தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

யுனிசெப் இந்தியாவின் குழந்தை உரிமைகளின் தேசிய தூதராக கரீனா கபூர் கான் நியமனம்!

10:05 AM May 06, 2024 IST | admin
Advertisement

முதன்முறையாக இளைஞர் பிரதிநிதிகளையும் யுனிசெப் இந்தியா நியமனம் செய்து உள்ளது பெருமைப்பட வைக்கிறது. யுனிசெப் இந்தியாவுடனான கூட்டுறவு 75 ஆம் ஆண்டு எட்டியுள்ள நிலையில், யுனிசெப் இந்தியா 4 மே, 2024 அன்று இந்தியா சினிமாவின் முன்னணி நட்சத்திரமான கரீனா கபூர் கான் அவர்களை குழந்தை உரிமைகளுக்கான தேசிய தூதராக நியமனம் செய்துள்ளது. இப்பொறுப்பின் வழியாக கரீனா கபூர் கான் ஒவ்வொரு குழந்தையின் உரிமைகளான குழந்தைகளின் தொடக்கநிலை முன்னேற்றம், நலம், கல்வி மற்றும் பாலின சமத்துவத்திற்கான யுனிசெப் இந்தியா எடுக்கும் முன்னெடுப்புகளுக்கு உறுதுணையாக இருப்பார்.

Advertisement

2014 முதல் யுனிசெப் இந்தியாவின் நட்சத்திர பிரதிநிதியாக இருந்து வந்த கரீனா கபூர் கான், பெண் குழந்தைகளின் கல்வி, பாலின சமத்துவம், அடிப்படைக் கற்றல், நோய்த் தடுப்பு மற்றும் தாய்ப்பால் கொடுப்பது உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு உறுதியுடன் குரல் கொடுத்தார். பெருந்தொற்று காலத்தில் பள்ளிகள் மீண்டும் தொடங்கியவுடன் குழந்தைகளின் கற்றலுக்காகவும் குரல்கொடுத்தார். யுனிசெப் முன்னெடுக்கும் #EveryChildRights பன்னாட்டு அளவிலான பரப்புரைகளில் இவரின் பங்களிப்பு இன்றியமையாதது.

Advertisement

யுனிசெப் இந்தியாவின் தேசிய தூதராக நியமிக்கப்பட்டதைப் பற்றி கரீனா கபூர் கான் கூறுகையில், “குழந்தைகளின் உரிமைகளைப் போல இன்றியமையாத சில விஷயங்கள் உள்ளன, இந்த உலகின் எதிர்காலத் தலைமுறை. யுனிசெப் இந்தியாவின் தேசிய தூதராக இப்போது என் பங்களிப்பை தொடர்வதை பெருமையாக நினைக்கிறேன். பலவீனமான குழந்தைகள் மற்றும் அவர்களின் உரிமைகளுக்காக, குறிப்பாக தொடக்கநிலை குழந்தைப் பருவம் , கல்வி மற்றும் பாலின சமத்துவம் ஆகியவற்றிற்காக குரல் கொடுக்க என் செல்வாக்கைப் பயன்படுத்துவேன். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு குழந்தைப் பருவம், நியாயமான வாய்ப்பு, எதிர்காலம் தேவை.”

அதே நிகழ்வில், யுனிசெப் இந்தியா தங்கள் முதல் இளம் பிரதிநிதிகளை நியமித்ததையும் அறிவித்தது. இவர்கள் காலநிலை நடவடிக்கை, மனநலம், கண்டுபிடிப்புகள் மற்றும் பெண்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) துறையில் முன்னோடிகள். 16 முதல் 24 வயதுடைய இந்த நான்கு பிரதிநிதிகளுக்கும் குறிப்பிட்ட ஆர்வமுள்ள பகுதிகள் உள்ளன. விளையாட்டு உரிமை மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்சேர்ப்புப் பிரதிநிதியாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கௌரன்ஷி சர்மா, காலநிலை நடவடிக்கை மற்றும் குழந்தைகள் உரிமை பிரதிநிதியாக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கார்த்திக் வர்மா, மனநலம் மற்றும் குழந்தைப் பருவ வளர்ச்சியின் அசாமைச் சேர்ந்த நாஹித் அஃப்ரின், தமிழ்நாட்டைச் சேர்ந்த வினிஷா உமாசங்கர் ஆர்வமுள்ள கண்டுபிடிப்பாளர் மற்றும் ஸ்டெம் துறையில் முன்னோடி அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்(STEM) பிரிவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த இளம் பிரதிநிதிகள் யுனிசெப் உலக திட்டத்தின் ஒரு பகுதி, உலகம் முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களைப் பற்றிய பிரச்சினைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 93 க்கும் மேற்பட்ட இளம் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்,.

