For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

கள்வன் - விமர்சனம்!

02:41 PM Apr 04, 2024 IST | admin
கள்வன்   விமர்சனம்
Advertisement

திருடன்,கள்ளன், கரியவன், நடுச்செல்வோன், முசு, நண்டு, கற்கடகராசி, யானை,சோரன் ஆகிய பெயர்களைக் கொண்ட சொல்லான கள்வன் என்ற டைட்டிலைக் கொண்டு அறிமுக இயக்குநர் PV ஷங்கர் டைரக்‌ஷனில் டில்லி பாபு புரொடக்‌ஷனில் வந்துள்ள படமிது, கோவை வட்டார வழக்குடன் ஒரு மலை கிராம மக்களின் கதையை சொல்கிறது. அதாவது விலங்குகளோடு காடுகளில் வாழ்க்கையைத் தொடங்கிய மனிதன் தற்போது கான்கிரீட் காடுகளில் வாழ்ந்து வருகிறான். காடுகளில் வாழ்ந்த மனிதன் காடுகளை விட்டுவிட்டு வந்தபோதிலும் தன் சுயநலத்துக்காக இயற்கையையும், காடுகளையும் ஆக்ரமிப்பதை நிறுத்தவில்லை. இதனால் காடுகளில் தன்பாட்டுக்கு அமைதியாக வாழ்க்கையை நடத்தி வந்த விலங்குகள் தங்கள் வாழ்வின் ஆதாரங்களுக்காக மனிதன் வாழும் கான்கிரீட் காடுகளுக்குள் நுழையத்தலைப்பட்டுள்ளன. இதனால் இன்றைய காலகட்டத்தில் விலங்கு மனித மோதல்கள் பெருமளவில் நிகழ ஆரம்பித்துவிட்ட சூழலில் இரு கள்வர்களுகிடையே இக்காடு ஏர்படுத்தும் மனமாற்றத்தை சொல்ல முயன்றிருக்கிறது `கள்வன்` ப்டம்...

Advertisement

அதாவது சத்திய மங்கலம் பகுதியில் உள்ள கிராமத்தில் யானை மிதித்து சிலர் இறக்கிறார்கள், அங்கு சில திருட்டு வேலைகள் செய்யும் இளைஞனான ஜீவி, இவானாவை காதலிக்கிறார். அவரைக் கவர்வதற்காக ஓல்ட் ஏஜ் ஹோமில் இருக்கும் பெரியவர் பாரதிராஜாவை தான் பாதுக்காப்பதாகச் சொல்லி அழைத்து வந்து தன் வீட்டில் வைத்துக் கொள்கிறார் ஜி வி பிரகாஷ். அதே நேரத்தில் அக்கிராமத்தில் யானை மிதித்து பல பேர் சாக, அவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. இதை தொடர்ந்து அங்கு நடக்கும் திருப்பங்களும், சுவாரஸ்யங்களும்தான் இப்படக் கதை.

Advertisement

நவீன ஜெய்சங்கர் என்ற பெயரில் ஜிவி பிரகாஷ் வாரா வாரம் ஒரு படத்தை ரிலீஸ் செய்து கொண்டிருக்கிறார் அந்த வகையில் , இந்த வாரம் கள்வன் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இதர்கு முன்னர் வந்த படங்களில் பார்ததது போலவே, இந்த படத்திலும் வருகிறார், போகிறார். நடிப்பிலும் பெரிதாக வித்தியாசம் காட்ட வேண்டும் என்ற அக்கறையே இல்லை. இதில் கொங்கு தமிழை மட்டும் கஷ்டப்பட்டு பேசியிருக்கிறார். இவானா அழகாக இருக்கிறார் நடிப்பிலும் கொஞ்சம் மிளிர்கிறார். படத்திற்கு டானிக் தீனா பல நேரங்களில் காமெடியில் இவர் தான் படத்தை காப்பாற்றுகிறார். படத்தின் முதுகெலும்பு பாரதிராஜாதான். மொத்த படத்தையும் அவர்தான் தங்குகிறார்.ஜீவியின் வேலைக்காக அவர் அலைவதும் இவானாவிடம் கொஞ்சுவதும் என முதிர்ந்த நடிப்பை வழங்கி இருக்கிறார். அதே நேரத்தில் கிராமத்து ஆட்களுடன் சேர்ந்து லூட்டி அடிப்பதில் சிரிக்கவும் வைக்கிறார். கண்டிப்பாக படத்தின் நாயகன் பாரதிராஜா தான்

டைரக்டரே ஒளிப்பதிவும் செய்து விட்டார். கதை திரைக்கதையை விட ஒளிப்பதிவு டாப். மலை கிராமத்தை வெகு அழகாக காட்டியிருக்கிறது கேமரா. இசையில் பாடல்கள் ரொம்ப சுமார் ரகம்.

முதல் பாதி ரொம்ப சொதப்பி விட்டு இரண்டாம் பாதியில் முடிந்த அளவு சுவாரஸ்யம் சேர்த்து வழங்கி இருக்கிறார்கள்.. ஒட்டு மொத்த , திரைக்கதையில் பெரிதாக எந்த ஆச்சர்யங்களுமில்லை எல்லாத் திருப்பங்களும் குறிப்பாக கிளைமாக்ஸ் வரை தெரிந்ததாகவே இருக்கிறது.

மொத்தத்தில் சின்னபிள்ளைக்களுக்கான கதை என்று நினைத்து சின்ன பிள்ளைத்தனமான திரைக்கதையுடன் கொடுத்து ஜஸ்ட் பாஸ் மட்டும் வாங்கி இருக்கிறார்கள்

ஆனாலும் இந்த கள்வனை ஒரு முறை ரசித்து விட்டு வரலாம்

மார்க் 3/5

Tags :
Advertisement