கவர்னர் இரவி முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரிதானே?
நேற்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் இரண்டு சுற்றறிக்கைகளை அனுப்பி இருக்கிறார். கூர்ந்து கவனிக்க வேண்டியவை அவை.
கவர்னர் ஆர்.என். இரவியின் வாய்மொழி உத்தரவின் பெயரில் மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்களை அவர்களிடம் பெற்று ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என கல்வியியல் கல்லூரி முதல்வர்களுக்கு முதல் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகப் பதிவாளர். இரண்டாவது சுற்றறிக்கையில் முதல் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றிருக்கிறார்.
முதலில் கவர்னரின் வாய்மொழி உத்தரவை கடைபிடிக்கும் முன்னர் பதிவாளர் அவர்கள் மாணவர்களிடம் கல்விக்குத் தொடர்பற்ற ஆவணங்களைப் பெற முடியாது. உரிய காரணங்கள் இல்லாமல் எந்தத் தரவுகளும் பெறக் கூடாது எனத் தெரிவித்திருக்க வேண்டுமல்லவா? கவர்னர் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி எனத் தரவுகள் தெரிவிக்கின்றன. அவர் இப்படி தனி மனித உரிமையில் நிறுவனங்கள் வழியாக மீற நினைப்பது அதிகார மீறல் ஆகும்.
எதற்காக கவர்னநருக்கு மாணவர்களின் வாக்களர் அடையாள அட்டை எண்கள் தேவைப் படுகின்றன? இதனை அமைச்சருக்கும் அரசுக்கும் தெரிவித்தனரா தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரும், பதிவாளரும்?
எந்தவொரு இந்தியக் குடிமக்களின் தரவுகளும் அவர்களுக்கு உரிய காரணங்களைத் தெரிவிக்காமல் தனிப்பட்ட தகவல்களைப் பெறவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது