For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

மயிலாடுதுறை Ex ஆட்சியர் மகாபாரதி நல்லவரா? கெட்டவரா?

08:33 PM Mar 02, 2025 IST | admin
மயிலாடுதுறை ex ஆட்சியர் மகாபாரதி நல்லவரா  கெட்டவரா
Advertisement

ஶ்ரீ காந்த் மதுரை மாவட்டத்தின் சிறு கிராமத்தில் வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். அரசுப்பணியில்மீது தீராத ஆர்வம் கொண்டவர்..!அரசுப்பணியில் மூலம் மக்களுக்கு சேவை செய்வது அவரது லட்சியம். படித்தார், அரசுப்பணியில் சேர்ந்தார். நேர்மையான அதிகாரியாகத் திகழ்ந்தார், எந்தத் தடைகளுமில்லாமல் மக்கள் அவரை அணுக முடிந்தது. கருவூலகத்துறையில் உயரதிகாரியாக இருந்தார், அரசுப்பணியின்பொருட்டு அவசர வேலை காரணமாக துறையின் வாகனத்தை எதிர்பார்க்காமல் அரசுப்பேருந்தில் போனார். அந்தப்பேருந்தின்மீது ஒரு லாரி மோதியதில் ஶ்ரீகாந்தின் வலதுகை துண்டாகி விட்டது, அதில் சோர்ந்துபோகாமல் இடதுகையால் எழுதிப்பழகி தன் பணிகளைத் தொடர்ந்தார்.

Advertisement

அவருடைய அர்பணிப்பையும், நேர்மையையும் பாராட்டி தமிழ்நாடு அரசாங்கம் அவரை நியமன ஐ.ஏ.எஸ் ஆக பதவி உயர்த்தியது. மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கப்பட்டார். அரசுத் திட்டங்களை அமுல்படுத்துவதில் அவரது நிர்வாகம் முன்னிலையில் இருந்தது, இதற்காக மாநில ஒன்றிய அரசுகளின் விருதுகளும் கிடைத்தன.. மக்களின் நன்மதிப்பிற்குரிய ஆட்சித்தலைவராகத் திகழ்ந்தார்.

Advertisement

ஒரு குழந்தையின் பாலியல் குற்றத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளைச் சொல்லி பணிமாற்றம் செய்யப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியரின் கதைதான் மேலே உள்ளது.

இப்படியொரு கருத்தைச் சொன்ன ஒருவர் எப்படிப்பட்டவராக இருப்பார் என்று தேடியபோது கிடைத்த தகவல்கள் இவை.

அவர் பெயர் மகா பாரதிதானே என்ற ஐயம் வரலாம். தமிழ் மீது கொண்ட பற்றால் ஶ்ரீகாந்த் என்னும் பெயரை மகாபாரதி என்று மாற்றிக் கொண்டிருக்கிறார்.‌.மக்களை நேசித்த ஒரு அதிகாரி காவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் சொன்ன வார்த்தைகள் முன்னும் பின்னும் இல்லாமல் நேரடிப் பேட்டி போல் சித்தரிக்கப்பட்டதில் கொடூரமானவராக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுவிட்டார் என்று அறிய முடிந்தது..!

உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஒரு செய்தியை அணுகும் போது சமூகவலைதளங்களில் இதுபோன்ற ஆபத்து நேர்ந்து விடுவதுண்டு, சமூக வலைதளங்களின் அழுத்தத்தால் உடனடியாக நடவடிக்கை கட்டாயமும் அரசுக்கு ஏற்பட்டுவிடும்.

அவரைக்குறித்து அறியும்போது நாம் புரிந்துகொண்ட வகையில் அவர் அந்த வார்த்தைகளைச் சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது.அரசு அவர் கூறிய வார்த்தைகள் குறித்தும், அவருடைய service record குறித்தும் தீர விசாரித்து முடிவெடுக்கலாம்!

-கவிதாபாரதி

Courtesy: இடதுசாரிப் போராளி, ஊடகவியலாளர் James Navayugan

Tags :
Advertisement