இந்தாண்டு,சர்வதேச யோகா தின கருப்பொருள் என்ன தெரியுமோ?
உலக யோகா நாள் (International Yoga Day) ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் நாள் கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்ததை அடுத்து சர்வதேசமே கோலாகலமாக கொண்டாடுகிறறது.பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 27, 2014 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் தனது உரையின் போது சர்வதேச யோகா தினம் பற்றிய திட்டங்களை முதன்முதலில் முன்வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட் ஐ.நா. சபை, 2014ம்ஆண்டு டிசம்பர் 11-ல் ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோக தினத்தை அறிவித்தது. 2015ஆம் ஆண்டிலிருந்து, சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தாண்டு, சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள் என்ன?
'Yoga for Women Empowerment.' என்பது இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருளாகும். பெண்களின் முன்னேற்றத்திற்காக யோகா என்பதற்கு இந்தாண்டு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பெண்களின் உடல்நலன் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்தாண்டின் கருப்பொருள் அமைந்துய்ள்ளது. பணி சுமை, பரபரப்பான வாழ்க்கை முறையில் இருந்து உடல், மன நலம் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்த யோகா உதவும். அதற்காக பெண்கள் நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக கருப்பொருள் அமைந்துள்ளது.
ஆண்களை விட அதிக அளவில் மன அழுத்தத்தில் உள்ளவர்கள் பெண்கள் ஆவர். குடும்பம், வேலை என எப்பொழுதும் பிஸியாக ஓடிக் கொண்டிருக்கும் அவர்கள், பல நேரங்களில் தங்களைப் பற்றி யோசிப்பதே இல்லை. ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தத்தை தவிர்க்க பிரணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி மற்றும் யோகா பெரிதும் பயன்படுகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் நோய்களையும் தடுத்து நிறுத்த முடியும் என்கின்றனர் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.
பொதுவாக அதிகாலை நேரத்தில் எழுந்து மூச்சுப் பயிற்சி செய்வதன் வாயிலாக நுரையீரல் பிரச்னைகள் நீங்கும். இதயத்துடிப்பு சீராக இருக்கும். கர்ப்பப்பை சுத்தமான காற்றைப் பெறும். தினமும் யோகா பயிற்சி செய்வதால் அன்று நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்க முடியும். முதுமையை போக்கி எப்போதும் மனம் மற்றும் உடலை இளமையாக வைத்திருக்க முடியும். தேவையற்ற கொழுப்பு சேராமல் தடுக்கிறது. சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.
அதிலும் யோகப் பயிற்சி உடற்பயிற்சி மட்டுமல்ல.. சில நோய்களை போக்கும் மருந்தாகவும், சில நோய்களை நெருங்கவே விடாத அருமருந்தாகவும் செயல்படுகிறது. குறிப்பாக பெண்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு யோகாசனம் பெரிய வரப்பிரசாதமாக இருக்கிறது. அதனால் தான் பெண்களுக்கு சில நாள்பட்ட நோய்கள் ஏற்படாமல் இருக்க யோகாசனம் செய்யுங்கள் என ஆயுர்வேத மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதிலும் 35 வயது ஆன பெண்கள் கண்டிப்பாக சில யோகாசனங்களை வழக்கமாக செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறார்கள்.
நாற்பது வயது ஆன பெண்கள் மாதவிடாய் உள்ளிட்ட பிரச்னைகளை சந்திக்கிறார்கள். சீரான இடைவெளியில் மாதவிடாய் ஏற்படுவதற்கு சில குறிப்பிட்ட ஆசனங்கள் மிக முக்கியம் என அறிவுறுத்துகிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள். பருவமடைந்த பிறகு மாதவிடாய் பெண்களுக்கு ஹார்மோன் எழுச்சியை ஏற்படுத்துகிறது. நாற்பது வயது ஆகும் பொது மாதவிடாய் சுழற்சி மெதுவாக நிற்கத் தொடங்கும். அப்போது உண்டாகும் ஹார்மோன்கள் பிரச்னையால் பெண்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகிறார்கள். அது போன்ற ஹார்மோன் சிக்கல்களை குறிப்பிட்ட யோகாசனங்கள் மூலம் மிக எளிதாக சமாளிக்கலாம் என நம்பிக்கை தருகிறார்கள் மருத்துவர்கள்.
ஹார்மோன் முரண்பாடுகளால் பெண்களுக்கு தைராய்டு சுரப்பிகள், கர்பப்பை உள்ளிட்டவைகள் கடுமமையான மாற்றத்தை சந்திக்கின்றன. அந்த மாற்றங்களை முறைப்படுத்தாவிட்டால் பல்வேறு நீண்டகால நோய்கள் பெண்களுக்கு ஏற்பட்டு விடும். 40 முதல் 55 வயதாகும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்படும் போது ஓஸ்ட்ரோஜென் புரோஜெஸ்ட்ரோன் திரவங்கள் சுரப்பது குறையத்தொடங்கும். இது உடம்பை நிலையாக வைத்திருக்க உதவும் நமது மூளையின் ஆழத்தில் இருக்கும் ஹைபோதாலமஸ் என்னும் சுரப்பியின் செயல்பாட்டை பாதிக்கும். இந்த ஹைபோதாலமஸ் மற்றும் தைராய்டு சுரப்பிகள் தான் உடல் வெப்பநிலையை சீராக்கி, சரியான முறையில் பசி மற்றும் தாகத்தை தூண்டுதல், இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருத்தல், தூக்கத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட முக்கியமான வேலைகளை செய்கிறது.
ஹைபோதாலமஸ் சுரப்பி பாதிக்கப்பட்டால் நமது உடலின் அன்றாட செயல்பாடுகளில் தடுமாற்றம் ஏற்படும். அதனால் பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடும். ஆனால் சில குறிப்பிட்ட யோக பயிற்சிகள் மேற்கொண்டால் இது போன்ற பிரச்னைகளை எளிதாக சமாளிக்கலாம். இதனால் முறையான யோக ஆசிரியரின் அறிவுரை மற்றும் கண்காணிப்போடு 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் யோகாசனம் செய்வது நல்லது என்பது ஆயுர்வேத மருத்துவர்களின் ஆலோசனையாகும்..
வாத்தீ அகஸ்தீஸ்வரன்