தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

கல்கியும் காந்தாராவும் ஒன்றிணைந்த தருணம்!

12:56 PM Jun 25, 2024 IST | admin
Advertisement

'கல்கி 2898 கிபி' படமும் “காந்தாரா” படமும் இணைந்த ஒரு மகிழ்வான தருணம். காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டி 'கல்கி 2898 AD' படத்தில் பயன்படுத்தப்பட்ட, எதிர்கால வாகனமான புஜ்ஜியை ஓட்டியது, இப்போது இணையம் முழுதும் பெரும் வைரலாகி வருகிறது. 'கல்கி 2898 கிபி' x “காந்தாரா” எனும் டேக்குடன் புஜ்ஜியை தான் ஓட்டும் வீடியோவை ரிஷப் ஷெட்டி டிவிட்டரில் பகிர, ரசிகர்கள் அதனைக் கொண்டாடி பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

புஜ்ஜியை ரிஷப் ஷெட்டி ஓட்டும் வீடியோ கல்கி படத்தின் எதிரர்பார்ப்பைக் கூட்டுகிறது. ரசிகர்கள் மத்தியில் கல்கி திரைப்படம் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. முன்னதாக, ஆனந்த் மஹிந்திராவும் புஜ்ஜியை ஓட்டியது வாகனத்தின் வசீகரத்தை அதிகப்படுத்தியது.

Advertisement

'கல்கி 2898 கிபி' படத்தின் முன்னணி நடிகரான பிரபாஸுக்கு ரிஷப் ஷெட்டி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, பிரபாஸின் மீதான தனது அன்பை வெளிப்படுத்தினார். மேலும் ஜூன் 27 ஆம் தேதி திரையரங்குகளில் படத்தைப் பார்த்து ரசிக்குமாறும் அவர் ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில், வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள, கல்கி 2898 கிபி திரைப்படத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகிய நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர், இப்படம் ஜூன் 27, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Tags :
KalkiKalki 2898 ADKantaraRishabh ShettyWheel of Bujji
Advertisement
Next Article