விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே இங்கிலாந்து சிறையில் இருந்து விடுதலை!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த செய்தியாளரான அசாஞ்சே 2006ஆம் ஆண்டில் இணையதளத்தை ஆரம்பித்து, பல ரகசிய ஆவணங்களை அந்த இணையதளத்தில் வெளியிட்டு வந்தார். 2010ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான், ஈராக் தொடர்பாக வெளியிடப்பட்ட ஆவணங்களில் அமெரிக்க ராணுவத்தின் ரகசிய ஆவணங்களும் இடம்பிடித்தனஇந்நிலையில் 2010ஆம் ஆண்டு பாலியல் புகாரில் சிக்கிய அசாஞ்சேவை கைது செய்ய சுவிட்சர்லாந்து நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க 2012ஆம் ஆண்டு பிரிட்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் அசாஞ்சே தஞ்சம்புகுந்தார்.
2019ஆம் ஆண்டு அசாஞ்சேவுக்கு அளித்த ஆதரவை ஈக்வெடார் திரும்பப் பெற்ற நிலையில் அதே ஆண்டு பிரிட்டன் போலீசால் அசாஞ்சே கைது செய்யப்பட்டார். லண்டனில் 5 ஆண்டுகள் சிறையில் இருந்த அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடுகடத்த பிரிட்டன் அரசு கடந்த 2022-ல் ஒப்புதல் அளித்தது
அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டால் மரண தண்டனை விதிக்கக் கூடாது என்று அசாஞ்ச்சே தரப்பு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்ள அசாஞ்சே சம்மதம் தெரிவித்த நிலையில் பிரிட்டன் சிறையில் இருந்து விடுதலையாகியுள்ளார்.
சொந்த நாடான ஆஸ்திரேலியா செல்லும் அவர், விரைவில் அமெரிக்காவின் மரியானா தீவுகளில் நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றங்களை ஒப்புக்கொள்ள இருக்கிறார்.