For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஐடிபிஐ வங்கி கிளைகளில் இளநிலை உதவி மேலாளர், நிர்வாகி பணியிட வாய்ப்பு!

08:28 AM Dec 01, 2023 IST | admin
ஐடிபிஐ வங்கி கிளைகளில் இளநிலை உதவி மேலாளர்  நிர்வாகி பணியிட வாய்ப்பு
Advertisement

ஐடிபிஐ வங்கி லிமிடெட் அல்லது இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி மத்திய அரசின் தொழில் வளர்ச்சி வங்கியாகும். மகாராஷ்டிர மாநிலம் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கி நாட்டின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த கடன்கள் மற்றும் இதர நிதி வசதிகளை வழங்குவதற்காக 1964 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டதாகும். இந்த வங்கி இந்தியாவில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த உருவாக்கப்பட்ட வங்கியாக இருந்தாலும், இது சாதாரண வணிக வங்கிகளைப் போலவும் சீரிய முறையில் திறம்பட செயல்படுகிறது. ஐடிபிஐ வங்கி தற்போது இந்தியாவில் 1,513 கிளைகள், ஐக்கிய அரபு அமீரக நாட்டிலுள்ள துபாயில் ஒரு வெளிநாட்டுக் கிளை, சிங்கப்பூர் மற்றும் சீனாவின் பெய்ஜிங்கில் இரண்டு வெளிநாட்டு மையங்கள் உட்பட மொத்தமாக 1,013 மையங்களைப் பெற்றுள்ளது. மேலும், இந்த வங்கி 2,713 ஏடிஎம்களுடன் உலக அளவில் 10 ஆவது இடத்தில் இருக்கும் தொழில் மேம்பாட்டு வங்கியாகும். இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட, இந்திய அரசுக்குச் சொந்தமான 26 வணிக வங்கிகளுள் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கதாகும். இப்பேர்பட்ட வங்கியின் கிளைகளில் இளநிலை உதவி மேலாளர், நிர்வாகி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

பணி

Advertisement

Junior Assistant Manager

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை:

800

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

01.11.2023 அன்று 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயதுச் சலுகை உண்டு.

சம்பளம்:

ஆண்டுக்கு :ரூ 6.14 – 6.50 லட்சம்

பணி

Executives - Sales and Operations (ESO)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை:

1300

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

01.11.2023 அன்று 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயதுச் சலுகை உண்டு.

சம்பளம்:

முதல் வருடத்தில் மாதம் ரூ. 29,000 இரண்டாம் வருடத்தில் மாதம் ரூ. 31,000

தேர்வு செய்யப்படும் முறை:

அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

நிர்வாகி பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் தேர்வில் திறனறிதல் (Reasoning) – 60 வினாக்கள், கணிதம் (Quantitative Aptitude) – 40 வினாக்கள், ஆங்கிலம் (English Language) – 40 வினாக்கள், பொது அறிவு (General/ Economy/ Banking Awareness) – 60 வினாக்கள் என 200 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு தேர்வு இருக்கும். தேர்வு 2 மணி நேரத்திற்கு நடைபெறும். வினாக்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் இருக்கும். தேர்வில் தவறான வினாக்களுக்கு தலா 0.25 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பதவிகளுக்கு https://www.idbibank.in/idbi-bank-careers-current-openings.aspx அல்லது https://ibpsonline.ibps.in/idbiesonov23/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: SC / ST / PWD பிரிவினருக்கு ரூ. 200, மற்றவர்களுக்கு ரூ. 1000

விண்ணப்பிக்க கடைசி தேதி :

06.12.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய ஆந்தை வேலைவாய்ப்பு என்ற லிங்க்-கை கிளிக் செய்துப்  பார்வையிடவும்.

Tags :
Advertisement