தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் விமர்சனம்!

06:05 PM Nov 10, 2023 IST | admin
Advertisement

2014-ம் வருஷம் ரிலீஸான படம் ஜிகர்தண்டா. சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் நடிப்பில் வெளிவந்த அப்படம் ஹிட் ஆனதோடு, நேஷனல் அவார்ட் எல்லாம் வாங்கி அசத்தியது. இந்த நிலையில், தற்போது 9 ஆண்டுகளுக்கு பின்னர் அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்கிற பெயரில் எடுத்து கவர முயன்றிருக்கிறார் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ். அதாவது 1970களில் சினிமா பெரும் மாறுதலைச் சந்தித்துக் கொண்டிருந்தது.எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோர் படங்களில் நடிப்பது குறைய ஆரம்பித்திருந்தது. ரஜினிகாந்த் நடித்த அபூர்வ ராகங்கள் 1975 ஆகஸ்ட் மாதம்தான் வெளியானது. கமல் அப்போதுதான் ஹீரோவாக வந்துகொண்டிருக்கிறார். பாரதிராஜாவும் இளையராஜாவும் 1976க்குப் பிறகுதான் நிலை பெறுகிறார்கள். அச்சூழலில் கோலிவுட்டில் ஒரு பெரிய வெற்றிடம் இருந்தக் காலகட்டத்தில் நடந்தது போலான கதையே இந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் . முதல் ஜிகர்தண்டா போலவே இதிலும் ஒரு ரவுடி & சினிமா டைரக்டர் என்ற கான்செப்ட்தான் என்றாலும் இந்த டபுள் எக்ஸ்-சில் மலை வாழ் மக்களைப் பாடாய்படுத்தி, அங்குள்ள வளங்களை சுரண்ட முயலும் அரசாங்கத்தின் போக்கைச் சுட்டிக் காட்டி இருப்பதாலேயே தனிக் கவனம் பெற்று விடுகிறது.

Advertisement

அதாவது வழக்கம் போல் மதுரை.அங்கு ஃபேமஸான ஜிகர்தண்டா க்ளப்பின் தலைவன் மற்றும் தென் மாவட்டங்களை தன் விரல் அசைவில் வைத்திருக்கும் தாதா ‘அல்லியன் சீசர்’ ரோலில் ராகவா லாரன்ஸ். இன்னொரு பக்கம் போலீஸ் ஆபிசராக ஆசைப்பட்ட எஸ்.ஜே. சூர்யா சந்தர்ப்ப வசத்தால் கொலையாளி முத்திரைக் குத்தப்பட்டு ஜெயிலுக்கு போனவரிடம் மேற்படி தாதா அல்லியன் சீசரை நிஜமாலுமே கொன்றால் சிறையிலிருந்து விடுதலையாவதுடன், அவர் ஆசைப்பட்ட போலீஸ் வேலையும் தரப்படும் என ஆஃபர் வருகிறது. ஏகப்பட்ட யோசனைக்கு பின்னர் ஆஃபரை ஒப்புக் கொண்டவர் ராகவா லாரன்ஸை நெருங்கும் வழியை அலசும் போது பெரும் செல்வந்தரான அவர் சொந்த காசில் தமிழ் சினிமாவில் முதல் கருப்பு ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்றும் இதற்காக நல்ல இயக்குநரைத் தேடிக் கொண்டிருக்கிறார் என்றும் தெரிய வர அசால்டாக டைரக்டர் அவதாரம் எடுத்து 'உங்க லைஃப்ஹிஸ்டரியையே காட்ஃபாதர் ஸ்டைலில் உலக சினிமா ஆக்கிபுடலாம்' என்று பேசி கமிட் ஆகிறார்.ஆனால் நெருங்கி பழகும் போதுதான் ராகவா லாரன்ஸ் சினிமா ஆசைக்கான காரணமும் அவரின் நிஜ பின்னணியும் தெரிந்த நிலையில் நெகிழ்ந்து விடுகிரார் சூர்யா இந்த இஅரண்டாம் பாக முடிவில் .சூர்யா எடுத்த காரியம் நிறைவடைந்ததா, லாரன்ஸ் சுதாரித்தாரா, இவர்களை வைத்து அரசியல் செய்தவர்கள் என்ன ஆனார்கள் என்பதை 2 மணி நேரம் 50 நிமிடங்களுக்கான கதையாக சொல்லி இருக்கிறார்கள்..

