தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

“காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி 500க்கும் அதிகமானோர் பலியாகக் காரண இஸ்ரேல் தான்” - ஐ.நா.வுக்கான பாலஸ்தீன தூதர் தகவல்

01:41 PM Oct 18, 2023 IST | admin
Advertisement

காசா - இஸ்ரேல் மோதல், தற்போது 12வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதலில் குறைந்தது 500 பேர் உயிரிழந்துவிட்டதாக காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த வான் தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என காசா குற்றம் சாட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இஸ்லாமிய ஜிகாத் அமைப்பே இதற்குக் காரணம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டியுள்ளார்.அதே சமயம் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து துனிசியா நாட்டின் தலைநகரின் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள அமெரிக்க மற்றும் பிரான்ஸ் தூதரக அதிகாரிகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமீட்டனர்.அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து காசாவின் மேற்கு கரை பகுதியில் நள்ளிரவில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி விரட்டி அடித்ததால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது.

Advertisement

இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வருகை தர உள்ள நிலையில், இந்த தாக்குதல் காசா பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு அரபு நாடுகளும், ஐநாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் - காசா இடையே உடனடியாக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அரபு நாடுகளும், ஐநாவும் வலியுறுத்தியுள்ளன.

Advertisement

ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ கட்டரஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "காசாவில் உள்ள மருத்துவமனை மீதான தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பங்களுக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். சர்வதேச மனிதாபிமான சட்டப்படி மருத்துவமனைகளும், மருத்துவ பணியாளர்களும் பாதுகாக்கப்பட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

https://www.aanthaireporter.in/wp-content/uploads/2023/10/F8r7K4dXEAAy5XD.mp4

இந் நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து ஜ.நா.வுக்கான பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “இஸ்ரேல் பிரதமர் பொய் கூறுகிறார். அந்த மருத்துவமனையை சுற்றி ஹமாஸ் படையினர் இருப்பதாக நினைத்து தான் இஸ்ரேல் இந்த தாக்குதல் நடத்தியதாக பிரதமர் நெதன்யாகுவின் டிஜிட்டல் செய்தி தொடர்பாளர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியிருந்தார். அதன் பின்னர், அவர் பதிவிட்ட அந்த பதிவை எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் இருந்து நீக்கிவிட்டார். அவர் செய்திருந்த பதிவினுடைய நகல் எங்களிடம் உள்ளது. ஆனால், இப்போது அவர்கள் பாலஸ்தீனத்தின் மீது பழியை சுமத்துகிறார்கள். காசாவில் உள்ள மருத்துவமனை மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் தான். அந்த குற்றத்திற்கு அவர்களே பொறுப்பு” என்று கூறினார்.

Tags :
blame for attackGaza hospitalisraelkilled more than 500Palestinian Ambassadorun
Advertisement
Next Article