For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஜெர்மனியில் பணிபுரிய செவிலியர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.2 லட்சத்தில் வேலைவாய்ப்பு!

09:59 PM Mar 04, 2025 IST | admin
ஜெர்மனியில் பணிபுரிய செவிலியர்களுக்கு மாதச் சம்பளம் ரூ 2 லட்சத்தில் வேலைவாய்ப்பு
Advertisement

ஜெர்மனி நாட்டில் பணிபுரிய செவிலியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு, விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்று அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஜெர்மன் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு 6 மாதம் பணி அனுபவம் பெற்ற 35 வயதிற்கு உட்பட்ட, டிப்ளமோ மற்றும் பட்டதாரி ஆண் பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கு பி1, பி2 நிலையில் இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்றுவித்து மாதச் சம்பளமாக சுமார் 2 லட்சம் வழங்கப்படும்.

Advertisement

எனவே, தகுதியுள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளைநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் omclgerman2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15–ந் தேதிக்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் ஊதியம் மற்றும் பணிவிவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளமான www.omcmanpower.tn.gov.in மற்றும் 044- 22505886/ 63791 79200 என்ற தொலைபேசி எண்களின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :
Advertisement