For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

‘ஜோஷ்வா இமைபோல் காக்க ‘- விமர்சனம்!

01:22 PM Mar 01, 2024 IST | admin
‘ஜோஷ்வா இமைபோல் காக்க ‘  விமர்சனம்
Advertisement

கோலிவுட் ரசிகர்கள் எத்தனையோ காதல் கதைகளை கண்டு ரசித்திருக்கிறார்கள். மொழி தாண்டி மற்ற மாநில காதல்களையும் திரைப்படங்கள் வாயிலாக கண்டு வருகிறார்கள். அவற்றில் சில வகையான காதல்களும், காதல் காட்சிகளும் மட்டுமே மனதுக்கு நெருக்கமான ஒன்றாக அமையும். அதைக் கவனத்தில் கொண்டு தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக காதல் காட்சிகளை வைத்து, அதனை ரசிகர்கள் தங்கள் வாழ்வில் பொருந்தி பார்க்கும் அளவுக்கு கவிதைகளாக மாற்றி ரசிகர்களின் மனதில் குடிபெயர்பவர் டைரக்டர் கெளதம் மேனன்.. அதிலும் ஸ்டைலிஷான  இங்கிலீஷ் பேசிக் கொண்டு பைக் அல்லது ட்ரெயினில் லவ்வர்ஸை வைத்து  ஸ்கோர் செய்து விடுவார். அப்பேர்பட்டவரிடம் பெரிதாக ஆக்ஷ்ன் காட்சியை எதிர்பார்க்கமாட்டார்கள், .வித்தியாசமான காதலைத்தான் எதிர்பார்ப்பார்கள். ஆனால் ஜோஷ்வா படமோ 10% காதல், 90% ஆக்ஷன்.ஒன்றிரண்டு சீன் காதல் காட்சி வந்தால் மற்ற பத்து காட்சிகள் ஆகஷன் என்றுதான் படம் நகர்கிறது. ஆனாலும் சிம்பிளான் கொஞ்சம் பழைய கரு ஒன்றை எடுத்துக் கொண்டு சர்வதேச அளவிலான ஆக்‌ஷன் படமொன்றை கொடுத்திருக்கும் இந்த ஜோஷ்வா டீம் கிட்டத்தட்ட, இரண்டரை மணி நேரம் அடி தடி , டிஷ்ஷூம், டுமீல் என்று ஆக்ஷன் மூவி ஒன்றை ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு கொடுத்து ரசிக்க வைக்கிறார்கள்.

Advertisement

கதை என்னவென்றால் லண்டன்வாசி ஹீரோ வருணும், அமெரிக்காவாசி நாயகி ராஹேவும் சென்னையில் சந்தித்து கேஷூவலாக பழக ஆரம்பித்து காதலும் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். அச்சூழலில் காதலியிடம் தான் யார்? என்ற உண்மையை வருண் சொல்லும் போது, நாயகி ஷாக் ஆகி அவரை விட்டு பிரிந்து சென்றுவிடுகிறார். இதற்கிடையே பிரிந்து சென்ற காதலியின் உயிருக்கு சர்வதேச குற்றவாளியின் மூலம் ஆபத்து வருகிறது. அந்த  உயிரை காப்பாற்றுவதற்காக களத்தில் இறங்கும் வருண், தனது காதலியோடு மீண்டும் சேர்ந்தாரா?  அவரது காதலியை எதற்காக கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்?, வருண் பற்றிய உண்மை என்ன? போன்ற கேள்விகளுக்கான விடை சொல்வது தான் ‘ஜோஷ்வா : இமை போல் காக்க’.

Advertisement

சில படங்களில் சின்ன்ச் சின்ன கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருந்த வருண் இப்படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்து அசத்தியிருக்கிறார். கதாபாத்திரம் சர்வதேச அளவில் பயிற்சி பெற்ற ஒரு திறமையான கூலிப்படை கொலைகாரன் என்பதால் அதற்கு ஏற்ப தனது ஸ்டண்ட் திறமைகளை வெளிநாட்டில் பயிற்சி பெற்று வருண் கற்றுக் கொண்டிருப்பதால் சண்டைக் காட்சிகளில் வியக்க வைக்கிறார். ஒவ்வொரு சண்டைக்காட்சிகளும் ஓவ்வொரு ரகத்தில் சவால் நிறைந்ததாக இருந்தாலும், அதை சிறப்பாக கையாண்டிருக்கும் வருண், சண்டைக்காட்சிகளுகே உயிர் கொடுத்திருக்கிறார். சண்டைக்காட்சிகளுக்கு நடுநடுவே வரும் காதல் காட்சிகளிலும் தனது திறமையை நிரூபித்திருக்கும் வருண், ஒரு அறிமுக ஹீரோ என்கிற நினைவு நமக்கு வராமல் மிரட்டி இருப்பவருக்கு திரையுலகில் சிறப்பான எதிர்காலம் உள்ளது..

நாயகியாக நடித்திருக்கும் ராஹே, பல அழுத்தமான காட்சிகளில் சிறப்பாக நடித்து பாராட்டு பெறுகிறார். காதல், அச்சம் ஆகிய உணர்வுகளை தனது கண்களின் மூலமாகவே வெளிப்படுத்தி கவனம் ஈர்ப்பவருக்கு இது தான் முதல் படம் என்றால் நம்ப முடியவில்லை. அவரிடம் இருந்தும் அற்புதமான நடிப்பாற்றலை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் கௌதம். பக்கா லோக்கல் ரவுடியாக திடீர் எண்ட்ரி கொடுக்கும் கிருஷ்ணாவின் கேரக்டர் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. அவரும் கிடைத்த ரோலை சிறப்பாக செய்திருக்கிறார்.

கூலிப்படையை கட்டுப்படுத்தும் கேரக்டரில் வருவது டிடி வருகிறார். ஆரம்பத்தில் ஆச்சரியமளித்தாலும், அதன் பிறகு வரும் காட்சிகளில் கச்சிதமாக பொருந்தி பாஸ் பண்ணி விடுகிறார்.நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் கிட்டி, இறுதிக்காட்சியில் வந்தாலும், தனது அனுபவம் வாய்ந்த நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்துவிடுகிறார். மன்சூர் அலிகான், விசித்ரா ஆகியோர் ஒரு காட்சியில் மட்டுமே வருகிறார்கள்.

கேமராமேன் SR கதிரின் ஒளிப்பதிவு படத்தை ஹாலிவுட் தரத்திற்கு கொண்டு செல்கிறது. காட்சியின் பிரமாண்டத்தில் ஆர்ட் டைரக்டர் குமார் ஞானப்பன் தெரிகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இல்லாத குறையை இசையமைப்பாளர் கார்த்திக் தீர்த்து வைத்திருக்கிறார். ஒவ்வொரு பாடலும் அரங்கில் சரவுண்டிங் சவுண்டில் காதில் விழும் போது போது கைகளும் கால்களும் அனிச்சையாக தாளமிடுகின்றன. பின்னணி இசை கூடுதல் பலம்.

ஆனாலும் திரைக்கதையில் போதிய கவனம் காட்டாத நிலையிலும் , படம் முழுவதையும் அதிரடியாக்கி போரடிக்காமல் பார்க்க வைத்து விட்ட இயக்குநர் இறுதிக் காட்சியில் கூட ரசிகர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்து ட்விஸ்டுக்கு கொடுத்து மிரட்டி விடுவதில் ஜெயித்து விட்டார்.

மொத்தத்தில் இந்த ஜோஷ்வா - அழகியல் ஆக்‌ஷன் மூவி

மார்க் 3.5/5

Tags :
Advertisement