For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

’ஜோ’ -பட விமர்சனம்!

09:11 PM Nov 23, 2023 IST | admin
’ஜோ’  பட விமர்சனம்
Advertisement

பிறருக்காக இரக்கப்படும் சுபாவம், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை மனிதர்களுக்கு அமைவது மாபெரும் வரம். பிறரின் கனவுகளை அடைய நாம் உதவினால், நம் இலக்கை நாம் எளிதாக அடைந்துவிட முடியும் என்பது இயற்கை விதி. ஏதோ ஒரு வழியில் அதற்கான உதவி நமக்குக் கிடைத்தே தீரும். நம்மால் பிறருக்கு புது வாழ்க்கை அமையலாம், செல்வம் சேரலாம், தைரியம் தரலாம், புது நம்பிக்கையளிக்கலாம். இவையெல்லாம் இரக்கத்தின் மூலமாகத்தான் சாத்தியமாகும் என்ற நம்பிக்கையை படத்தின் கருவாக தந்து. நம் வாழ்க்கையில் ஒரு தோல்வி வந்தால் அது நல்லதுக்கே என்ற மெசேஜை நம்பிக்கையூட்டும் விதத்தில் கொடுத்து ரசிகர்களின்.மனங்களை வெல்ல முயன்றிருக்கிறார்..!

Advertisement

அதாவது இன்ஜினியரிங் காலேஜில் படிக்கிறார் நாயகன் ரியோ ராஜ் .அதே காலேஜில் நாயகி மாளவிகா மனோஜும் சேர வழக்கம் போல் கண்டதும் காதல் ஏற்பட்டு. சினிமா வழக்கப்படி துரத்தி துரத்தி லவ்வுகிறார் . ஒரு சூழலில் இருவருக்கும் காதல் மலர்ந்து தீவிரமாக காதலிக்க தொடங்கி விடுகின்றனர். காலேஜ் லைஃப் நான்கு வருடங்கள் முடிந்து விடுகிறது. இருவரும் அவரவர் ஊர்களுக்கு போன இடத்தில் இவர்கள் காதல் இரு வீட்டாருக்கும் தெரிய வர கேரள பெண்ணான மாளவிகா வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதையடுத்து நாயகி மாளவிகா தற்கொலை செய்து கொள்கிறார். இதன்பிறகு என்ன? ஹீரோ ரியோ ராஜ்- திக்கு, திசை தெரியாமல் பாட்டிலும் கையுமாக திரிந்து கொண்டிருக்கிறார். இப்படியே போனால் தன் மகன் வாழ்க்கை வீணாகிவிடும் என்று எண்ணிய ரியோ பெற்றோர் அவருக்கு இன்னொரு நாயகி பவ்யாவை போராடி திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு இருவருக்குள்ளும் முட்டல் மோதலாகவே இருக்கிறது. ரியோவுக்கோ காதல் தோல்வியில் இருந்து மீள முடியாத சோகம். இன்னொரு நாயகி பவ்யாவுக்கோ அவரது இளம் வயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவம். இதனால் இருவருக்குள்ளும் விரிசல் ஏற்படுகிறது. இதையடுத்து இந்த விரிசலையும், தன் வாழ்வில் நடந்த துயரத்தையும் சரி செய்ய ரியோ களம் இறங்குகிறார். அந்த துயரமென்ன?எடுத்த முயற்சியில் ரியோ வெற்றி பெற்றாரா, இல்லையா? என்பதே ஜியோ படத்தின் கதை.

ஹீரோ ரியோ ராஜ் காலேஞ் ஸ்டூடண்டாக வருகிறார். அதற்குத் தேவையான இளமை முகம் மிஸ் ஆகி மெச்சூர்ட் ஆக இருந்தாலும் காதல். உணர்வுகளை வெளிப்படுத்துவதில் துள்ளல் காட்டுகிறார். அதே சமயம் காதல் தோல்வியால் தன் சோகத்தை வெளிப்படுத்த பெரிய தாடி, முடி என்று கதாபாத்திரத்திற்காக அதிகம் மெனக்கெட்டிருக்கிறார். இரண்டு கெட்டப்புகளிலும் இயல்பாக நடித்திருப்பவர், காதல் மற்றும் சோகம் இரண்டிலுமே அடக்கி வாசித்திருப்பது திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது. ஆனால் குடிக்கு அடிமை சீன்கள் ரசிக்க வைக்கவில்லை.

