தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினை என்பது ஓட்டு அரசியலா? பாஜக ஏன் அதை எடுக்கவில்லை?

07:43 PM Jan 19, 2024 IST | admin
Advertisement

கிட்டத்தட்ட 5 லட்சம் போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளனர், அவர்கள் பிரச்சினையை அண்ணாமலை கையில் எடுத்தால், அந்த ஆதரவு மூலம் குறைந்தபட்சம் 15 லட்ச ஓட்டுக்களை பாஜக பெற முடியும். ஏன் அதை செய்யவில்லை என்பது என்னிடம் கேட்ட பலரின் நியாயமான கேள்வியாக இருந்தது. ஆனால் அதை மேலோட்டமாக ஓட்டு அரசியலாக பார்த்தால், அதைத்தான் வழக்கம்போல திராவிட கட்சிகள் அரசியல் லாபம் கருதி செய்து அசிங்கப்பட்டது. அது எளிதில் தீர்க்க முடியாத பிரச்சினை என்று தெரிந்தும், தேர்தல் யூக வகுப்பாளர்களின் ஆலோசனையின்படி, அதன் பிரச்சினை தெரியாததால் திமுக கையில் எடுத்து, நிறைய வக்குறுதிகளை கொடுத்துவிட்டது. இப்போது இருக்கும் நிலையில் சம்பளமே கொடுக்க முடியாத சூழலில். எப்படி அதை செய்ய முடியும்?தலைவலிக்கு மருந்து தடவி, திருகுவலி வந்த கதைதான்.

Advertisement

அதை பாஜகவும் கையில் எடுத்தால், நாளை அதை சமாளிக்கும்போது, இந்த திராவிட கட்சிகளான, குறிப்பாக திமுக அதை பெரும் பிரச்சினைக்கு உள்ளாக்கும். அப்போது அது தவிர்க்க முடியாத பிரச்சினையில் முடியலாம் என்பதால் அதை பால் வார்க்கும் பாம்பாக, அணுக வேண்டி இருக்கிறது. இது பற்றி சிலர் எழுத கோரினார்கள், ஆனால் அதற்கான தரவுகள் தேடத்தேட போய்க்கொண்டே இருப்பதால், போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடக்கும் இந்த சூழலில் தெரிந்தவற்றை எழுதுகிறேன்.

Advertisement

ஒவ்வொரு நிர்வாகமும், நிலுவைத்தொகை என்ற Provident Fund என்பது சம்பளத்தின் ஒரு பகுதி, அதில் ஊழியர்களின் பங்கு ஒரு பங்கும், அதற்கு இணையான தொகையை PF நிறுவனத்தில் செலுத்த வேண்டும். ஆனால் தமிழக அரசோ, மோசமான நிதி நிலைகள் காரணமாக, அரசு செலுத்த வேண்டிய தொகையைய மட்டுமல்ல, தொழ்லாளர்களின் சம்பளத்தில் பிடித்த தொகையையும் செலுத்தவில்லை. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. அதன் தொகை மட்டும் 3000 கோடி இருக்கும் என்கிறார்கள். அது மட்டமல்ல மேற்சொன்ன காலங்களுக்கு சம்பளத்தில் பிடிக்கப்பட்டு, செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல் திருடியதால், அதன் தொகை 10,000 கோடிக்கு மேல் இருக்கலாம்.

அது மட்டுமல்ல, பல வகைகளில் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை இன்னும் சில ஆயிரம் கோடிகள் என்கிறார்கள். அதை எல்லாம் செலுத்தினால் 18000 கோடிக்கு மேல் வரும் என்று சொல்லப்படுகிறது. அவற்றை எந்த அரசாலும் இப்போது இருக்கும் சூழலில் செய்ய முடியாது. இந்த சூழலில், கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் 6000 பஸ்கள் பணிமனையில் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சரி, அங்கேதான் நிறைய பஸ்கள் இருக்கிறதே, அதை செப்பனிட்டு பயன்படுத்தலாம் என்பது இல்லாமல், மேலும் மேலும் திருடுவதற்காக, இந்த திராவிடியா அரசு, புதிய பஸ்களை வாங்கி, ஏற்கனவே இருக்கும் 48000 கோடி கடனை மேலும் அதிகரித்துள்ளது. எனவே அதன் நிதி நிலையை மிக மோசமாக்கிவிட்டது.

