தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

வயநாடு நிலச்சரிவின் இஸ்ரோ புகைப்படங்கள்!

09:08 PM Aug 01, 2024 IST | admin
Advertisement

கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் மேப்பாடி பகுதியைச் சுற்றியுள்ள முண்டக்கை, சூரல்மலா, அட்டமலா, நூல்புழா உள்ளிட்ட கிராமங்களில் செவ்வாய்க்கிழமை அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் அப்பகுதிகள் உருக்குலைந்து போயுள்ளது. இரண்டு நாட்களாக மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 290-ஐ எட்டியுள்ளது. மாயமானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Advertisement

அதே சமயம் மோசமான வானிலைக்கு இடையே 3-வது நாளாக ராணுவம், கடற்படை, விமானப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, காவல் துறையினர், தீயணைப்புப் படையினர் உள்ளிட்ட பல்வேறு முகமைகள் முழுவீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர், 1,500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் (என்ஆர்எஸ்சி) கேரளாவில் ஏற்பட்ட பேரழிவை செயற்கைக்கோள்களால் எடுக்கப்பட்ட உயர் தெளிவுத்திறன் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.இது கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் ஏற்பட்ட விரிவான சேதத்தை வெளிப்படுத்துகிறது. நிலச்சரிவுக்கு முன்னும் பின்னும் இருக்கும் புகைப்படங்கள் சுமார் 86,000 சதுர மீட்டர் நிலம் வழுக்கி, இருவாய்ப்புழா ஆற்றின் குறுக்கே சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு பாய்வதைக் காட்டுகின்றன.இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) ஹைதராபாத்தில் உள்ள தேசிய தொலை உணர்வு மையம் அதன் கார்டோசாட்-3 ஆப்டிகல் செயற்கைக்கோளையும், மேக மூடு வழியாக பார்க்கும் திறன் கொண்ட RISAT செயற்கைக்கோளையும் பயன்படுத்தி இந்த புகைப்படங்களை துல்லியமாக எடுத்துள்ளது.

அதன்படி, ஏறக்குறைய 86,000 சதுர மீட்டர் நிலம் சரிந்தது, இது ராஷ்டிரபதி பவனின் அளவை விட சுமார் ஐந்து மடங்கு அதிகம். நிலம் நீருடன் ஆற்றின் குறுக்கே கிட்டத்தட்ட 8 கிலோமீட்டர் கீழே ஓடியது, இதனால் கீழே இருந்த மூன்று கிராமங்கள் பெரும் அழிவை சந்தித்துள்ளது என தெரிகிறது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இந்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் அதே இடத்தில் பழைய நிலச்சரிவு ஏற்பட்டதற்கான ஆதாரத்தையும் இருப்பதையும் காட்டுகிறது.

...

Tags :
IsrolandslidePhotosWayanadஇஸ்ரோநிலச்சரிவுவயநாடு
Advertisement
Next Article