Advertisement

கோலிவுட்டுக்கு புதுமுகமாக வந்து நாயகனுக்கு சரிசம போட்டியாளராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகை மாளவிகா மனோஜ். தன் ரோலான கேரள நாயகிக்கான சரியான தேர்வாக மாளவிகா அமைந்திருக்கிறார். இவரது தெளிவான நடிப்பும் அழகான வசன உச்சரிப்பும், நேர்த்தியான முக பாவனைகளும் இவரது கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது. குறிப்பாக இவரது கதாபாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்து படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது. இன்னொரு நாயகி பவ்யாவும் அவருக்கு கொடுத்த கேரக்டரின் வலுவை உள்வாங்கி புரிந்து சிறப்பாக செய்திருக்கிறார். கிளைமாக்ஸில் இவரது ரோல் கொடுக்கும் ட்விஸ்ட் மிகப்பெரிய பிளஸ் .!

ஹீரோ ரியோ ராஜ் நண்பர்கள் கேரக்டரில் வரும் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கின்றனர். ரியோவின் நெருங்கிய நண்பராக வரும் அன்பு தாசனை காட்டிலும் இன்னொரு நண்பராக வரும் நடிகர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெறுகிறார். சில காட்சிகளே வந்தாலும் அனுபவமான நடிப்பில் நெகிழ செய்துள்ளார் மூத்த நடிகர் சார்லி. இவரது கதாபாத்திரம் பிற்பகுதி கதைக்கு நன்றாக ஒத்துழைப்பு கொடுத்துள்ளது. மற்றபடி முக்கிய கதாபாத்திரத்தில் வரும் அனைவருமே அவரவர் வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

மியூசிக் டைரக்டர் சித்து குமார் பேச்சிலர் படத்திற்கு பிறகு இந்த படத்தில் நிறைவான இசையை கொடுத்து பாஸ் வாங்கி விட்டார். இந்தப் படத்தின் இன்னொரு நாயகனாக இசை என்ற ஃபீலிங்கை ஏற்படுத்தி விட்டார். நாயகன் நாயகி சம்பந்தப்பட்ட டூயட் பாடல் காட்சி சிறப்பாக அமைந்திருக்கிறது. அதேபோல் பின்னணி இசையையும் பல இடங்களில் சிறப்பு. கேமராமேன் ராகுல் கே.ஜி.விக்னேஷ் காட்சிகளை நேர்த்தியாக படமாக்கியிருப்பதோடு, கதையில் இருக்கும் மென்மையை காட்சிகளிலும் கொண்டு வந்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

மேலோட்டமாக பார்க்கும் அல்லது கேட்கும் போதே நாம் ஏற்கனவே பார்த்து பழகி, அதேபோல் நமது அனைவரின் வாழ்விலும் கண்டிப்பாக ஏதோ ஒரு வடிவில் நடந்த ஒரு காதல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட காலேஜ் காதல் வாழ்க்கையை. ஆரம்பத்தில் சற்று கலகலப்பாக ஆரம்பித்து போகப் போக காதல் ரசம் சொட்ட சொட்ட நெகிழ செய்து முதல் பாதி நம்மை இதயத்தைக் கனமாக்கியப்டி இன்டர்வல் காட்சி விடுகிறார்கள். அதை அடுத்து புதிய தொடக்கம் நிறைந்த காட்சிகளோடு ஆரம்பிக்கும் படம் போகப் போக மிகவும் பாசிட்டிட் ட்ராக்கில் போய் முடிவில் யாரும் எதிர்பாராத திருப்பத்தோடு ஒரு நிறைவான ஃபீல் குட் படமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக யாரும் எதிர்பாராத வகையில் அமைந்திருக்கும் கிளைமாக்ஸ் காட்சி இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம்.

அதே சமயம் கொஞ்சம் மெச்சூரிட்டியான ஹீரோவால் கொஞ்சம் ஒட்டாத இப்படம் ரசிகர்களின் சொந்த நினைவுகளை தட்டி எழுப்புவதை செய்ய தவறி விட்டது . படமென்னவோ காலேஜ் லைஃப் என்றாலும் அந்த எவர் கிரீன் ஃபீல் இல்லை. அதே போல் காதல் காட்சிகளில் இடம்பெறும் வசனங்கள் அதர பழசாக இருப்பதோடு, காதல் தோல்வியால் சூசைட் செய்த வலியை அழுத்தமாக சொல்லாமல், அடுத்த நாயகிக்கு நகர்ந்து செல்வதும் கொஞ்சம் ஒட்டவில்லை என்றாலும் எல்லாம் நன்மைக்கே என்ற மெசெஜை கொடுக்க முயன்றதில் தப்பித்து விட்டார் டைரக்டர்

மொத்தத்தில்  இந்த ஜோ - பாஸ் மார்க் வாங்கி விடுகிறான்

மார்க் 3/5

Tags :
Advertisement