80 களில் எனக்கு தெரிந்த ஒரு போக்குவரத்து ஊழியர் சொன்ன விஷயம் எப்படியெல்லாம் ஊழல் பெருக்கெடுத்து ஓடியது என்பதற்கான ஆரம்பம் என்றே சொல்லலாம். ஒரு பணிமனைக்கு பஸ்களுக்கு டயர்களை மொத்தமாக வாங்குவார்கள். அப்போது வருட இறுதியில் மீதம் இருக்கின்ற டயர்களை அடுத்த வருட கணக்கில் வரவு வைத்து பயன்படுத்த வேண்டுமல்லவா? ஆனால் அதை செய்ய மாட்டார்கள். அதற்கு பதிலாக Exefessive Stocks என்று ஏலத்தில் அதை அடிமாட்டு விலைக்கு விற்பார்கள். அதை வாங்குகிறவர்கள் தான், அதே டயரை பாலிஸ் செய்து மீண்டும் புதிய டயர்களுடன் வரும். அந்த டயர்களைத்தான் முதலில் பயன்படுத்துவார்கள். அதன் எலாஸ்டிக் தன்மை குறைந்திருந்தாலும், அதை ஏற்க வேண்டியது நிர்வாகமே! ஆனால் அதில் ஒரு பெரிய தொகை கைமாறும்.

அடுத்து நிர்வாக ஊழல் முதல், தொழிலாளர் ஊழல்வரை ஒவ்வொன்றும் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல. ஈரோட்டில் இருந்த பழனி செல்ல ஒரு அரசு பேருந்து 10:10 க்கு கிளம்ப வேண்டுமெனில், அடுத்த பஸ் தனியார் பஸ் என்றால், 5 நிமிடம் முன்னதாக எடுத்தால் கூட்டம் இங்கே குறையும், அடுத்த தனியார் பஸ்ஸுக்கு அதிகரிக்கும். அதனால் அந்த தனியார் பஸ் நிறுவனம் அரசு பஸ் ஊழியர்களுக்கு கமிஷன் கொடுப்பார்கள். அது ஒரு சிறு தொகை என்றாலும், நாள்தோறும் எனும்போது அது பெரிய தொகையல்லவா?

அது மட்டுமல்ல, சேலத்தில் இருந்து இரு பஸ் 9:45 க்கு ஈரோடு வந்து 10:20 க்கு எடுக்க வேண்டும். மேற்சொன்ன அதே சூழலில் அந்த பஸ் காலதாமதமாக வரும். அதனால் வந்தவுடன் அந்த ஸ்லாட் தனியார் பஸ்ஸின் ஸ்லாட் என்பதால் உடனே எடுப்பார்கள். அதனால் அரசு பஸ்ஸுக்கு வருமான இழப்பு என்பது ஊழியர்கள் சிலர் மூல செய்யும் ஊழலாலும்.ல் நடந்தது. மேலும் நேரடியாக காசு கொடுத்து அந்த அட்டவணையையே (Bus Schedule) மாற்றுவதும் ரெகுலராக நடக்கும் விஷயமே!
நேரம் தவறி வாகனங்களை இயக்கும் ஊழியர்களை தடுக்க டைம் கீப்பர்களை அதிகரித்து, அவர்கள் மூலம் இந்த பிரச்சினையை தடுக்க நினைத்தது. அதாவது ஊழியர்கள் நேர்மை இன்மையால், கூடுதல் பணியாளர் சுமை, கூடுதல் செலவு. இப்படி ஒவ்வொரு வகையிலும் செலவு. அதே சமயம் நேர்மையானவர்களே இல்லை என்று சொல்ல முடியாது? தனியார் பஸ் ஊழியர்களுடன் சண்டை போட்டு, அடிதடி செய்து மண்டையை உடைத்துக்கொண்ட நேர்மையான ஊழியர்களும் உண்டு.

இது ஒரு பெரிய பிரச்சினை ஆகி, தனியார் பஸ் கூட்ட நெரிசலுடன் போகும்போது, அரசு பஸ் பயணிகள் இல்லாமல் போகும். மேற்சொன்ன பிரச்சினையை நிர்வாக ரீதியில் எழுப்பினால், தனியார் பஸ்சில் பல வசதிகள் உள்ளது, நம்மிடம் இல்லை, அதனால் கூட்டம் வரவில்லை என்று அதற்கொரு குழு அமைத்து, அதை ரிப்போர்ட்டாக கொடுப்பார்கள்.

