தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

இந்தியா -பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் தனி முக்கியமா? சர்ச்சையை கிளப்பும் பிசிசிஐ!

01:44 PM Oct 13, 2023 IST | admin
Advertisement

2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. ஆனால், இந்த தொடர் ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திவருகிறது. வழக்கமாக மார்ச்சில் இருந்து மே வரையான காலகட்டத்தில்தான் உலகக்கோப்பை நடைபெறும். ஆனால், ஐபிஎல் காரணமாக பிசிசிஐ மழை காலமான அக்டோபர் மாதத்தில் உலகக்கோப்பையை நடத்தியது.

Advertisement

அதேபோல உலகக்கோப்பையில் தொடக்க போட்டிக்கு வெகு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அந்த நாளில்தான் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், இந்த முறை இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகள் மோதிய போட்டி எந்தவித தொடக்க நிகழ்ச்சியும் நடைபெறாமல் மிகவும் எளிமையான நடத்தப்பட்டது. இதன் காரணமாக ரசிகர்கள் யாரும் இன்று மைதானம் வெறிச்சோடு கிடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Advertisement

இந்த நிலையில் அகமதாபாத் மைதானத்தில் இந்தியா -பாகிஸ்தான் மோதும் போட்டிகளை காண பல்வேறு நட்சத்திர நடிகர்கள் அழைக்கப்பட்டுள்ளதும், அந்த நாளில் இசை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளதும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐசிசி நடத்தும் தொடர்களில் அனைத்து அணிகளுக்கு சம அங்கீகாரம் கொடுக்கப்படும். ஆனால் தற்போது இந்திய அணிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாகவும், இந்தியா -பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் தனி முக்கியத்துவத்தை பிசிசிஐ வழங்குவது, அதற்கு ஐசிசி மெளனமாக சம்மதம் கொடுப்பதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
BCCIcricketICCind vs pak
Advertisement
Next Article