தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

சீனா -அமெரிக்கா -பாகிஸ்தான் முக்கோண காதலில் முள்ளான ஈரான்!

08:13 PM Jan 28, 2024 IST | admin
Advertisement

ரும்பு சகோதரர்கள் என்று பீலா விட்ட சீன-பாக் உறவு மீண்டும் ஒரு புதிய சிக்கலை சந்தித்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் மோசமான பாகிஸ்தானின் பொருளாதாரம், சீனா கொடுத்த கடன் சுமை, இந்தியாவின் கைக்கு கைமாறும் உலக உறவின் ஆதிக்கம் என்று எல்லாமே பாகிஸ்தானுக்கும், சீனாவிற்கும் பாதகத்தை உண்டு பண்ணிவிட்டது. அதற்காக புதிய வல்லரசு சீனா தன்னை காப்பாற்றும் என்று இரும்பு சகோதரனை நம்பிய பாகிஸ்தானுக்கு, சீனா கொடுத்த கந்து வட்டி கடனுக்கு எழுதி வாங்கிய துறைமுகம் பாகிஸ்தானை படுத்திவிட்டது. அதற்கு மாறாக உலக வங்கி கடனுக்கு போனால், அங்கே அதன் சீன உறவால், அமெரிக்கா குறுக்கே நின்று அதையும் தடுக்கிறது. அதனால் அணு ஆயுதம் தயாரிக்கும் பாகிஸ்தானுக்கு, அடுத்த வேளை சோற்றுக்கு தொப்புள் கொடி உறவுகளான சவூதி-அரேபியா உட்பட அரபு நாடுகளுக்கு சென்றால், பாகிஸ்தானுக்கு நீ உதவினால், உன்னிடம் கச்சா எண்ணெய் வாங்கமாட்டேன் என்று இந்தியா போட்ட கண்டிஷன், பாகிஸ்தானை பிச்சை எடுக்கும் நிலைக்கே தள்ளியது!

Advertisement

இந்த சூழலில் அதற்கு மேலும் பிரச்சினையை கொடுக்கும் ஈரான், பாகிஸ்தான்-சீன உறவில் புதிய முள்ளாய் முளைத்துள்ளது. அதன் பிண்ணனியை பார்க்க வேண்டுமெனில் சரித்திரத்தை கொஞ்சம் புரிந்துகொள்ளல் அவசியம்! பாகிஸ்தானுக்கு சுதந்திரம் கிடைத்தபோது முதன் முதலில் அங்கீகரித்து, அங்கே தன் அமைச்சர்களை அனுப்பிய நாடு ஈரான். அதற்கு முக்கிய காரணம், அது இஸ்லாமிய நாடு என்ற தொப்புள் கொடி உறவே காரணம். அது மேலும் வலுவாக காரணம், இந்தியாவை வளராமல் தடுக்க பிரிடிஷ் தேவைக்காக உறுவாக்கப்பட்ட அந்த பாகிஸ்தான் நாட்டை, புதிய வல்லரசான அமெரிக்கா தன் பக்கம் கைப்பாவையாக்கி திருப்பி கொண்டது.அப்போது ஈரான்-அமெரிக்கா உறவு மிக பலமாக இருந்தது. அமெரிக்கா, ஈரானிடம் இருந்து தனக்கு தேவையான கச்சா எண்ணெயை அடிமாட்டு விலைக்கு வாங்கியும், பெட்ரோ டாலர் மூலம் கச்சா எண்ணெய் விற்கப்பட்டதால், தனது பொருளாதாரத்தை பெருக்கியது! அதனால் பாக்-ஈரான் உறவு மேலும் அமெரிக்காவால் வலுவடைந்தது.

Advertisement

இந்தியா-பாகிஸ்தான் இரண்டு பெரிய போர்களில், ஈரான் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது மட்டுமல்ல, அதற்கு ஆயதங்கள் கொடுத்து உதவியது, இருந்தாலும் பாகிஸ்தான் போரில் தோல்விதான் கண்டது! அதனால் ஈரான்-இந்தியா எதிர்ப்பு என்பதும், பாகிஸ்தான்-ஈரான் உறவுக்கு இன்னொரு காரணம். அதன் காரணமாக இந்தியா ஈரானுக்கு எதிரான ஈராக்கை நண்பனாக்கியது. அதனால் 1979 வரை இந்த பாக்-ஈரான் உறவு பலமாகத்தான் இருந்தது! இந்த சூழலில், அமெரிக்கா தன் இயற்கை வளத்தை சுரண்டுவதாகவும், அதற்கு ஈரான் அரசு விலை போனதாகவும் ஈரான் மக்களிடம் எதிர்ப்பு வலுக்கிறது. அந்த எதிர்ப்பை மையப்படுத்தி அதயதுல்லா கோமேனி பதவிக்கு வருகிறார். அதனால் ஈரான், அமெரிக்காவின் புதிய எதிரி ஆகிறது.

