For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சாணக்யத்தனத்தை இழந்து வருகிறதா இந்தியா?

08:56 PM Sep 27, 2024 IST | admin
சாணக்யத்தனத்தை இழந்து வருகிறதா இந்தியா
Advertisement

சியா கண்டத்தில் சாணக்கியத்தனத்திற்கு பெயர் போன இந்தியா தற்போது அது கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து வருகிறதா என்று கேட்கும் அளவுக்கு மாறி போன மர்மம் என்ன என கேட்க தோன்றும் காரணம், இந்த வாரம் இலங்கையின் அதிபராக பொறுப்பேற்றிருக்கும் அநுரா குமார திஸாநாயக்கே என்ற மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் தான்.!இந்தியாவை சுற்றி இருக்கும் மாலத்தீவு, நேபாள், பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, பூட்டான், மற்றும் மியான்மார் நாடுகளின் அரசியல் மாற்றம் மற்றும் அவர்களின நட்புறவில் இந்தியா பல ஆண்டுகளாக சுதந்திரம் அடைந்த நாட்களில் இருந்து கோலோச்சி கொண்டிருந்தது. மேற் கூறிய நாடுகளில் ஆட்சி மாற்றத்தை தீர்மானிக்கும் சக்தியாக கூட இருந்திருக்கிறது இந்தியா பல சமயங்களில். இதன் மூலம் தெற்கு ஆசியாவின் பெரியண்ணாவாக இருந்த இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக பொலிவு இழந்து வருவது வருத்தமான விஷயம்.

Advertisement

கிழக்கு பாகிஸ்தான் பிரச்சினையில் கூட இந்தியா அவர்களை போர் தொடுத்து தனி நாடாக பங்களாதேஷ் உருவானதற்கு காரணம் இந்தியாவின் சாணக்கியத்தனம் தான். அனால் கடந்த பத்து ஆண்டுகளில் நேபாளின் உறவு விரிசல் மற்றும் மியான்மரின் உறவு விரிசல் மற்றும் மாலத்தீவில் அரசியல் மாற்றத்தில் இந்தியாவின் ராணுவத்தை வெளியே அனுப்பியது மற்றும் பங்களாதேஷ் கலவரம் மற்றும் பாகிஸ்தானின் தொடர் தாக்குதல்கள் என அத்தனை நாடுகளும் இந்தியாவின் பிடியில் இருந்து இந்தியாவுக்கு எதிராக இருப்பதின் காரணம் சாணக்கியத்தனம் பொய்த்து போனதும் மற்றும் சைனாவின் ஆதிக்கமும் தான் காரணம். இப்போது இலங்கைக்கு புதிதாக வந்திருக்கும் அதிபர் போன தேர்தலில் 3 .8 % மட்டுமே வந்திருந்த கட்சி எப்படி பெரும்பான்பையை எப்படி பெற முடிந்தது என நினைத்து பார்த்தால் இந்தியாவின் வெளியுறவு மற்றும் உளவு துறை கையை மீறி சைனாவின் கம்யூனிச கொள்கையை கொண்ட மார்க்சிஸ்ட் கட்சி அதிபராக வந்ததின் மூலம் சைனா மாலத்தீவு / பாகிஸ்தான் / நேபாள் அடுத்து இலங்கையை அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் என்பது நிரூபணம் ஆகிறது.

Advertisement

இலங்கையை ஆதரிக்கும் நாடுகள் இந்தியாவை சுற்றி இருந்தால் இந்தியாவுக்கு தலைவலி தான். இந்தியாவை ஆள் என ராஜபக்ஷே மற்றும் அணில் அதிபராக இருக்கும் போதே சைனாவின் கப்பல் படை இலங்கையில் கூடாரம் அடித்து இந்தியாவை உளவு பார்த்தது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் சைனைவின் பிடிக்குள் அல்லது சைனாவின் கம்யூனிச கொள்கைகளை கடைபிடிக்கும் கட்சிகள் ஆட்சியை பிடித்தால் அது இந்தியாவுக்கு தலைவலியாக மாறும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

பிரிக்ஸ் BRICS ஐந்து நாட்கள் கொண்ட கூட்டமைப்பை இந்தியா தற்போது பெரிய அளவில் போக்கஸ் செய்யாது இருப்பது வேதனை. இதன் மூலம் சைனா / தென் கொரியா / ஜப்பான் இந்த ஆசியா கண்டதை ஆளனும் என்று ஒன்றை ஒன்று போட்டி கொண்டிருப்பது கூடுதல் வேதனை.

இந்தியா / அமெரிக்கா / ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவின் குவாட் QUAD நாடுகளின் கூட்டமைப்பு மட்டுமே இந்தியாவின் தற்போது ஆக்டிவ் கூட்டமைப்பிற்கும். இந்த குவாட்டின் முக்கிய கொள்கையே சைனாவின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்பது கொஞ்சம் ஆறுதல் இதன் மூலம் இந்தியா சைனாவின் சவுத் கடல் வட்டாரத்தில் சைனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்தியா சபிப்போர்ட் செய்யணும் என இந்தியாவின் ஆதரவை இந்த மற்ற மூன்று நாடுகள் கோருகிறது. இதை இந்தியா செய்வதின் மூலம் சைனாவுக்கு அதிக கோபம் வரும் மற்றும் இதனை இந்த சவுத் ஏசியன் நாடுகள் மூலம் நெருக்கும் பிரச்சினையை இந்தியா கையாளும் நிலைக்கு தள்ளப்படும்.

குவாட் தான் இருக்கே என பெருமை பட்டு கொள்ளலாம் என நினைக்கும் போது அதே மூன்று நாடுகள் இந்தியாவின் நட்பு நாடான ரஷ்யாவின் கொட்டத்தை அடக்கும் இன்னொரு கோரிக்கை இந்தியாவுக்கு மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் போகும் ஒரு தர்ம சங்கடத்தை உண்டாக்கும். இந்தியா இனிமேல் தான் பழைய சாணக்கியத்தனத்தை கண்டிப்பாக திரும்பவும் கொண்டு வருமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags :
Advertisement