தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

அத்துமீறும் டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள், விளம்பர அழைப்பு, எஸ்எம்எஸ் தொந்தரவு - கனிமொழி சோமு அதிருப்தி

08:52 PM Dec 07, 2023 IST | admin
Advertisement

வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசியப் பொருளாகிவிட் டது செல்போன். இதை விளம்பர நிறுவனங்கள் தங்களுக்கு சாதக மாகப் பயன்படுத்தி, செல்போன் அழைப்புகள், எஸ்எம்எஸ் மூலம் அனைவருக்கும் தொல்லை கொடுக்கின்றன. செல்போன்கள் மூலம் விளம்பரங்கள் செய்ய ஏராளமான ‘டெலி மார்க்கெட்டிங்’ நிறுவனங்கள் உள்ளன. நமக்கு ‘சிம் கார்டு’ கொடுக்கும் செல்போன் சேவை நிறுவனங்களிடம் இருந்து செல்போன் எண்களை பெற்றுக் கொள்ளும் டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள்தான் இதுபோல தேவையற்ற அழைப்புகள், எஸ்எம்எஸ்களை அனுப்பி தொல்லை கொடுக்கின்றன. இந்த நிறுவனங்களைக் கட்டுப் படுத்தும் அதிகாரம், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு (ட்ராய்) உள்ளது. தேவையற்ற அழைப்புகள், குறுஞ் செய்திகளை கட்டுப்படுத்தும் வகை யில், ‘தேவையற்ற அழைப்புகளின் பதிவு’ என்ற புதிய திட்டம் உருவாக் கப்பட்டது. இதன்பிறகு, சில மாதங்கள் கட்டுப்பாட்டில் இருந்த டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள் இப்போது மீண்டும் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளன.

Advertisement

இந்நிலையில் விடிவது தொடங்கி நள்ளிரவு வரை வாடிக்கையாளர்களை தொல்லைப்படுத்தும் வகையில் செல்போன்களில் தொடர்ந்து வரும் வணிக ரீதியான அழைப்புகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி சோமு வலியுறுத்தினார் முன்னாள்.குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 2010-ல் மத்திய நிதியமைச்சராக இருந்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லியுடன் முக்கியமான விவாதத்தில் இருந்தபோது, அவரது செல்போன் ஒலித்தது. அதை எடுத்துப் பேசிய பிரணாப்பின் முகம் திடீரென மாறியது. ‘நோ, நோ. எதுவும் வேண்டாம். முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறேன்’ என்று கோபத்துடன் கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.‘வீடு கட்ட லோன் வேண்டுமா?’ என்று பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து வந்த டெலி மார்க்கெட்டிங் அழைப்பு என்று பின்னர் தெரியவந்தது. தங்களுக்கும் இதுபோன்ற அநாவசிய அழைப்புகள், எஸ்எம்எஸ்கள் வந்து தொல்லை கொடுப்பதாக வெங்கைய நாயுடு உள்ளிட்டோரும் கூறினர். இது உடனடியாக தொலைத்தொடர்பு துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, இதுபோன்ற ‘அத்துமீறல்’ அழைப்புகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தற்போது மாநிலங்களவையில் நேரமில்லா நேரத்தில் கனிமொழி என்.வி.என்.சோமு இப்பிரச்னைக் குறித்து பேசியது:

செல்போன்கள் தகவல் தொடர்பில் எந்தளவுக்கு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதோ, அதே அளவுக்கு தொல்லை தரும் சாதனமாகவும் மாறியிருக்கிறது. அந்தளவுக்கு அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை வணிக நோக்கத்திலான அழைப்புகள் தொடர்ச்சியாக வந்து வாடிக்கையாளர்களை எரிச்சலுக்கும் சங்கடத்திற்கும் ஆளாக்குகின்றன.இந்த தொல்லையிலிருந்து வாடிக்கையாளர்களைக் காக்கும் வகையில், 2007ம் ஆண்டு இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), ‘தேவையில்லாமல் அழைத்து தொல்லைப்படுத்த வேண்டாம்’ என்ற விருப்பத்தைப் பதிவு செய்யும் வகையில் ஒரு பதிவேட்டை ஆரம்பித்தது. செல்போன் பயன்படுத்தும் மொத்த வாடிக்கையாளர்களில் 74 சதவிகிதம் பேர் இப்படி தொல்லையை தவிர்க்க கோரிக்கை வைத்திருந்ததாக ஆவணங்கள் சொல்கின்றன.

ஆனாலும் இத்தகைய தொல்லை அழைப்புகள் குறைந்தபாடில்லை. மிக அதிக அளவிலான எஸ்.எம்.எஸ்.களும் தொடர்ந்து வருகின்றன. அப்படியானால் இத்தகைய அழைப்புகளை கட்டுப்படுத்த ஒன்றிய அரசின் சம்பந்தப்பட்ட துறைகள் எடுத்த நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களின் செல்போன் எண்கள் இந்த தனியார் நிறுவனங்களுக்கு எப்படி கிடைக்கிறது, இப்படி ஒருவரின் ஒப்புதல் இல்லாமல் அவரது செல்போன் எண்ணை மூன்றாம் நபருக்கு தருவதும், ஒப்புதல் இல்லாமல் சம்பந்தப்பட்ட நபரை அவர்கள் அழைப்பதும் தனிமனித சுதந்திரத்தை, உரிமையை மீறும் செயலாகும். எனவே இந்த பிரச்னையில் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

டிராய் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் முழு ஒத்துழைப்பை அளிக்கும் வகையில், தேவையற்ற அழைப்பை விரும்பாதவர்களுக்கான பதிவேட்டை அர்த்தமுள்ள வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும். பதிவுபெறாத ஆன்லைன் மற்றும் டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களை ஒழுங்குபடுத்த போதிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.தேவையற்ற அழைப்புகள் தொடர்பாக வாடிக்கையாளர்கள் டிராயிடம் புகார் தெரிவிப்பதில் இப்போது பல சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றை சரிப்படுத்தி புகார் தெரிவிக்கும் வழிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். இவ்வாறு கனிமொழி என்விஎன்.சோமு பேசினார்.

Tags :
Advertising CallingDissatisfiedIntrusiveKanimozhi SomumpSMS HarassmentTelemarketing Companies
Advertisement
Next Article