For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

காசாவில் மீண்டும் இணையசேவை- பாலஸ்தீனம் தகவல்!

01:25 PM Oct 29, 2023 IST | admin
காசாவில் மீண்டும் இணையசேவை  பாலஸ்தீனம் தகவல்
Advertisement

போரால் பாதிக்கப்பட்டுள்ள காசாவில் இணைய சேவைகளும் தொலைத்தொடர்பு சேவைகளும் முழுக்க துண்டிக்கப்பட்டு அங்கிருக்கும் சுமார் 23 லட்சம் மக்களிடையே பெரும் பீதியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருந்தது. மேலும் காசாவில் இருக்கும் பொதுமக்களுக்கு உதவி வரும் மருத்துவ உதவி அமைப்புகள், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 27) அங்குள்ள இணையம் மற்றும் தொலைபேசி தொடர்புகள் செயலிழந்ததால், களத்தில் உள்ள தங்கள் குழுக்களுடன் பேச முடியவில்லை என்று தெரிவித்திருந்த நிலையில் அங்கு மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது.

Advertisement

காசா நகரில் இஸ்ரேல் ராணுவம் சமீபத்தில் தொடங்கப்பட்ட தரைவழி தாக்குதலால் தொலைத்தொடர்பு கேபிள்கள் சேதமடைந்ததால் இணைய சேவை நிறுத்தப்பட்டது. அதை அடுத்து காசா எல்லைப் பகுதியில் இணைய சேவைகளை வழங்க எலான் மாஸ்க் முன்வந்துள்ள நிலையில் தற்போது அனைத்து கேபிள்களும் சரிசெய்யப்பட்டதையடுத்து இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த 7ஆம் தேதி தொடங்கி 20 நாட்களை கடந்து இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதனிடையே இருதரப்பும் போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் தாக்குதல் அதிகரித்து வருவதால் பதற்றமான சூழலே நிலவி வருகிறது. குறிப்பாக ஹமாஸ் அமைப்பினர் அதிகம் வசிக்கும் பாலஸ்தீனிய நாட்டின் காசா நகரில் இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதலை தொடர்ந்து, தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலால் இதுவரை சுமார் 7000 மக்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முடங்கிய இணையதள சேவைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல், தொலைபேசி மற்றும் இணையத் தொடர்புகள் காசாவில் மீண்டும் சரிசெய்யப்பட்டு வருகிறது என்று அப்பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு வழங்குநர்கள், இணையதள குழு உறுதிப்படுத்தியுள்ளனர்.

Tags :
Advertisement