அந்த ஈரான் எதிரியை சமாளிக்க ஷியா-சுன்னி என்று இஸ்லாமியர்களுக்கு இருந்த பகையை ஊதி, அவர்களுக்குள் பகைமையை வளர்த்து, போரை உறுவாக்குகிறது அமெரிக்கா. அந்த ஈரான்-ஈராக் போர் என்பது, பல வருடங்கள் ஸ்டாக் மார்க்கெட் போல செய்தித்தாளில் தினமும் ஒரு அப்டேட் வருமளவிற்கு ஒரு காலத்தில் உலக பிரசித்தம். அதில் ஒரு பக்கம் ஆயுதத்தை ஈராக்கிற்கு விற்று, மறுபக்கம் அதன் கச்சா எண்ணெயை தரைமட்ட விலையில் அமெரிக்கா வாங்கி ஆதாயம் பார்த்தது.அப்போது பாகிஸ்தான், அமெரிக்காவிற்கு, ஆஃப்கானிஸ்தானில் இருந்த ரஷ்ய படைகளை வெளியெற்ற உதவி தேவைப்பட்டது. மேலும் ரஷ்யாவின் நண்பனும், எதிர்காலத்தில் வல்லரசாக வாய்ப்புள்ள நாடாக இந்தியாவை மதிப்பிட்டதால், இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க, எதிர்க்க பாகிஸ்தான் உறவு அவசியமானது.

எனவே அமெரிக்க-பாக் உறவு தொடரும்போது, பாகிஸ்தான்-ஈரானுக்கு ஒரு புதிய விரிசல் ஏற்பட்டது. அதற்கு இன்னும் ஒரு காரணமாக பார்க்கப்பட்டது, ஈரானின் ஷியா முஸ்லிம் அரசும், பாகிஸ்தானின் சுன்னி முஸ்லிம் அரசு என்ற வித்தியாசம், அதன் பகைக்கு இன்னொரு பரிமாணம் கொடுத்தது. அதனால், பாகிஸ்தான் ஈரானின் எதிரியான சுன்னி நாடுகளின் தலையான சவூதி அரேபியா பக்கம் சாய்ந்தது. மேலும் ஏற்கனவே இருந்த ஈரான்-பாக் எல்லை பிரச்சினைக்கு அது உயிர்கொடுத்தது. அதன் விளைவாக பாகிஸ்தானுக்கு எதிராக போராடிய பலூசிஸ்தானுக்கு ஈரான் ஆதரவு கொடுக்க, பதிலாக ஈரானுக்கு எதிராக போராடியவர்களுக்கு பாகிஸ்தான் மண்ணில் ஆதரவு கொடுக்கப்பட்டது. அதனால், இந்தியா, பாகிஸ்தானின் எதிரியான ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க ஆரம்பித்ததால், எதிரிக்கு, எதிரி எனக்கு நண்பன் என்று அந்த உறவு பலப்பட்டது.

இந்த சூழலில், ஆஃப்கானிஸ்தான் பிரச்சினை முடிவுக்கு வந்து, பின்பு அது இஸ்லாமிய தீவிரவாரமாகி, காஷ்மீர் பிரச்சினையாக்கி, இந்தியாவிற்கு எதிராக மையம்.கொண்டது. அதற்கு சவூதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகள், ஏராளமான நிதி உதவியை செய்தது. அமெரிக்கா பாக்கிற்கு தொடர்ந்து ஆயுத உதவியை செய்தது. இஸ்லாமிய தீவிரவாதம் ஒரு நிலையில் அமெரிக்காவை பதம் பார்க்க, பாக்-அமெரிக்க உறவில் விரிசல் ஏற்பட்டது. அந்த நிலையில் இந்தியாவிற்கு எதிரான சீனா, எதிரிக்கு எதிரி எனக்கு நண்பன் என்றளவிலும், முன்பு இரண்டும் அமெரிக்காவின் ஆதரவு நாடுகள் என்ற நிலையில், அதன் உறவுகள் பலமடைந்தது. பாகிஸ்தான் வசமிருந்து காஷ்மீரின் ஒரு பகுதியை, சீனாவிற்கு ஏற்கனவே கொடுத்திருந்தால், அது இரும்பு நண்பர்கள் என்ற அளவிற்கு போனது.

