For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பாஜகவுக்கு ஓட்டு போடும் மாட்டுமூத்திர மாநிலங்கள் (கோமூத்ரா) என சொன்னது தப்புதாப்பு!

09:27 PM Dec 06, 2023 IST | admin
பாஜகவுக்கு ஓட்டு போடும் மாட்டுமூத்திர மாநிலங்கள்  கோமூத்ரா  என சொன்னது தப்புதாப்பு
Advertisement

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் நேற்று பேசிய திமுக எம்.பி செந்தில் குமார், “இந்தி பேசும் மாநிலங்களை நாங்கள் பொதுவாக கோ மூத்திர மாநிலங்கள் என்று அழைப்போம். அங்கு நடக்கும் தேர்தல்களில் பாஜகவுக்கு மட்டுமே வெற்றி கிடைக்கிறது” என பேசினார். தருமபுரி எம்.பி செந்தில் குமாரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த வட இந்திய தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். செந்தில் குமாரின் பேச்சு குறித்து பதில் அளித்துள்ள காங்கிரஸ் மக்களவை கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “கோமூத்திர மாநிலங்கள் என அவர் மக்களவையில் பேசியதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது அவர் சொந்த கருத்து, நாங்கள் கோமூத்ராவை மதிக்கிறோம்” என கூறி இருந்தார். காங்கிரஸ் எம்.பி. ராஜிவ் சுக்லா கூறுகையில், “திமுகவின் அரசியல் வேறு, காங்கிரஸ் அரசியல் வேறு. கா கோமூத்ரா மீதும் சனாதன தர்மம் மீதும் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை உண்டு. அனைத்து மதத்தினரையும் இணைத்து முன்னேற்றுவோம்” என கூறி உள்ளார்.இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சிவகங்கை காங்கிரஸ் எம்.பி, கார்த்தி சிதம்பரம், “இது மிகவும் அவமரியாதையான வார்த்தை. அவர், உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும். அவர் தாம் பேசிய கருத்துகளை திரும்ப பெற வேண்டும்” என கூறி இருந்தார். இதை அடுத்து தான் பேசியதை திரும்ப பெறுவதாக அறிவித்தார்.

Advertisement

Advertisement

அண்மையில் தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல்கள் நடந்து முடிந்தது. தொடர்ந்து தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி இருந்தது. இதனையடுத்து, மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3ஆம் தேதி நடைபெற்றது. அதில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதே போல், மிசோரமில் ஸோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

இச்சூழலில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரானது வருகிற டிசம்பர் 22ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த விவாதத்தில் ஆளும் பா.ஜ.க எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் காரசாரமாக விவாதித்து வருகின்றனர். இதனையடுத்து, நேற்று (05-12-23) இரண்டாவது நாள் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது.

இதில் மக்களவையில் பேசிய தி.மு.க எம்.பி. செந்தில் குமார், “இந்தி பிரதானமாக பேசப்படும் மாநிலங்களில் தான் பா.ஜ.க பலமாக உள்ளது. இந்த மாநிலங்களை நாங்கள் பொதுவான கெள்மூத்ரா என்று தான் சொல்வோம். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க.வால் ஆட்சியை கைப்பற்ற முடியாது” என்று பேசினார். திமுக எம்.பி. செந்தில் குமார், பா.ஜ.க வென்ற மாநிலங்களைக் குறிப்பிட்டு பேசிய போது பயன்படுத்திய வார்த்தை பெரும் சர்ச்சையை கிளப்பியது. அவரின் பேச்சை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டித்ததாக திமுக தலைமை தெரிவித்து இருந்தது. இதனிடையே தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக செந்தில் குமார் எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

மேலும் மக்களவையில் தனது பேச்சை திரும்ப பெறுவதாக செந்தில் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “இந்த அவையின் உறுப்பினர்கள் மற்றும் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நேற்று நான் பேசிய பேச்சை திரும்ப பெற்றுக்கொள்கிறேன். எனது பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்” என்றார்.

Tags :
Advertisement