For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

கர்நாடகாவில் முஸ்லிம் பெண் தேர்வர்கள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி!

02:05 PM Oct 23, 2023 IST | admin
கர்நாடகாவில்  முஸ்லிம் பெண் தேர்வர்கள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி
Advertisement

ர்நாடகா ஸ்டேட் உடுப்பி டிஸ்ட்ரிக்கில் உள்ள குந்தாப்பூர் கவர்மென்ன் பியூ காலேஜில், ஹிஜாப் அணிந்து வந்த 6 இஸ்லாமிய மாணவிகள் வகுப்பறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. `ஹிஜாப்' அணிவது அரசியலமைப்புச் சட்டம் எங்களுக்கு வழங்கிய உரிமை, எங்களை கல்லூரிக்குள் அனுமதிக்க வேண்டும் எனக்கூறி அந்த 6 மாணவிகளும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த டிசம்பர் மாதம் உடுப்பி மாவட்டத்தில் தொடங்கிய இந்த சர்ச்சை அடுத்தடுத்து சிக்மகளூர், விஜயபுரா, ஷிமோகா, பத்ராவதி என சுற்றுப்பகுதியில் உள்ள பல்வேறு கல்லூரிகளுக்குப் பரவியது. அங்கும் கல்லூரி நிர்வாகத்தால் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இந்து மாணவர்களும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்துவந்தால் அவர்களுக்கு எதிராக நாங்களும் காவி அணிவோம் என்றுகூறி கழுத்தில் காவி துண்டுடன் `ஜெய் ஶ்ரீராம்' கோஷமிட்டு கல்லூரிக்கு வரவும் விவகாரம் பெரிதானது. அதேசமயம் காவி துண்டு மாணவர்களுக்கு எதிராகவும், போராடும் இஸ்லாமிய மாணவர்களுக்கு ஆதரவாகவும் கழுத்தில் நீலத் துண்டுடன் சில மாணவர்களும் `ஜெய்பீம்' கோஷத்துடன் கல்லூரிக்கு வருகை தந்தனர். இதனால் படிக்கும் மாணவர்களுக்குகிடையே மத மோதல்கள் ஏற்படும் பதற்றமான சூழ்நிலை உருவாகி விவகாரம் பூதாகரமானதெல்லாம் நினைவிருக்கும்தானே?தற்போது கர்நாடக தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் முஸ்லிம் பெண் தேர்வர்கள் ஹிஜாப் அணிந்து எழுத அனுமதி வழங்கப்படும் என்று கர்நாடக அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

Advertisement

கடந்தாண்டு பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிலையங்களில் மதத்தை வெளிப்படுத்தும்விதமான உடைகளை அணிந்து வரக் கூடாது என கர்நாடக மாநில கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. பள்ளிகளில் ஹிஜாப் அணிந்து வர அனுமதி வழங்கக் கோரி முஸ்லிம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாநிலம் முழுவதும் பரவிய நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றம், பள்ளிகளில் மத அடையாள அணிகளை அணிந்து வர தடை விதித்தது.

Advertisement

இந்தத் தீர்ப்பால் முஸ்லிம் மாணவிகள், தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் ஹிஜாப் அணிந்து எழுத முடியாத நிலையில் இருந்தனர். இந்த நிலையில், இதுகுறித்து பேசிய அமைச்சர் சுதாகர், "தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் மாணவ, மாணவிகள் தங்களின் தனிப்பட்ட உடைகளை அணிந்து கொள்ள அனுமதி வழங்கப்படும். மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத விரும்பினால், அதற்கு அனுமதி வழங்கப்படும்" என்று தெரிவித்தார்

Tags :
Advertisement