தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பலருக்கு வாழ்வாதாரமான யூடியூபில் 3 புதிய அம்சங்கள் அறிமுகம்!

08:54 PM Oct 17, 2024 IST | admin
Advertisement

ப்பவும் நினைவில் இருக்கும் சம்பவம். மூன்று நண்பர்கள் இணையத்தில் ஒரு வீடியோவைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அந்த வீடியோவில் ஜேனட் ஜாக்சன் (Janet Jackson) நடித்திருந்தார். பிரபல நடிகை, பாடகி, நடனக்கலைஞர். அது ஸ்டேஜ் ஷோ. `சூப்பர் பவுல் ஹாஃப்டைம் ஷோ.’ அந்த இளைஞர்கள் தேடியது ஒரு கிளுகிளுப்புக்காக. குறிப்பிட்ட அந்த வீடியோவில் ஜேனட் ஜாக்சனின் தன் மார்பகத்தை ஒரு நகையால் மூடியிருந்தார். அதை உடன் நடித்திருந்த ஜஸ்டின் டிம்பர்லேக் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருந்தார். ஒரு செகண்டுக்கும் குறைவான நேரமே அந்தக் காட்சி தெரிந்திருந்தது. அதை `Wardrobe Malfunction' என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள். ஸ்டேஜில் நடிகைகளின் ஆடை கிழிந்துபோவது, அவிழ்ந்து விழுவது, ஆபாசமாகத் தெரிவது இந்த ரகம். அப்போது அந்தச் சம்பவத்தை `Nipplegate’, `Janetgate’ என்றெல்லாம் ஊடகங்கள் குறிப்பிட்டன; கூடவே, அநாகரிகமான செயல் என்ற கண்டனங்களும் எழுந்தன.

Advertisement

இந்தச் சம்பவம் எப்படி நிகழ்ந்தது, விளைவுகள் என்னென்ன என்பது தனிக்கதை. விஷயத்துக்கு வருவோம். அந்த மூன்று நண்பர்கள் எவ்வளவு தேடியும் வீடியோ கிடைக்கவில்லை. அவர்களுக்கு ஒன்று புரிந்தது. இணையத்தில் குறிப்பிட்டு ஒரு வீடியோவைத் தேடினால் கிடைக்காது. பார்க்க முடியாது. முக்கியமான வீடியோக்களைப் பதிவுசெய்ய ஒரு தளம் இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள். மூவரும் என்ன செய்தார்கள் என்பதுதான் வரலாறு. இந்த இடத்தில் ஒரு சின்ன பிரேக். அந்த மூவரில் மூளையாகச் செயல்பட்ட ஒருவர் ஜாவத் கரீம் (Jawed Kareem). அவரைப் பற்றி ஒரு சிறு குறிப்பு இங்கே அவசியமாகிறது.

1979, அக்டோபர் 28-ல் கிழக்கு ஜெர்மனியின் மெர்ஸ்பர்க் (Merseburg) நகரில் பிறந்தவர் ஜாவத் கரீம். அம்மா ஜெர்மானியர். அப்பா பங்களாதேஷ்காரர். ஐந்து வயது இருக்கும்போது கரீமின் குடும்பம் ஜெர்மனிக்கு இடம்பெயர்ந்தது. பிறகு அங்கிருந்து அமெரிக்காவின் மின்னசோட்டாவுக்கு குடிபோனது. கரீம் மின்னசோட்டாவில் இருக்கும் ஹைஸ்கூலில் படித்தார். பிறகு, இல்லினாய்ஸ் யூனிவர்சிட்டியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் பெற்றார். அங்கேதான் அவருக்கு இரண்டு நண்பர்கள் அறிமுகமானார்கள். சாட் ஹர்லே (Chad Hurley), ஸ்டீவ் சென் (Steve Chen).