கோடம்பாக்கத்தின் `முதல் கருப்பு ஹீரோ’ என்ற அடைமொழியுடன் ரஜினியை நினைவூட்டும் கேரக்டரில் லாரன்ஸ் பக்கா பொருத்தம். பந்தா லுக்குடன் , உடல்மொழியையும் சரியாக வெளிப்படுத்தி இருக்கும் ராகவா லாரன்ஸ் அடடே சொல்ல வைத்து விடுகிறார்.. அலியஸ் சீசராக பார்வையால் மிரட்டும் ரவுடி, ஈகோ தலை தூக்கி ஹீரோவாக ஆசைப்பட்டு அடுத்தடுத்து அதகளம் என முதல் பாதியிலே முழு மார்க் வாங்கி விடுகிறார். அடிசினல் ஹீரோவாக வரும் எஸ்.ஜே.சூர்யா. வழக்கம்போல் சந்தர்ப்ப வசத்தால் கொலையாளிவதும் ஒரு கட்டத்தில் சத்யஜித்ரே ஸ்டூடண்டாவதும் , ரத்தத்தை பார்த்து நடுங்கிக்கொண்டே ஷார்ப்பான பார்வையுடன், மிடுக்கான தோற்றத்துடன் ரவுடி சீசரை நம்ப வைப்பது என ஸ்கீரினில் அடுத்தடுத்து சிக்ஸர் அடித்து கரவொலி எழுப்ப வைத்து விடுகிறார். அதிலும் சமீப காலமாக ஓவர் ஆக்டிங் செய்வோரைக் கிண்டலடிக்க பயன்பட்ட சூர்யா இப்படத்தில் டைரக்டரின் ரிமோட்டுக்கு ஆக்ட் கொடுத்து அப்ளாஸ் வாங்குகிறார்

Advertisement

முரட்டு போலீஸ் கேரக்டரில் வரும் நவீன் சந்திரா ஈவு இரக்கம் பார்க்காத கொடூர வில்லனாக அறிமுகமாகி கவனிக்க வைக்கிறார். இவர்கள் தவிர நாயகி நிமிஷா சஜயன், சத்யன், ஷைனி சாக்கோ, இளவரசு என தங்களது பாத்திரங்களை அனைவரும் கனக்கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

மூன்றாவது ஹீரோ லெவலில் இந்திய அளவில் பிரபல இயக்குநரான ஏ.ஆர். முருகதாஸின் ஆஸ்தான கலை இயக்குநர்களில் ஒருவராக இருந்து மறைந்து விட்ட டி.சந்தானம் & டீம். பங்களிப்புக்கு தனி ஒரு விருதே கொடுக்கலாம்.1970-களில் நடக்கும் கதை என்பதால் ஓவர்டைம் உழைத்து அந்த காலகட்டத்தை அப்படியே கண்முன் கொண்டு வர மெனக்கெட்டிருக்கிறார்கள். இவருக்கு இணையாக கேமராமேன் திருநாவுக்கரசு. மலைவாழ் மக்களின் வாழ்விடம், யானைகள் சுற்றித் திரியும் வனம், அன்றைய கலர்ஃபுல் மதுரை, வின்டேஜ் தியேட்டர் எனக் காட்சிகள் பல்வேறு இடங்களுக்கு மாறினாலும் அந்த அந்த இடங்களுக்கான கதை என்பதற்கேற்ப கலர் டோனும் ரெட்ரோ ஸ்டைல் மேக்கிங்கும் கண்களை உறுத்தாமல் கொடுத்து அசத்தி இருக்கிறார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் முதல் பாகத்தில் வந்த தீம் மியூசிக்கை இதிலும் பொருத்தமாகப் போட்டு அதகளம் செய்து அசர வைத்து விட்டார்.ஆனால் பாடல்கள் ஏனோ எடுபடவில்லை.

தான் உருவாக்கிய கதையின் இரண்டாம் பாகத்தை செதுக்க இம்புட்டு வருஷங்கள் எடுத்தவர் ஒரு பவர்ஃபுல் தாதாவை ஹீரோ என்று நம்ப வைக்க ஒரு கேமிராவை வைத்து ஷூட் செய்வதை எல்லாம் நம்ப மாட்டார்கள் என்று சொல்ல ஒரு அசிஸ்டெண்ட் கூட இல்லாமல் போனது மட்டுமே சோகம்.. அடுத்து எடுக்கப் போகும் ட்ரிபிள் எக்ஸ்-சிலாவது இன்னும் கொஞ்சம் ஷார்ப்பான் எடிட்டருடன் வாருங்கள்.பார்ப்போம்

மொத்தத்தில் இந்த டபுள் எக்ஸ் பாஸ் மார்க்-தான்

மார்க் 3.5/5

Tags :
jigarthanda 2Jigarthanda 2 ReviewJigarthanda Double X ReviewJigarthanda DoubleXRaghava LawrenceS J SuryahSJ Surya
Advertisement
Next Article