தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

சர்வதேச பட்டம் விடும் திருவிழா: மாமல்லபுரத்தில் 18ம்தேதி வரை நடக்கிறது!

06:27 PM Aug 16, 2024 IST | admin
Advertisement

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை திருவிடந்தை கடற்கரையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை தனியாருடன் இணைந்து நேற்று (15–ந் தேதி) தொடங்கி 18–ந் தேதி வரை நடைபெற உள்ள 3-வது தமிழ்நாடு சர்வதேச காத்தாடி திருவிழாவை தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.

Advertisement

பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:–

Advertisement

முதலமைச்சர் இந்தியாவிலேயே அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உருவாக்கி வருகின்றார். குறிப்பாக சுற்றுலாத்துறையில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உருவாக்கும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி உலக சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்ததன் காரணமாக உலகின் பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வருகின்றார்கள்.

தொடர்ந்து சுற்றுலாத்துறையின் மூலமாக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா, மலைவாசஸ்தலங்களில் கோடைவிழாக்கள், பொள்ளாச்சியில் பலூன் திருவிழா, சென்னை தீவுத்திடலில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களைச் சேர்ந்த கைவினை கலைஞர்கள், கைத்தறியாளர்கள் பங்கேற்ற சென்னை விழா என சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையிலான நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக தமிழ்நாடு சர்வதேச காத்தாடி விழா இந்த ஆண்டு 2024 கிழக்கு கடற்கரை சாலை திருவிடந்தை கடற்கரையில் இன்று தொடங்கி 4 நாட்கள் நடத்தப்பட உள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, தாய்லாந்து, மலேசியா, சுவிட்சர்லாந்து, வியட்நாம் மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் சர்வதேச காத்தாடி அணிகளைச் சேர்ந்த 40 பட்டம் விடும் வீரர்கள் கலந்து கொண்டு, டால்பின்கள், குதிரை, பூனை, சுறாமீன், நீலத்திமிங்கலம், தங்க மீன்கள், பாம்பு, கரடி, ஆக்டோபஸ், கொரில்லா உள்ளிட்ட வெவ்வேறு வகையான 250க்கும் மேற்பட்ட காத்தாடிகளை பொதுமக்களுக்கு காட்சி படுத்த உள்ளனர்.

இந்த காத்தாடி திருவிழாவில் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு சிறப்பை விளக்கும் வகையில் சிறப்பு பட்டத்தை தமிழக குழுவினர் பறக்க விடுவார்கள். ‘உங்கள் வாழ்க்கையை வண்ணமாக்குங்கள்’ என்பதே இந்த ஆண்டு காத்தாடி திருவிழாவின் மையபொருள் ஆகும்.

“கடந்தாண்டு 150 காத்தாடிகள் பங்கேற்றன. இந்தாண்டு பட்டம் விடுவோர் கூடுதலாக பங்கேற்பதால் அவர்கள் பறக்க விட உள்ள 250 காத்தாடிகளுக்கு அதிக இடம் தேவைப்படுவதால், கோவளத்திற்கு அருகிலுள்ள கடற்கரைப் பகுதியில் இந்த விழா நடைபெறுகின்றது. இந்த ஆண்டு திருவிழாவின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று கோப்ரா காத்தாடி ஆகும், மேலும் இந்த விழாவில் முதல் முறையாக மிகப்பெரிய ராட்சத வண்ணமயமான டெடி பியர்’ இடம்பெறப்போகிறது. இந்த காத்தாடி திருவிழா சிறப்பாக உள்ளதை தெரிவிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இன்று வருகை தந்துள்ளனர்.''என்று அமைச்சர் தெரிவித்தார்.

Tags :
festivalhappeninginternationalKitemamallapuramtill 18thதமிழ்நாடு சுற்றுலாத்துறை
Advertisement
Next Article