For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

நாய் இறைச்சிக்கு தடையா?: தென்கொரியாவில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்!

10:00 PM Nov 30, 2023 IST | admin
நாய் இறைச்சிக்கு தடையா   தென்கொரியாவில்  அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்
Advertisement

தென்கொரியாவில் ஆண்டொன்றுக்கு சுமார் பத்து லட்சம் நாய்கள் இறைச்சிக்காகக் கொல்லப்படுகின்றன. இந்த வழக்கத்தை நிறுத்த வேண்டும் என விலங்குகள் நல செயல்பாட்டாளர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.தென்கொரியர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவாக இருந்த நாய்க்கறியை, உண்ணும் வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் நாய்கறி உண்பதை தடை செய்ய வேண்டும் என தென் கொரியாவில் விலங்குகள் நல ஆர்வலர்கள் போராட்டம் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.இதை பரிசீலித்த அந்நாட்டு அரசு கடந்த செப்டம்பரில் நாய் இறைச்சிக்கு தடை விதிக்கும் சட்டம் இயற்ற பரிசீலித்து நாய் இறைச்சிக்கு தடைவிதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் பெரும் போராட்டமும், பரபரப்பு ஏற்படுள்ளது. .

Advertisement

தென் கொரியாவில் பண்ணைகளில் கோழிகளை வளர்ப்பது போல அங்கு நாய்களை வளர்த்து வருகின்றனர். தென் கொரியா முழுவதும் சுமார் 17 ஆயிரம் நாய் பண்ணைகள் உள்ளன. மக்கள் தொகையில் 40 சதவீத்திற்கும் மேற்பட்டோர் நாய் கறியை விருப்பமுடன் சாப்பிடுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதை அடுத்து ‘பீட்டா’வை போலவே தென் கொரியாவில், இறைச்சிக்காக நாய்கள் கொல்லப்படுவதற்கு எதிராக ‘கேர்’ அமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. பண்ணைகளில் இருந்து பிடித்துச் செல்லப்படும் நாய்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு இறைச்சிக்காக பயன்படுத்துவதாக கேர் அமைப்பு புகார் கூறி வருகிறது.

Advertisement

அதே சமயம் நாய் கறியை பிரபலபடுத்துவதற்காக சீனா மற்றும் தென் கொரியாவில் ஜூன் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நாய் கறி திருவிழா நடைபெறுகிறது. இதற்காக பிரத்யேகமாக நாய் கறி உணவுகள் தயார் செய்யப்படுகின்றன. நாய் கொன்று முழு உடலை சுட்டு அதில் அரிசியை போட்டு கொதிக்க வைத்த தயாரிக்கப்படும் உணவு தென் கொரியாவில் பிரபலம். இந்த உணவை சாப்பிடுவதற்காக பல பகுதிகளில் இருந்து மக்கள் வருவது வழக்கம்.

இந்த நிலையில்தான் நாய்கள் கொல்லப்படுவதற்கு எதிராக கேர் அமைப்பு தென் கொரிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில் நாய் பண்ணையாளர் ஒருவர் மீது புகார் கூறப்பட்டு இருந்தது. ‘‘உலகம் முழுவதும் மக்களின் நண்பனாகவே நாய்கள் பார்க்கப்படுகின்றன. வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. அத்தகைய நாயை கொஞ்சமும் கவலையின்றி கொல்கின்றனர். நாய்களின் அன்பை தென் கொரிய மக்கள் மறக்கும் சூழல் உள்ளது’’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து தென் கொரியாவில் இறைச்சிக்காக நாய்களை கொல்வதை சட்டவிரோதம் என அந்நாட்டு ஐகோர்ட் அறிவித்தது. மேலும் நாய் பண்ணை உரிமையாளருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. நாய் கறி திருவிழா நடைபெற்று வரும் வேளையில் நாய்களை கொல்ல விதிக்கப்பட்ட தடை தென் கொரிய மக்களை சோகத்தில் ஆழ்த்திய நிலையில்.அரசின் முடிவை கண்டித்து நாடு முழுதும் நாய் பண்ணையாளர்கள், நாய் இறைச்சி பிரியர்கள் அரசுக்கெதிராக போராட்டத்தில் இறங்கி அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர்..

Tags :
Advertisement