தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

அவளும், அவளும் லவ்வும் `காதல் என்பது பொதுவுடமை`- இந்தியன் பனோரமாவுக்கு செலக்ட் ஆகி இருக்குது!

07:23 PM Oct 24, 2023 IST | admin
Advertisement

2023 ஆம்  வருட இந்தியன் பனோரமாவின் 54வது உலக திரைப்படவிழாவில் ‘காதல் என்பது பொதுவுடமை’ என்கிற தமிழ்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 20 முதல் 28 தேதி வரை கோவாவில் நடக்கும் உலகதிரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்படுகிறது. இந்திய மொழிகளில் பங்குபெற்ற 408 படங்களில் 25 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

Advertisement

“காதல் என்பது பொதுவுடமை ” இது ஒரு நவீன காதல் கதை. ஆம்.. காதல் என்பது இரண்டு பாலினம் சார்ந்தது அல்ல, அது இரண்டு இதயம் சார்ந்தது இன்றைய நவீன காலகட்டத்தில் மனிதர்களின் உணர்வுகள் , மனஓட்டங்கள், சமூக சூழல் மற்றும் விஞ்ஞானம் இவற்றுக்கு நடுவே மனிதர்களுக்குள் நவீனப்பட்டிருக்கும் காதலை வேறு ஒரு கோணத்தில் இந்த திரைப்படம் பேசுகிறது.

Advertisement

இப்படத்தை எழுதி இயக்கியவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன். இவர் ‘லென்ஸ்”, “மஸ்கிடோபிலாஷபி”, “தலைக்கூத்தல்”, ஆகிய படங்களின் இயக்குநர் ஆவார்.இந்த படத்தில் லிஜோமோல், ரோகிணி, வினீத் , கலேஷ் ராமானந்த், அனுஷா மற்றும் தீபா நடித்துள்ளனர். ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ இயக்குநர் ஜியோ பேபி வழங்க , மேன்கைன்ட் சினிமாஸ், நித்திஸ் புரொடக்ஷன் மற்றும் சிம்மட்ரி சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை ஸ்ரீசரவணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இசை – கண்ணன் நாராயணன்,
பாடல்கள்- உமாதேவி
எடிட்டிங்- டேனி சார்லஸ்
கலை- ஆறுசாமி
காஸ்டியூம் – சுபஸ்ரீ கார்த்திக் விஜய்,
சவுண்ட் டிசைன்- ராஜேஷ் சுசீந்திரன்.

தயாரிப்பு-
ஜோமோன் ஜேக்கப்,
நித்யா அற்புதராஜா,
டிஜோ அகஸ்டின்,
விஷ்ணு ராஜன்,
சஜின் s ராஜ்.

Pro – குணா.

Tags :
'Kadhal Enbadhu Podhu Udamai'Indian PanoramaInternational film festival of Indiaofficially selected
Advertisement
Next Article