இஸ்ரோவில் ஐ.டி.ஐ.,முடித்தவர்களுக்கு பணி வாய்ப்பு!
இந்திய விண்வெளி ஆய்வு மையம், 'இஸ்ரோ'வில், 30 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பணி விபரம்
* வெல்டர் - 1 ,
* பிட்டர்- 5 ,
* மெக்கானிக்கல்- 10 ,
* டெக்னிக்கல் அசிஸ்டன்ட் -1,
* எலக்ட்ரிக்கல்- 1 ,
* டர்னர்- 1,
* மெஷினிஸ்ட்- 1 ,
* கனரக வாகன டிரைவர்- 5 ,
* சமையலர் - 1,
* இலகு ரக வாகன டிரைவர்- 2 ,
* எலக்ட்ரானிக் மெக்கானிக் - 2,
பணியிடம் எங்கே?
திருவனந்தபுரம் இஸ்ரோ எல்.பி.எஸ்.சி., மையம்
கல்வித் தகுதி என்ன?
* பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் ஐ.டி.ஐ., பிரிவில் தொழில் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
* சமையலர் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் ஐந்தாண்டுகள் முன் னுபவம் இருக்க வேண்டும்.
* கனரக வாகன ஓட்டுனருக்கு ஹெவி லைசன்ஸ் உடன் ஐந்து ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
* இலகுரக டிரைவர் பணிக்கு எல்.எம்.வி லைசன்ஸ் அவசியம். 3 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்களுக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
https://www.isro.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
* டெக்னிஷியன் பணியிடங்களுக்கு ரூ.750, தேர்வு எழுதிய பிறகு ரூ.500 ரிபண்ட் செய்யப்படும்.
* எஸ்.சி/எஸ்.டி, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு முழு கட்டணமும் திருப்பி தரப்படும். டெக்னிக்கல் அல்லாத பிற பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ 500. ரூ. 400 திருப்பி தரப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
வரும் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 10. மேலும் விவரங்களுக்கு https://www.isro.gov.in/LPSCRecruitment11.html என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.