தனியார் பஸ் சீட்டுக்கள் தரமானதாகவும், ஆடியோ, வீடியோ என்பது எல்லாம் இருக்கும், இங்கே எதுவும் இருக்காது, இருந்தாலும் ஓடாது. அப்போ கூட்டம் எங்கே போகும்? அதற்கு வசதிகளை கூட்ட ஒரு பெரிய டெண்டர், அதில் ஊழல், தரமற்ற பொருட்கள், இப்படி ஊழலிலேயே ஓடும் துறை அரசு போக்குவரத்து துறை. ஒரு புதிய பஸ் வந்தால், அந்த பஸ்ஸில் மேற்சொன்ன வசதிகள் எல்லாம் இருக்கும். அப்படி இருந்தால் மக்கள் விரும்புவார்கள், கூட்டம் கூடும் என்பதற்காக அதை அரசு ஊழியர்களை வைத்தே பழுதாக்குவார்கள். உதாரணமாக ஃபேன் எல்லாம் ஒரு காலத்தில் அரசு பஸ்ஸில் வந்தது, அது குறைந்த காலத்தில் தரமற்ற பொருட்களால் ரிப்பேர் ஆகிவிடும் அல்லது ஆக்கப்படும்.

மேலும் தேவையற்ற பல பதவிகள், அதற்கு லஞ்சம் என்று தலைவிரித்தாடியது போக்குவரத்து துறையில். நம்ம அணில் பாலாஜி இப்போது ஜெயிலில் இருக்க காரணாமான கேஸில், ஒரு போஸ்டிங் எடுக்க வேண்டிய இடத்திற்கு மூன்று ஊழியர்கள் எடுத்து, அவர்களிடம் லட்ச லட்சமாக கொள்ளை அடித்தது ஒரு பக்கம், மறுபக்கம் எல்லா நிலைகளிலும் ஊழல். ஈரோடு-பழனி பஸ்ஸின் மாத கலக்‌ஷென் 10 லட்சமாக இருக்கிறது என்றால், தனியார் துறையில் அது 13-15 லட்சமாக இருக்கும். அதே கட்டணம், அதே பேருந்துகள், ஏன் வித்தியாசம்? ஊழல், ஊழல், ஊழல். ஒரு அரசு பஸ்ஸின் ஆயுட்காலம் 5 வருடம் கூட வருவதில்லை, ஆனால் தனியார் அதை 10 வருடத்திற்கு மேல் ஓட்ட எப்படி முடிகிறது?

இந்த சூழலில்தான் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஊழியர்கள் ஸ்ட்ரைக். இதையெல்லாம் பொங்கல் போன்ற முக்கிய காலங்களில் மக்கள் ஊருக்கு செல்லும்போதுதான் அறிவிப்பார்கள். ஏனெனில் அப்போதுதான் அது பெரிய பிரச்சினை ஆகிவிடும், மக்கள் கஷ்டப்பட்டால் அரசு ஏதாவது சலுகை காட்டும் என்பதால். ஆனால் போனஸும், சம்பள உயர்வும் தொடர்ந்து கேட்டு போராட்டம்.செய்பவர்கள், எப்போதாதவது மேற்சொன்ன ஊழல்களுக்கு எதிராக போராடி இருக்கிறதா? தேவைப்பட்டால் பேருக்கு சில பிரச்சினைகளை பக்கத்தில் இருக்கும். அதுமட்டுமல்ல, இது போன்ற முக்கிய காலங்களில் அறிவித்தால், நீண்ட தூர பயணம் செல்லும் மக்கள், மாற்றாக ஆம்னி பஸ்களை நாட வேண்டும். அதனால் ₹1000 இருக்கும். கட்டணம் ₹1500 ஆகும். அதில் அவர்களுக்கு லாபம் கிடைக்கும். அதற்காக இந்த தொழில் சங்க தலைவர்களுக்கு, ஆம்னி பஸ் துட்டு கொடுப்பதும் கூட இப்போது நிகழ்ந்தது.

