தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

சர்வதேச புலிகள் தினம்!

06:10 AM Jul 29, 2024 IST | admin
Advertisement

ந்தியாவைப் பொறுத்த வரை, புலி நம் நாட்டின் பெருமை. புலி தான் நம்முடைய தேசிய மிருகம் (National Animal). இந்திய புலிகள் அவற்றின் கம்பீரம் மற்றும் தோற்றத்திற்காக உலகெங்கிலும் புகழ் பெற்றவை.இப்பேர்பட்ட புலிகளை கண்டு 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை மனிதன் பயந்து கொண்டிருந்தான். 100 ஆண்டுகள் கழித்து புலிகள் மனிதர்களை கண்டு பயந்து கொண்டிருக்கின்றன. பரிணாம வளர்ச்சியில் இயற்கையின் அத்தனை அம்சங்களையும் தனதாக்கி கொண்டே வந்த மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக அதனை அழித்து தனக்கு தானே சவக்குழியை நொண்டி கொண்டான். தற்போது அழிவின் விழிம்பில் இருப்பது புலிகள் மட்டுமல்ல, அடுத்து வரும் மனித இனமும்தான் என்பதை இன்னும் அவர்கள் உணர்ந்தபாடில்லை. ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டத்தில் அதிகமாக வாழ்ந்து வந்த புலிகள் இன்று சுருங்கி சுருங்கி உலகத்திலேயே 5000த்திற்கும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே வாழ்ந்து வருகின்றன என்ற தகவல் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். வேட்டையாடுதல், கடத்தல், தோலுக்காக கொலை செய்தல் என பல்வேறு விஷயங்களுக்காக புலிகளை கொன்று கொன்று காடுகளின் பாதுகாவலன் என சொல்லப்படும் புலி இனத்தையே கூண்டோடு வேரறுத்து வைத்திருக்கிறது மனித கூட்டம்.காடுகளின் உணவு மற்றும் உயிர்சூழற்சியை பாதுகாக்க புலிகளின் இருத்தல் மிக அவசியம். ஆனால், இன்றும் புலிகளுக்கு இருக்கும் ஆபத்தின் விளைவாகவும், அவை அழிந்து வரும் மிருகங்களின் பட்டியலில் இருப்பதாலும் பெரும்பாலும் சரணாலயங்களில் வைத்தே பாதுகாக்கப் பட்டு வருகின்றன. தற்போதைய கணக்கெடுப்பின்படி தோராயமாக உலகம் முழுவதும் 4500 புலிகள் மட்டுமே உயிர் வாழ்ந்து வருகின்றன. அழிந்து வரும் இந்த மிருக இனத்தை பாதுகாக்கவே சர்வதேச புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Advertisement

காட்டுக்கு அரசன் சிங்கம் என்றாலும், வனத்திற்குள் கம்பீரமாக தனி நடை போட்டு வாழ்ந்து வரும் ஓர் இனம் புலி. உணவுச் சங்கிலியில் முக்கிய இனமாகக் கருதப்படுகிறது. புலிகளைக் கூட்டம் கூட்டமாகக் காண்பது மிகவும் அரிது. புலிகள் ஒரு தனிமை விரும்பி. அதிலும் முக்கியமாக ஆண் புலி பெரும்பாலும் தனியாகத்தான் வேட்டையாடும். புலிகள் மரம் ஏறும். நீச்சல் அடிக்கும். வேட்டை ஆடுவதில் புலிகளை மிஞ்ச முடியாது. இந்தியாவின் தேசிய விலங்கு புலி. தொன்றுதொட்டு சோழ அரசர்களின் அடையாளச் சின்னமாக விளங்கியது புலி.

Advertisement

நம் முன்னோர்கள் புலிகளை நேரடியாகப் பார்த்திருப்பார்கள். தற்போதைய காலத்தில், காடுகளிலோ, புல்வெளிகளிலோ நேரடியாகப் புலிகளை பார்த்தவர்கள் மிகவும் அரிது. டி.வி. சேனல்களிலும், மிருகக் காட்சி சாலைகளிலும் நாம் புலியைப் பார்க்கிறோம். இனி வரும் சந்ததியினர் மிருகக் காட்சி சாலைகளிலாவது புலிகளைப் பார்க்க முடியுமா என்றால், கேள்விக் குறிதான். ஆம்.. உலகம் முழுவதும் சுமத்ரான், சைபீரியன், மலேசியன், காஸ்பியன், ஜவான், பாலினீஸ், பெங்கால், இந்தோசீனா, தென்சீன புலிகள் என்று 9 வகையான புலிகள் இருந்தன. அதில் ஜவான், காஸ்பியன், தென்சீன புலி வகை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. சுமத்ரான் வகை புலிகள் அழியும் நிலையில் இருக்கின்றன. உலகிலேயே இந்திய - வங்கதேச எல்லையில் உள்ள சுந்தரவனக்காடுளில்தான், புலிகள் அதிகளவில் வாழ்கின்றன. இவ்வகை புலிகள் "ராயல் பெங்காலி புலிகள்" என அழைக்கப்படுகின்றன.

Caged tiger, Indiana, United States

உலகம் முழுவதும் இதுவரை 93% புலிகள் அழிந்துவிட்டன. தற்போதைய நிலவரப்படி உலகில் வாழும் புலிகளில் 85 சதவீதத்திற்கும் மேல் இந்தியாவில் தான் வாழ்ந்து வருகின்றன. இந்தியாவில் உள்ள 20 மாநிலங்களுக்கும் மேல் புலிகள் வாழ்விடமாக இருந்து வருகிறது. 1973ம் ஆண்டிலிருந்தே இந்தியாவில் புலிகளை பாதுகாப்பதற்கான பல்வேறு திட்டங்கள் அமலில் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 200 புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 2021ம் ஆண்டு 2967 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை, தற்போதைய நிலவரப்படி 3167ஆக இருப்பதாக கூறப்படுகிறது.

காலம் செல்ல செல்ல, புலிகள் அழிந்து கொண்டே வருவதால், புலிகள் இனத்தைப் பாதுகாப்பதற்காகவே, பாதுகாப்பதின் அவசியத்தை வலியுறுத்தி 2010-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொர் ஆண்டும் ஜூலை 29-ம் தேதியை சர்வதேச புலிகள் தினமாக கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இருந்தும் உலகம் முழுவதும் தற்போது 3,890 புலிகளை மட்டுமே விட்டு வைத்திருக்கிறோம்.என்னதான் புலிகளை பாதுகாக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் இன்னும் அவற்றை வேட்டையாடுவதும், சட்டவிரோதமாக கொலை செய்வதும் நின்ற பாடில்லை. இதில் காடுகளின் அழிவும், மலைப்பகுதிகளில் நடக்கும் குடியமர்வும் அவற்றை உணவுக்காக, உறைவிடத்துக்காக மக்கள் பகுதியை நோக்கி தள்ளுகிறது. இதனால், மனிதர்களுக்கும் புலிகளுக்கும் இடையிலான முரண்பாடு வளர்ந்து கொண்டே இருக்கிறது. இயற்கை விதியின்படி மனிதன் வாழ வேண்டுமென்றால், உயிரினங்கள் வாழ வேண்டும். மரங்கள், காடுகள் , ஆறுகள் என எல்லாம் வாழ வேண்டும். அதில் முதன்மையானவை புலிகள் என்பதை உணர வேண்டும்.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
annual celebrationawarenessGlobal Tiger DayInternational Tiger Dayபன்னாட்டு புலிகள் நாள்புலி
Advertisement
Next Article