தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார்!

07:34 PM Jul 31, 2024 IST | admin
Advertisement

ஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தங்கள் குழுவின் முக்கியத் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாக ஹமாஸ் குழு தெரிவித்துள்ளது. ஈரான் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்ற அவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளர்.இதுகுறித்து ஹமாஸ் அமைப்பு இன்று வெளியிட்ட அறிக்கையில், தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹனியே கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது. நேற்று புதிய இரான் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பின்னர் ஹனியே கொல்லப்பட்டதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

”சம்பவத்திற்கான” காரணம் உடனடியாகத் தெரியவில்லை, ஆனால் “விசாரணை செய்யப்பட்டு வருகிறது” என்று இரானிய புரட்சிகர காவல்படை கூறியதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 62 வயதான ஹனியே 1980 களின் பிற்பகுதியில் இருந்து ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய நிர்வாகியாக இருந்து வந்திருக்கிறார்.

Advertisement

இஸ்மாயில் ஹனியே யார்?

அபு அல்-அப்து என்ற புனைப்பெயர் கொண்ட இஸ்மாயில் அப்தெல் சலாம் ஹனியே, பாலத்தீன அகதிகள் முகாமில் பிறந்தவர். இவர் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவின் தலைவர். இஸ்மாயில் ஹனியே ஹமாஸின் ஒட்டுமொத்த தலைவராக பரவலாகக் கருதப்படுகிறார். 1980 முதல் இயக்கத்தின் முக்கிய நிர்வாகியாக இருந்து வருகிறார்.

பாலத்தீன அரசாங்கத்தின்(Palestinian Authority government) பத்தாவது பிரதமராக 2006-ஆம் ஆண்டில் பதவி வகித்த நிலையில், ஒரே வாரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஹமாஸ் அமைப்பின் போட்டியாளரான ஃபதா கட்சியை மீது நடந்த மோசமான வன்முறைக்கு பிறகு காசா பகுதியில் இருந்து அவர்களை வெளியேற்றிய பிறகு, இவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 2017 இல் ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்மாயிலை, அமெரிக்க வெளியுறவுத்துறை 2018 இல் பயங்கரவாதியாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Ismail Haniyehthe leader of Hamaswas killed!இஸ்ரேல்ஹமாஸ்
Advertisement
Next Article