Advertisement

விஷயத்துக்கு வருவோம். ஒரு கேரேஜில் உட்கார்ந்து மூன்று பேரும் யோசித்தார்கள். ஒரு வெப்சைட்டை உருவாக்கினார்கள். அதற்குப் பெயர் யூடியூப் (YouTube). 2005-ம் ஆண்டு அந்த இணையதளம் உலகுக்கு அறிமுகமானது. `You' என்றால் நீங்கள் என அர்த்தம். `Tube' என்றால், அன்றைக்கு தொலைக்காட்சி உலகில் பார்வையாளர்கள் தொடர்வதற்காகப் புழக்கத்தில் இருந்த ஒரு வார்த்தை. இரண்டையும் சேர்த்து `YouTube' எனப் பெயர் வைத்தார்கள். அந்த இணையதளத்தில் யார் வேண்டுமானாலும் தங்களின் வீடியோக்களைப் பதியலாம். படத்தின் டிரெய்லர், சமையலறைக் குறிப்புகள், பாடல், நடனம், தொலைக்காட்சி லைவ் ஷோக்களின் தொகுப்பு, பிரபல திரைப்படங்களின் முக்கியமான காட்சிகள், முழுத் திரைப்படங்கள்... எதை வேண்டுமானாலும் பதிவுசெய்யலாம். கிறுகிறுவெனப் பிரபலமானது யூடியூப். ஒரே வருடம். கூகுள் நிறுவனம் யூடியூபை ஆச்சர்யமாகப் பார்த்தது. `இது புதுசா இருக்கே...’ என யோசித்தது. `இதை நாம வாங்கியே ஆக வேண்டும்’ என முடிவெடுத்தது. 2006-ம் ஆண்டு, கூகுள் நிறுவனம் யூடியூபை 1.65 பில்லியன் டாலர் கொடுத்து விலைக்கு வாங்கியது. இணையதள வரலாற்றில் இது ஒரு முக்கியமான நிகழ்வு. ஒரு டெக் கம்பெனி, ஒரு சோஷியல் மீடியா தளத்தை அதிக விலை கொடுத்து வாங்கிய நிகழ்வு.

அப்பேர்பட்ட யூ டியூப்பில் பிரீமியம் பயனர்கள் மட்டுமல்லாமல் அனைத்துவகையான பயனர்களும் பயன்பெறும் வகையில் 3 புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது ஸ்லீப்பர் டைம் என்னும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு சாதனத்தை தானாகவே அணைக்கும் அம்சத்தை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது. முன்பு பிரீமியம் பயனர்களுக்கு மட்டுமே இருந்த இந்த அம்சம், தற்போது அனைத்துவகையான பயர்களுக்கும் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் யூடியூப் நிறுவனம், பயனர்களுக்கு விடியோக்களாக அனைத்துவிதமான தகவல்களையும் வழங்குகிறது. இதனால், இதனைப் பயன்படுத்துபவர்கள் அதிகம். கூகுளை பயன்படுத்தும் அனைவரும் யூடியூபையும் பயன்படுத்துவார்கள் எனலாம்.பயனர்களின் வசதிக்கேற்ப யூடியூப் அவ்வபோது பல்வேறு புதிய அம்சங்களையும், விதிமுறைகளையும் வகுத்துவருகிறது. அந்த வகையில் தற்போது அனைத்து பயனர்களும் பயன்பெறும் வகையில் 3 புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.

முதல் அம்சம்.

யூடியூபில் ஒளிபரப்பாகும் விடியோக்களின் வேகத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்யலாம். இதற்கு முன்பு 0.25 புள்ளிகள் மட்டுமே குறைக்க முடியும். ஆனால் தற்போது மிகவும் துல்லியமாக 0.05 புள்ளிகள் வரை விடியோக்களின் வேகத்தைக் குறைக்கலாம். இதேபோன்று 2x வேகத்தில் வேகத்தையும் கூட்டலாம். அதே சமயம், தனிப் பயனர்களுக்கு (customize) மட்டுமே இந்த அம்சம் உள்ளது.

இரண்டாவது அம்சம்.

ஸ்லீப்பர் டைம் என்னும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு சாதனத்தை தானாகவே அணைக்கும் வசதி. இதன்மூலம் 10, 15, 20, 30, 45 நிமிடங்கள் அல்லது ஒரு மணிநேரம் என்ற குறிப்பிட்ட இடைவேளைக்குப் பிறகு செயலியில் இருந்து வெளியேறி திரை தானாக அணைந்துவிடும்.பயனர்கள் இந்த நேரத்தை தங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம்.

மூன்றாவது அம்சம்.

செல்போனை கிடைமட்டமாக அல்லாமல் குறுக்குவெட்டாகப் பயன்படுத்தும்போதும், அதாவது முழுத் திரையில் பயன்படுத்தும்போதும் பிரவுஸிங் செய்யலாம்.
இது ஐஓஎஸ் தளங்களில் மட்டுமே சாத்தியமாவதாகவும் யூடியூப் தெரிவித்துள்ளது.பாடல்களுக்கெட் தனியாக யூடியூப் மியூசிக் என்ற அம்சத்தை கடந்த ஆண்டு யூடியூப் அறிமுகம் செய்திருந்தது இசைப்பிரியர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Tags :
YouTube
Advertisement
Next Article