தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

கம்பாளா போட்டி :பெங்களூருவில் முதல் முறையாக நடைபெற்ற‌து!

09:57 AM Nov 26, 2023 IST | admin
Advertisement

ர்நாடக ஸ்டேட் மங்களூரு,உடுப்பி போன்ற கடலோர மாவட்டங்களில் துளு மொழி பேசும் மக்கள் கணிசமான எண்ணிக்கையில் வாழ்கின்றனர். அந்த துளு மக்கள் ஜல்லிக்கட்டு, ரேக்ளா, மஞ்சு விரட்டு போல் 500 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய விளையாட்டான கம்பாளா போட்டியை நெல் அறுவடை முடிந்த பின்னர் நடத்தி வருகின்றனர். கடந்தஆண்டு வெளியான ‘கந்தாரா’ என்ற கன்னட திரைப்படத்தின் வாயிலாகஇந்த விளையாட்டு சர்வதேச அளவில் பிரபலம் அடைந்தது..!

Advertisement

இந்த பந்தயம் மண் மற்றும் தண்ணீரை கொண்ட டிராக்குகளில் நடக்கும். ஒரு நேரத்தில் இரண்டு டீம்கள் களமிறங்கும் ஒவ்வொரு ஜோடி எருமை மாடுகளும் அவற்றைக் கட்டுப்படுத்தி ஓட்ட 'கம்பாலா ரன்னர்' ஒருவரும் உடன் இருப்பார்.வெற்றி பெறும் அணிகளுக்கு இடையே தொடர்ச்சியாகப் போட்டிகள் நடத்தப்படும். சாம்பியன் யார் என்று நிர்ணயம் செய்யப்படும் வரை இரு டீம்களுக்கு இடையே போட்டி நடைபெறும். இதில் யார் முதலில் வருகிறார்கள் என்பதை மட்டுமே வைத்து எப்போதும் வெற்றியாளர்கள் முடிவு செய்யப்படுவது இல்லை.

Advertisement

எருமை மாடுகள் ஓடும் போது, எந்தளவுக்கு நீர் தெளிக்கிறது என்பதும் இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். சில போட்டிகளில் இப்படித் தெறித்த நீர் அடிப்படையிலும் கூட வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதை 'கொலு' என்று அழைப்பார்கள். கம்பாலா பந்தயத்தில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானதாகவும் கவுரவம் சார்ந்ததாகவும் பார்க்கப்படும். இந்த போட்டிக்காகவே அந்த எருமை மாடுகளுக்கு ஆண்டு முழுவதும் சிறப்பு கவனிப்பும் இருக்கும்.

கடலோர பகுதிகளில் மட்டுமே நடந்து வந்த கம்பாளா போட்டியை பெங்களூருவில் நடத்த வேண்டும் என கம்பாளா ஆர்வலர்கள் கோரி வந்தனர். இதையடுத்து முதல்வர் சித்தராமையா நவம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடத்த அனுமதி வழங்கினார்.

பெங்களூருவில் உள்ள அரண்மனை மைதானத்தில் பந்தயம் நடத்துவதற்காக பெரும் செயற்கை வயல்கள் உருவாக்கப்பட்டன. பரிசளிப்பு விழா நடைபெறும் மேடைக்கு மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ் குமாரின் பெயர் சூட்டப்பட்டது. கர்நாடக முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, சதானந்தகவுடா ஆகியோர் நேற்று காலையில் தீபாரதனை செய்து க‌ம்பாளா போட்டியை தொடங்கி வைத்தன‌ர். இதைத்தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட எருமை காளைகள் கம்பாளா போட்டியில் பங்கேற்றன. மாலையில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு முதல் வர்சித்தராமையா பரிசு வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில், “பெங்களூருவில் கம்பாளா போட்டிநடத்தியதன் மூலம் கடலோர கர்நாடகாவின் பாரம்பரிய கலை உலகமெங்கும் பரவ வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த கலையின் வாயிலாக கடலோர கர்நாடக மக்களின் பண்பாட்டை பிறமொழியினரும் அறிந்துகொள்வார்கள்” என்றார்.

Tags :
BengaluruKambalaKambalakarnatakakarnatakaculturekarnataktourismnammakarnataka
Advertisement
Next Article