இப்படி தொடர்ந்து எங்கும் ஊழல்கள் ஊழியர்கள் பொறுப்பின்மை என்று நடப்பதால், மக்களுக்கு அரசு போக்குவரத்து துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் பயணிக்கிறார்கள். இப்போது பெண்கள் இலவச பஸ் கட்டணம் எல்லாம், அரசு பஸ் நிறுவனத்தின் தலையில்தான் விழும். ஏற்கனவே 50000 கோடிக்கு மேல் இருக்கும் அந்த நிறுவனம் என்னவாகும்? அதனால், புதிய பணி இடங்களை நிரப்பாமல், அந்த பஸ்களை தனியார் நிறுவனங்களுக்கு விற்க முடிவு செய்தது தத்தி அரசு. அதாவது ஈரோடு-பழனி பஸ்சில் மாதம் 10 லட்சம் வருமானம் என்றால், வருடம் 1.2 கோடி. அப்போது குறைந்தது இரண்டு வருட தொகையை லஞ்சமாக கொடுத்து, அந்த ரூட்களையும், ஓட்டை பஸ்களையும் வாங்குவார்கள். அரசுக்கு அந்த ரூட்களுக்காக ஒரு 10 லட்சம் வரும், ஆனால் 5 மடங்கு வருமானம் தனியாருக்கும் 20 மடங்கு லஞ்சம் அரசு ஆள்பவர்களுக்கு..ஆனால் அதில் ஒரு பிரச்சினை ஏற்பட்டது. அப்படி அதை தனியாருக்கு கொடுக்க வேண்டுமெனில் மேற்சொன்ன ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகை, இழப்பீடு என்று எல்லாம் சேர்த்தால், அது அவர்கள் லஞ்சமாக வாங்கும் தொகை அளவிற்கு வந்துவிடும். அப்புறம் எப்படி கோல்மால்புர குடும்பம் சம்பாதிப்பது? மேலும் அணில் வேறு உள்ளே இருக்கும்போது தத்திகளை வைத்து அதை செய்வது எப்படி?அதனால் அந்த திட்டம் நின்றுவிட்டது

அதாவது ஏர் இந்தியாவை, எதற்கு பாஜக அரசு விற்றது என்று தெரியாமல் பேசும் திராவிட பொறம் போக்குகளுக்கு, அவர்கள ஆட்சியில் நடக்கும் இந்த விஷயம் எல்லாம் தெரியாது அல்லது தெரிந்தும் அவன் பேசுகிறான் என்றால் அவனும் திருட்டுப்பயல் என்பது புரியும். ஆம், ஏர் இந்தியா போலவே, போக்குவரத்து ஊழியர்கள் என்பது அரசால் நடத்த முடியாத ஒரு துறை, அதை தனியார்கள் வசம் கொடுப்பதே நல்லது. ஆனால் அதை செய்ய அண்ணாமலை போன்ற தலைவர்கள் வந்தாலும், நிதி நெருக்கடி என்பது அவ்வளவு எளிதில் அனுமதிக்காது. அப்படி இருக்கும் சூழலில் 15 லட்சம் ஓட்டுக்கள் கிடைக்கும் என்று அதற்கு அரசியல் ஆதரவு தந்துவிட்டு, நாளை திமுக போல மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதால் பாஜக கொஞ்சம் விலகி நிற்கிறது. ஆனால் பாஜகவால் இதை படிப்படியாக சீராக்க முடியும் என்பது தொழிலாளர்களுக்கு தெரியாதா என்ன?

ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்தால் நேர்மையாக உழைத்து நிறுவனத்தை கடனில் இருந்து வெளியே கொண்டுவர குறைந்தது 10 ஆண்டுகள் ஆகும். ஆனால் அதையெல்லாம் புரிந்தும், புரியாமல் இருக்கும் தொழிலாளர்களுக்கு கொடுக்கும் ஆதரவு, நாளை பாஜக அரசுக்கு எதிராக முடியும்! எனவேதான் இந்த ஜாக்கிரதை! எனவே ஊழல் திராவிட அரசுகளின் கேடுகெட்ட நிர்வாகத்தால் சீரழிந்த இந்த துறையை, கை கழுவி விட முடியாது. அதற்கான சீர் திருத்தங்களை அண்ணாமலை இப்போதே ஊழியர்களிடம் நேர்மையாக முன்வைத்து அணுகினால், நாளை ஆட்சிக்கு வரும்போது ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்கலாம்!

உதாரணமாக சில பிரச்சினைகளை நாளை ஆட்சிக்கு வரும்போது செய்தால் பிரச்சினை உண்டாகும், இப்ப்போது அதை நல்லெண்ண அடிப்படையில் அரசுக்கும், போக்குவத்து ஊழியர்களுக்கும் பாலமாக இருந்து அதை எதிர்காலம் கருதி அண்ணாமலை செய்ய வேண்டும்!
இப்போதைக்கு அரசு மட்டும் இதற்கு காரணமல்ல என்பதை மட்டும் புரிந்து கொள்வோம்!

மரு. தெய்வசிகாமணி

Tags :
Bjpbus employees striketn bus
Advertisement
Next Article