அந்த சூழலில், சீனா, அமெரிககவை முந்தி தான் வல்லரசாக போட்ட திட்டத்தில், அமெரிக்காவையே எதிர்க்க, அது பாகிஸ்தானின் முக்கோண காதலுக்கு புதிய பிரச்சினை ஆனது. மோடி ஆட்சிக்கு வந்தபின் அமெரிக்க-இந்திய உறவில் ஒரு புதிய திருப்ப ஏற்பட்டதால், பாகிஸ்தான், அமெரிக்காவை தவிர்த்து சீனாவை சார்ந்திருக்க வேண்டிய சூழல் பலமானது. இங்கே சீனாவை சமாளிக்க அமெரிக்காவிற்கு இந்தியா தேவைப்படுகிறது. இந்தியாவை சமாளிக்க, சீனாவிற்கு பாகிஸ்தான் தேவைப்படுகிறது. அதனால் பாகிஸ்தானுக்கு ஏகப்பட்ட கடனை கொடுத்த சீனா, அதை லாவகமாக சீன தொழில் நிறுவனங்கள் மூலம் அதில் ஆதாயமும் பார்த்துவிட்டது. சீனாவின் விலங்காத ஆயுதங்களை சீப்பாக தருகிறேன் என்ற பெயரில், அந்த காயலான் கடை பொருட்களை பாகிஸ்தான் தலையில் கட்டி அதனை மிக்ப்பெரிய Debt trap ல் சிக்க வைத்தது.

மேலும் சீனாவிற்கு மிகப்பெரிய பிரச்சினை, அதன் 80% வர்த்தம் இந்திய பெருங்கடலை தாண்டி செல்ல வேண்டி இருப்பதால், அதற்கு மாற்றாக OBOR மூலம், சீனா-பாகிஸ்தான் ஹைவேக்கள் மூலம் நேரடியாக அரபிக்கடலை இணைக்க புதிய ரோடு அமைக்கிறது. அது பாகிஸ்தான் ஆக்கிரமித்த, கில்கிட் பாகிஸ்தான், பலூசிஸ்தான் வழியாக போகிறது. அந்த மிகப்பெரிய முதலீடுகள், பாகிஸ்தான் தலையில் கடனாக கட்டி, அதில் சீனா அதன் நிறுவனங்களே அந்த புராஜெக்டையும் எடுத்து ஆதாயம் பார்க்கிறது. ஆனால் பாகிஸ்தானுக்கு எந்த வளர்ச்சியையும் அது கொடுக்காமால், அது கடன் சுமையில் வீழ்கிறது. இந்த சூழலில், பாகிஸ்தானுக்கு உதவும் எந்த நாட்டோடும், வர்த்த உறவை வைத்துக்கொள்ள மாட்டோம் என்ற இந்தியாவின் புதிய கட்டுப்பாட்டால், பாகிஸ்தானுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் என்ற ஆதரவு போர்வையில் வந்த நிதி உதவி கிட்டத்தட்டே நின்றே விடுகிறது.

அது மட்டுமல்ல, இந்தியா Demonetization மூலம் Counterfeit Currency அடிப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்து, தீவிரவாதத்திற்கு மிக முக்கிய நிதி அஸ்திவாரத்தின் மீது இந்தியா கைவத்ததால், ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளுக்கு பாக் அச்சடித்து கொடுத்துவந்த இந்திய பணம் வெறும் பேப்பராகிவிட்டது. அதனால் பணம் இல்லாத தீவிரவாதிகள், பாகிஸ்தானுக்கு எதிராக திரும்புகிறார்கள். விளைவு, தினந்தோறும் குண்டுவெடிப்பு, ராணுவம் மீது தாக்குதல் என்று பாகிஸ்தான் அது வளர்த்த தீவிரவாதத்திற்கு அதுவே இறையாகிறது.

மறுபக்கம், இந்தியா பலூசிஸ்தான் சுதந்த போராட்ட வீரர்களை ஆதரிக்கிறது. ஏற்கனவே ஈரானும் உதவும் சூழலில், ஒன்றுக்கொன்று உற்ற நட்பு சூழல் உறுவாகிறது. அமெரிக்க ஈரான் உறவில் எதிர்ப்புக்கு இன்னொரு முக்கிய காரணம், அது பெட்ரோ டாலர் மூலம் கச்சா எண்ணெயயை விற்காமல், வேறு கரன்ஸியில் விற்றதால் ஏற்பட்ட பகை. அதனால் இந்தியாவிற்கு ஈரான் இந்திய ரூபாயில் கொடுக்கிறது. அதற்கு மாற்றாக, உணவு பொருட்கள், மற்ற தேவைகளை இந்தியாவிடம் இருந்து ஈரான் பெறுகிறது.

