இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு!
இந்திய கடலோர காவல்படை என்பது இந்திய ஆயுதப் படையின் துணைப்பிரிவாகும். இந்தியாவின் கடல் வளங்களைப் பாதுகாக்கும் பொருட்டு இது உருவாக்கப்பட்டது. இது துணை இராணுவப்பிரிவுகளை ஒத்ததாகும். ஆனால் அவற்றைப்போல் அல்லாமல் கடலோரக் காவல்படை பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயற்படும் அமைப்பாகும். இந்த கடலோர காவல்படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி விபரம்
நேவிக் பிரிவில் 260 (மண்டலம் வாரியாக வடக்கு 77, மேற்கு 66, வடகிழக்கு 68, கிழக்கு 34, வடமேற்கு 12, அந்தமான் நிகோபர் 3), யான்ட்ரிக்பிரிவில் 60 (மெக்கானிக்கல் 33, எலக்ட்ரிக்கல் 18, யான்ட்ரிக் 9) என மொத்தம் 320 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
நேவிக் பிரிவுக்கு பிளஸ் 2, யான்ட்ரிக் பிரிவுக்கு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது:
18 - 22 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை:
எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்:
ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்:
3.7.2024
விவரங்களுக்கு: