For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சாம்பியன் பட்டத்தை 3-வது முறையாக வென்றது!

10:21 AM May 27, 2024 IST | admin
ஐபிஎல் கிரிக்கெட்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சாம்பியன் பட்டத்தை  3 வது முறையாக  வென்றது
Advertisement

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா 17ஆவது தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். அபிஷேக் சர்மா 2 ரன்னிலும், ஹெட் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். பின்னர் கொல்கத்தா அணியின் அசத்தலான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய ஹைதராபாத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.எய்டன் மார்க்ரம் 20 ரன்னும், நீதிஷ் ரெட்டி 13 ரன்னும், கிளாசன் 16 ரன்னும் எடுத்து வரிசையாக விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். இறுதியில் கேப்டன் கம்மின்ஸ் 19 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. கொல்கத்தா தரப்பில் ஆண்ட்ரே ரஸல் 3 விக்கெட்டுகளும், ஹர்ஷித் ராணா மற்றும் மிட்செல் ஸ்டார்க் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Advertisement

114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களமிறங்கியது. கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுனில் நைரன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஜோடி அபாரமாக விளையாடியது. 39 ரன்கள் எடுத்திருந்த போது குர்பாஸ் ஆட்டமிழந்தார். பின் களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் - வெங்கடேஷ் ஐயருடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடியது. 10.3 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றியடைந்தது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ், 26 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். கொல்கத்தா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆட்ட நாயகன் விருது பெற்றார். முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கடந்த 2012 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னை மண்ணில் 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது கொல்கத்தா அணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும், ஒவ்வொரு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி முடிவடைந்த பிறகும் அந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு பல விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த 17-வது ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயலாற்றிய வீரர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது. அந்த விருதுகளை வென்ற வீரர்களின் பட்டியலை பற்றி தற்போது பார்ப்போம்.

விருதுகளும், வீரர்களும்

சாம்பியன் பட்டம் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 20 கோடி பரிசுத்தொகை
2-வது இடம் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – 12.5 கோடி
தொடரின் நாயகன் – சுனில் நரேன் (கேகேஆர்) – 10 லட்சம்
ஆரஞ்சு தொப்பி (அதிக ரன் அடித்தவர்) – விராட் கோலி (741 ரன்கள்- ஆர்சிபி) – 10 லட்சம்
பர்பிள் தொப்பி (அதிக விக்கெட்டுகள்) – ஹர்ஷல் பட்டேல் (24 விக்கெட் – பஞ்சாப் கிங்ஸ்) – 10 லட்சம்
மிகுந்த மதிப்புமிக்க வீரர் – சுனில் நரேன் (488 ரன்கள் , 17 விக்கெட்டுகள்) – 10 லட்சம்
வளர்ந்து வரும் வீரர் – நிதிஷ் குமார் ரெட்டி (ஹைதராபாத்) – 10 லட்சம்
அறத்துடன் தொடரை விளையாடிய அணி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – 10 லட்சம்
சீசனின் சிறந்த பிட்ச் மற்றும் மைதானம் – ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் – 10 லட்சம்

Tags :
Advertisement