For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

வழக்கு இருக்கும் நிலையிலேயே குத்தகை ஏலமா?

09:36 AM Aug 07, 2024 IST | admin
வழக்கு இருக்கும் நிலையிலேயே குத்தகை ஏலமா
Advertisement

றக்குறைய 80 ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக குடியிருந்து வரும் மக்களின் உரிமை மற்றும் வாழ்வாதாரம் சம்பந்தமாக நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் குத்தகை ஏலத்துக்கு வரும் பல கோடி மதிப்பு நிலம்!நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது இது எப்படி சாத்தியம் என யோசிக்கிறீர்களா? உண்மை தான்... இப்படி ஒரு விவகாரம் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டம் அயனம்பாக்கம் கிராமத்தில் இன்று நடக்க இருக்கிறது.அதுவும் மாவட்ட நடுவர் நீதி மன்ற நீதிபதி அந்தஸ்தில் உள்ளவர் இந்த குத்தகை ஏலத்தை நடத்தும் அதிகாரியாக இருக்கிறார் என்பது தான் இதில் அதிர்ச்சி.காரணம் சட்ட விதிகள் அனைத்தும் அறிந்தவர்கள் இப்படி செயல்பாட்டால் சாமானியனின் குரல் எங்கே எடுபடும்.

Advertisement

சரி விஷயத்துக்கு வருவோம்...

Advertisement

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டம் அயனம்பாக்கம் கிராமத்தில் சுமார் 52 சர்வே நம்பர்களில் 51.87 ஏக்கர் நிலம் கந்தசாமி நாயுடு ட்ரஸ்ட் க்கு சொந்தம் என்றும் அதை நிர்வாகம் செய்யும் பொறுப்பு அரசு பேராட்சியர் அரசு பொறுப்பு சொத்தாட்சியர் அவர்களிடம் உள்ளது என்றும் மேற்படி நிலத்திற்கு ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி குத்தகை ஏலம் விடப்படும் என்றும் நான்கு கோடி நிர்ணய தொகை 12 கோடி டேவாணைத் தொகை என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அப்படி அறிவிக்கப்பட்ட நிலத்தின் மீது ஏற்கனவே பூந்தமல்லி நீதிமன்றத்தில் சிவில் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அதோடு பல்வேறு சட்ட சிக்கல்களும் அந்த இடத்தின் பெயரில் இருப்பதை மறைத்து விட்டு இப்படி ஒரு குத்தகை ஏலத்தை நடத்துகிறார்கள்.அரசு கட்டுப்பாட்டில் உள்ள டிரஸ்ட் நிலம் சட்ட சிக்கல் ஏதும் இல்லாத வகையில் மட்டுமே குத்தகைக்கு விட முடியும் என்று பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள் உள்ள நிலையில் யாரோ ஒரு சிலருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஏலம் அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் யாரும் பாதிக்காத வகையில் யார் யாருடைய நிதியும் சிக்கலில் முடங்காத வண்ணம் வெளிப்படத் தன்மையுடன் நேர்மையாக நடக்க வேண்டும். அதற்கு ஒரே வழி இன்று நடத்த திட்டமிட்ட குத்தகை ஏலத்தை ரத்து செய்து விட்டு, நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளை குறிப்பிட்டு வெளிப்படையாக எந்த நடவடிக்கை எடுத்தாலும் அது நீதியையும், நீதிமன்றத்தையும் நம்பும் சாமானியனின் நம்பிக்கைக்கு வலு சேர்க்கும் என்பதே அனைவரின் எண்ணம்.

Tags :
Advertisement