இதனால், ஈரானின் இஸ்ரேல் எதிர்ப்பு, இந்திய-ஈரான் உறவில் ஒரு பெரிய பிரச்சினையை உருவாக்குகிறது. இஸ்ரேலை ஆதரிக்கும் இந்தியா, அதன் பரம எதிரியான ஈரான்! அது பாலஸ்தீன உறவில் இஸ்ரேலை எதிர்க்க, அதற்கு தேவையான ஆயுத உதவிகளை சீனா கொடுக்கிறது. அதனால் சீன-ஈரான் புதிய உறவு, இந்திய-ஈரான் உறவில் ஒரு விரிசல் ஏற்பட்டது. இந்த சூழலில், பாகிஸ்தான் திவால் ஆகலாம் என்ற சூழலில், சீனா, பாகிஸ்தானுக்கு கடன் கொடுப்பதை நிறுத்துகிறது. மாறாக, சீனா, ஆஃப்கானிஸ்தான், ஈரான் வழியாக மாற்று பாதை மூலம் அரபிக்கடலை அடைய புதிய முதலீடுகளை சீனா செய்கிறது. அதனால் ஏற்கனவே இருந்த பாகிஸ்தான்-ஈரான் உறவில் புதிய விரிசல் வலுக்கிறது.

அதே சமயம், அமெரிக்கா, இந்தியாவை கட்டுப்படுத்த வேண்டுமெனில், பாகிஸ்தான் அவசியம் என்ற நிலையில் அதன் உறவு டெமோகிராடிக் அரசு மூலம் மீண்டும் உயிர்பெறுகிறது. அது மேலும் பாக்கை, ஈரானுக்கு எதிராக மாற்ற, அமெரிக்கா மூலம், ஈரானுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு உதவியை அதிகரிக்கிறது. அதன் மூலம், ஈரானின், இஸ்ரேலுக்கு எதிரான முயற்சிகளுக்கு தடை ஏற்படுத்துவதே அதன் நோக்கம். அதனால் பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகனை வீசி தாக்குகிறது. ஆனால் பாகிஸ்தான் திரும்பி தாக்க முடியாத அதன் பொருளாதார சூழல் இருந்தாலும், அமெரிக்காவின் அழுத்தத்தால், அதை பாகிஸ்தான் இரண்டு நாள் கழித்து செய்கிறது. இது மேலும் வலுவடைந்தால் ஈரான்-பாகிஸ்தான் போரில் முடியலாம். ஆனால் போர் செய்யும் அளவிற்கெல்லாம், இரு நாட்டின் பொருளாதார நிலை இல்லாததால், அது இத்தோடு நின்றுவிட்டாலும், பகை என்ற புகை தொடரும்...!

தலை சுத்துகிறதா, ஆம் ஜியோ பாலிடிக்ஸ் என்பது நம்ம ஊர் அரசியல் கட்சிகளின் கூட்டணி போல, யாரும் நிரந்தர நண்பனுமல்ல, பகைவனுமல்ல. கரகாட்டக்காரனில், சொப்பன சுந்தரி வெச்சிருக்கிற காரை நாம் வெச்சிருக்கிறோம, அப்போ... என்ற அளவில், அமெரிக்காவின் தேவையை பொறுத்தது. நாளை சீனாவை பாகிஸ்தான் எதிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், எதிரிக்கு எதிரி எனக்கு நண்பன் என்று இந்தியா-பாகிஸ்தான் ஒன்றாக வாய்ப்பில்லை என்றெல்லாம் உறுதியாக சொல்ல முடியாது!ஆனாலும் ஈரான்-இஸ்ரேல், அமெரிக்கா-ரஷ்யா இரு நேர் எதிர் துருவங்களுடன் எப்படி இந்தியா சமாளிக்கிறது? வெரி சிம்பிள், ஈரானும், இஸ்ரேலும் சண்டை போட்டுக்கொண்டு அழிவைத்தான் தேடுகிறீர்கள், அதற்கு பதிலாக, உங்கள் வெறுப்பை மறந்து, மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்ய உங்கள் பொருளாதாரத்தை பயன்படுத்துங்கள். உங்கள் உணவு தேவையை நீங்கள் சுயமாக பூர்த்தி செய்ய, இஸ்ரேல் டெக்னாலஜியை நான் வாங்கி தருகிறேன், அதற்கு பதிலாக நீங்கள் அவர்கள் மீது உள்ள பகையை ஒதுக்கி வையுங்கள் என்ற பாஸிடிவான வகையில் சமாதானம் பேசுகிறது. அதனால் இரு நாடுகளும் பகைக்கவில்லை.அமெரிக்கா, சீனா போல அதில் ஆதாயம் தேட இந்தியா முனைவதில்லை என்பதால், இந்தியாவை இன்று உலகம் வஷிஸ்ட குருவாக மதிக்கிறது! அதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று உலகறியும்! நீங்கள்?

மரு.தெயவசிகாமணி

Tags :
ChinafinanceIndiaIranPakistanPolticstriangular loveus
Advertisement
Next Article