For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பன்னாட்டு பால் நாள்!

01:13 PM Jun 01, 2024 IST | admin
பன்னாட்டு பால் நாள்
Advertisement

நா சபையால் ’உலக உணவு’ எனப் பால் அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது. மனிதர்களுக்கான வரம் அது. டீ, காபி, தயிர், மோர், வெண்ணெய், நெய் என நம் வாழ்வின் முக்கிய அங்கமாக விளங்கும் அது, நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களுள் மிகவும் இன்றியமையாத ஒன்றும் கூட. நம் உடல் ஆரோக்கியத்திற்கு அதில் இருக்கும் நன்மைகள் கணக்கிலடங்காதவை. உடலின் வலிமையை அதிகரிக்க உதவும் பல்வேறு ஊட்டச்சத்து கூறுகள் அதில் நிறைந்துள்ளன. தினமும் 500 மி.லி. அளவு பாலைக் கண்டிப்பாக அருந்துவது உடல்நலனுக்கு உகந்தது நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதை சகலரும் அறியவே ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி ‘உலக பால் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது

Advertisement

பாலூட்டி வகையைச் சேர்ந்த பசு, எருமை, ஆடு, குதிரை, ஒட்டகம் போன்ற விலங்குகளிடமிருந்து பால் பெறப்படுகிறது. பால் மற்றும் பால் பொருட்கள் ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகளாக இருக்கின்றன. இதில் இயற்கையான ஊட்டச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம் உடன் லாக்டின் (புரதம்), லாக்டோசு (இரட்டைச் சர்க்கரை) உள்ளிட்டவை அடங்கியுள்ளன.இது 'Power House Beverage' என்று அழைக்கப்படுகிறது. உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களின் குறைபாட்டையும் பால் பெருமளவுக்கு ஈடுசெய்யும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பால் குடிக்க நிபுணர்கள் பரிந்துரைப்பதற்கு இதுவே காரணம்

Advertisement

பால் தரும் பயன்கள்

தினசரி காலையில் சூடான பாலை உட்கொள்வது நல்லது. எலும்புகளை வலிமையாக்கப் பாலில் அதிக அளவில் இருக்கும் கால்சியம் உதவும். கால்சியம் எலும்புகளை வலுவாக்கும், கீல்வாத நோயின் தாக்கத்தைத் தடுக்கும்.

உடல் எடையைக் குறைக்க விரும்பினால், தினசரி காலையில் பாலை உட்கொள்ளத் தொடங்குங்கள்.

மன அழுத்தத்தை உணர்ந்தால், காலையில் சூடான பாலை உட்கொள்ள வேண்டும். பாலில் இருக்கும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மன அழுத்தத்தை நீக்க உதவுகின்றன.

தினசரி காலையில் பால் உட்கொள்வதன் மூலம் பலவீனத்தைத் தவிர்க்கலாம், உடலை உற்சாகப்படுத்தலாம்.

பெண்கள் மாதவிடாய் காலத்தில் காலையில் சூடான பாலைக் குடிக்க வேண்டும். பாலில் இருக்கும் கால்சியம், ஏராளமான வைட்டமின்கள் அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும்.

தூக்கமின்மையால் அவதிப்படும் நபர்கள் இரவில் பால் பருக வேண்டும். தூக்கம் தொடர்பான கோளாறுகளுக்கு நிவாரணம் அளிக்கப் பால் உதவுகிறது.

இரவில் பால் உட்கொள்வதன் மூலம், செரிமானப் பிரச்சினைகளைக் களையலாம்.

பெண்கள் தங்கள், முகத்தைப் பொழிவுடன் வைத்திருக்கத் தினசரி இரவில் பால் உட்கொள்ள வேண்டும்.

ரத்தக் கொதிப்பு, உடல் பருமன், இதய நோய், புற்றுநோய், நீரிழிவு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் பாலை அருந்துவது நல்லது.

சிறுநீரக கற்கள் இருக்கும் நோயாளிகள் கூட பாலை அருந்தலாம்.

பாலில் வைட்டமின் பி12 உள்ளது. வைட்டமின் பி 12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமானது

பாலில் பொட்டாசியம் உள்ளது. பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்துக் கொள்ளும்

கால்சியத்தின் சிறந்த ஆதாரமாக பால் கருதப்படுகிறது. கால்சியம் நம் உடலுக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இது எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், தசை வலிமை, நரம்பு செயல்பாடு மற்றும் இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்துவதில் பங்கு வகிக்கிறது. கால்சியம் குறைபாடு ஆஸ்டியோபீனியா, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு முறிவுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. 100 மி.லி. பாலில் 128.9 மி.கி கால்சியம் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தினமும் பால் குடித்து வந்தால் உடலில் கால்சியம் குறைபாடு நீங்கும்.

Tags :
Advertisement