For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஐபிஎல் 2024-சீசனுக்கான வீரர்களை எடுக்கும் மினி ஏலம்-முழு விபரம்!

10:02 PM Dec 19, 2023 IST | admin
ஐபிஎல் 2024 சீசனுக்கான வீரர்களை எடுக்கும் மினி ஏலம் முழு விபரம்
Advertisement

2024ஆம் ஆண்டின் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற உள்ள 17ஆவது இந்தியன் பிரீமியர் லீக் சீசனுக்கான வீரர்களை எடுக்கும் மினி ஏலம் இன்று நடைபெற்றது. வெறும் 77 இடங்களுக்கு 333 வீரர்கள் ஏலத்தில் கடும் போட்டியில் ஈடுபட்டனர். இவர்களில் 214 பேர் இந்தியாவையும், 119 பேர் வெளிநாடுகளையும் சேர்ந்தவர்கள். ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பதற்காக மொத்தம் 1,116 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களில் தகுதியின் அடிப்படையில் 333 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளார்கள்.

Advertisement

இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள், இந்திய பேட்டர்கள், இந்திய ஆல்ரவுண்டர்கள், வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்கள், வெளிநாட்டு ஆல்ரவுண்டர்கள் என ஒவ்வொரு அணிக்கும் வெவ்வேறு தேவைகள், வெவ்வேறு இடங்களில் உள்ளன. . இந்த மினி ஏலத்தை வழிநடத்தினார் மல்லிகா சாகர். இதன்மூலம் ஐபிஎல் ஏல வரலாற்றில் முதல் பெண் ஏலம் விடுபவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் 25 ஆண்டுகளாக ஏலதாரராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவர் அதிகமாக கலைப் பொருள்களை ஏலம் விடும் நிகழ்வுகளில் ஏலதாரராக பணியாற்றியிருக்கிறார். அதில் கொண்டிருக்கும் நீண்ட அனுபவத்தை வைத்தே விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏலதாரராக மாறியுள்ளார். இவர் இந்த ஏலத்திற்காக 2 கோடியே 25 லட்ச ரூபாயை சம்பளமாக பெறுகிறார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 2018- ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை ஹ்யூக் எட்மடஸ் என்பவர் ஐ. பி. எல். தொடரின் ஏலத்தை நடத்தி வந்தார். அதற்கு முன் ரிச்சர்ட் மேட்லி என்பவர் ஏலத்தை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்த ஐபிஎல் வரலாற்றில் போணியாகாத வீரர்கள்(Unsold) விபரம்:

இந்திய வீரர்கள் மனீஷ் பாண்டே, கருண் நாயர், ஆஸி வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை எந்த அணியும் வாங்க ஆர்வம் காட்டவில்லை. ஆப்கன் வீரர் முஜீப் ரஹ்மானை எந்த அணியும் வாங்கவில்லை. அவரின் அடிப்படை விலை ரூ.2 கோடி. மற்றொரு ஆப்கன் வீரர் முகமது வக்கார் சலாம்கெயில் UNSOLD வீரரானார். நியூஸிலாந்து ஸ்பின்னர் இஷ் சோதியை அணிகள் வாங்கவில்லை. இலங்கை கீப்பர் குஷல் மெண்டிஸை அணிகள் வாங்க ஆர்வம் காட்டவில்லை. இங்கிலாந்து நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷீத்தை எந்த அணியும் வாங்கவில்லை.

மேற்கிந்திய தீவு வீரர் அகேல் ஹுஸைனை UNSOLD வீரரானார். இங்கிலாந்து கீப்பர் பிலிப் சால்ட்டை எந்த அணியும் வாங்கவில்லை. ஆஸியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட்டை எந்த அணியும் வாங்கவில்லை. உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர் சர்ப்ராஸ் கானை எந்த அணியும் வாங்க ஆர்வம் காட்டவில்லை. 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பை வெல்ல காரணமாக இருந்த ராஜ் அங்கத் பாவாவையும் எந்த அணிகளும் வாங்கவில்லை. தென் ஆப்பிரிக்க வீரர் தப்ரைஸ் ஷம்சியின் அடிப்படை விலை ரூ.50 லட்சம் என அறிவிக்கப்பட்டது. எனினும் அவரை அணிகள் வாங்க விரும்பவில்லை

மொத்தத்தில் இன்றைய ஏலம்த்தில் யாருக்கு எவ்வளவு தொகை?

ஐபிஎல் 2024 மினி ஏலத்தில் முதல் வீரராக மே.இ.தீவுகள் வீரர் ரோவ்மன் பவலை ₹7.4 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

ஐபிஎல் வரலாற்றில் அதிக ஏலத் தொகை எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை பாட் கம்மின்ஸ் பதிவுச் செய்த சில மணிநேரத்திலேயே, அதனை உடைத்து புதிய வரலாறு படைத்துள்ளார் சக அணி வீரர் மிட்செல் ஸ்டார்க். அவரை ரூ.24.75 கோடிக்கு வாங்கியுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். கடந்த ஆண்டு சாம் கரணை ₹18.5 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்ததே அதிகபட்ச தொகையாக இருந்தது.

இந்திய வீரர் ஷிவம் மாவியை ₹6.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி!

இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்கை ₹4 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது டெல்லி கேபிடல்ஸ் அணி

இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்வை ₹5.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கடும் போட்டியிட்டு ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை ரூ.6.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்.

மீண்டும் சென்னை அணியில் ஷர்துல் தாக்கூர்.. ₹4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சி.எஸ்.கே அணி

இந்திய வீரர் கே.எஸ்.பரத்தை அடிப்படை விலையான ₹50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா அணி

அடிப்படை விலையான ₹1.5 கோடிக்கு இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்காவை ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இந்திய வீரர் சேத்தன் சக்காரியாவை அடிப்படை விலையான ₹50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா அணி

தென்னாப்பிரிக்க வீரர் ஜெரால்டை ₹5 கோடிக்கு ஏலம் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி

இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்சை ₹4.20 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்

மே.இ.தீவுகள் வீரர் அல்சாரி ஜோசப்பை ₹11.5 கோடிக்கு ஏலத்திற்கு எடுத்தது பெங்களூரு அணி

இந்திய வீரர் ஹர்ஷல் படேலை ₹11.75 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி

தற்போது தேசிய அணிக்காக விளைாடிய வீரர்களுக்கான (Capped Players) ஏலம் நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து, தேசிய அணிக்கு விளையாடாத வீரர்களுக்கான (Uncapped Players) ஏலம் அடுத்து நடைபெற உள்ளது.

Tags :
Advertisement