இளைஞர் பிரதிநிதியாக தனது நியமனம் குறித்து கார்த்திக் வர்மா பேசுகையில், “இளைஞர்கள் இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். யுனிசெப் இந்திய இளைஞர் பிரதிநிதியாக , குறிப்பாக ஒடுக்கப்பட்ட மற்றும் பலவீனமான சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கவலைகளையும் கண்ணோட்டங்களையும் பல்வேறு பங்குதாரர்களுக்கு தெளிவுபடுத்தவும், கொண்டுசேர்க்கவும் குரல்கொடுப்பேன்.” எனக் கூறினார்,

“யுனிசெப் இந்தியாவின் இளம் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பல இளைஞர்கள் எதிர்கொள்ளும் மனநலம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுப்பதற்கும், பரப்புவதற்கும் எனக்குக் கிடைத்த சிறந்த வாய்ப்பு இது” என அசாமைச் சேர்ந்த இளம் பிரதிநிதி நாஹித் அஃப்ரின் கூறினார்.

நியமன விழாவில் பேசிய யுனிசெப் இந்திய பிரதிநிதி சிந்தியா மெக்கஃப்ரி, “குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்துவதற்கான கரீனா கபூர் கானின் பல ஆண்டு கால ஈடுபாட்டின் அடிப்படையில், அவரை எங்கள் தேசிய தூதராக வரவேற்பதில் யுனிசெப் மகிழ்ச்சியடைகிறது. பல தேசிய மற்றும் உலகளாவிய பரப்புரைகளுக்கு அவர் ஆதரவளித்ததன் மூலம் ஆற்றலைத் தந்ததோடு தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளார்” என்றார்.

“யுனிசெப் குடும்பத்தில் எங்கள் நான்கு இளம் பிரதிநிதிளுடன் இணைந்து யுனிசெப் இந்திய தேசிய தூதராக அவர் பணியில் சேர்ந்திருக்கிறார். குழந்தைகளின் உரிமைகளுக்காக தொடர்ந்து ஆதரவு திரட்டுவதற்காக அவரது பணியையும், நான்கு இளம் பிரதிநிதிகளின் பங்களிப்புகளையும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்.. கடந்த எழுபத்து ஐந்து ஆண்டுகளாக யுனிசெப், இந்திய அரசின் தலைமையிலான திட்டங்கள் மற்றும் மைல்கற்களை பெருமையுடனும் ஆர்வத்துடன் பங்கேற்கும் கூட்டாளியாக, ஆதரித்தது, இதன் மூலம் லட்சக்கணக்கான குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பயனடைந்தனர்.UNICEFWITH INDIA@75 கொண்டாடும் வேளையில், மதிப்புமிக்க கூட்டாண்மையுடன் வரும் ஆண்டுகளிலும், தசாப்தங்களிலும் குழந்தைகளுக்கான நோக்கத்தைப் புதுப்பிப்பதற்கும், மீண்டும் அர்ப்பணிப்பதற்கான வாய்ப்பளிக்கிறது. "இந்த கூட்டு பங்களிப்பு உணர்வில், பிரபல தேசிய தூதர்கள், பிரபலங்கள் மற்றும் இளம் பிரதிநிதிகளுடனான யுனிசெப் ஈடுபாடு அனைத்து குழந்தைகளுக்கும் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தை உருவாக்கத் தொடர்ந்து இருக்கும்" என மெக்கஃப்ரி தெரிவித்தார்.

Tags :
Child RightsIndia's National AmbassadorKareena Kapoor KhanUNICEF
Advertisement
Next Article