For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறை!

01:29 PM Dec 15, 2023 IST | admin
தோனி  தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறை
Advertisement

கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

கடந்த 2013 ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார்.அதனடிப்படையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி, தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 2014ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், போலீஸ் அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

Advertisement

சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் உத்தரவுகள் குறித்து களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்துள்ளதாக கூறி, ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, சென்னை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார். ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியுள்ள கருத்துக்கள், நீதிமன்றங்களை களங்கப்படுத்தும் வகையில் இருப்பதுடன், நீதித்துறை மீது பொது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை குலைக்கும் வகையில் இருப்பதால், அவரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டுமென அந்த மனுவில் தெரிவித்து இருந்தார்.
மேலும், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் அனுமதியைப் பெற்றே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் தோனி தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டனர். இதனை அடுத்து, தனக்கு மேல்முறையீடு செய்ய அவகாசம் வேண்டும் எனவும் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் அனுமதி கோரியிருந்தார். அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு, அவருக்கான 15 நாள் சிறை அடுத்த 30 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக கூறி உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டனர்.

Tags :
Advertisement