோடியும் முதலில் மணிப்பூரில் உள்ள கிறிஸ்தவ சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளது

Tags :
appologycongressGodkeralaPM Modipopetwitte
Advertisement
Next Article