For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சர்வதேச அடிமை முறை ஒழிப்பு தினம்!

05:53 AM Dec 02, 2024 IST | admin
சர்வதேச அடிமை முறை ஒழிப்பு தினம்
Advertisement

ந்த பரந்த உலகில் வாழும் மக்களிடையே ஜாதி, மதம், இனம், மொழி, நிறம், அரசியல், நாடு, சமூகம், பண்பாடு போன்ற அளவுகோள்களில் அடிமைப்படுத்தப்பட்டவர்களை அதில் இருந்து மீட்டெடுக்கும் வகையில் , “நாம் யாரும் அடிமையில்லை, நமக்கு யாரும் அடிமையில்லை” என்ற அரசியல் முழக்கத்தை செவிமடுத்த ஐ.நா சபையானது 1986 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 2 ஆம் தேதியை சர்வதேச அடிமைகள் ஒழிப்பு நாள் என்பதாக அனுசரித்து வருகிறது.

Advertisement

நவீன மயமாகி விட்டதாகக் கூறப்படும் இன்றைய உலகிலும் 2 கோடியே 70 லட்சம் பேர் அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போரில் தோல்வி அடைந்த நாட்டினரை, அடிமைகளாகச் சிறையில் வைக்கும் வழக்கம் பழங்காலத்தில் இருந்தது. நாளடைவில் அந்தக் கைதிகளைத் தங்களுக்குச் சாதகமான வழியில் பயன்படுத்த தொடங்கினர். இவ்வாறு தொடங்கியது தான் அடிமைப் பணி. ஐரோப்பிய நாடுகள், தங்கள் காலனி நாடுகளில் உள்ள மக்களை அடிமைகளாக்கினர்.தற்போதைய நவீன உலகிலும் அடிமைகள் இருக்கத்தான் செய்கின்றனர். கட்டாயப்படுத்தி வேலை பார்ப்பவர்கள், கடத்தப்படுதல், கொத்தடிமைகள், குழந்தை தொழிலாளர், பாலியல் தொழிலாளர் என பல வழிகளில் தற்போது அடிமைகள் இன்னல்படுகின்றனர்.

Advertisement

விரிவாகச் சொல்வதானால் தற்போதைய நவீன உலகிலும் 2 கோடியே 70 லட்சம் பேர் அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போரில் தோல்வி அடைந்த நாட்டினரை, அடிமைகளாகச் சிறையில் வைக்கும் வழக்கம் பழங்காலத்தில் இருந்தது. நாளடைவில் அந்தக் கைதிகளைத் தங்களுக்குச் சாதகமான வழியில் பயன்படுத்த தொடங்கினர். இவ்வாறு தொடங்கியது தான் அடிமைப் பணி. ஐரோப்பிய நாடுகள், தங்கள் காலனி நாடுகளில் உள்ள மக்களை அடிமைகளாக்கினர். அந்த வகையில் கட்டாயப்படுத்தி வேலை பார்ப்பவர்கள், கடத்தப்படுதல், கொத்தடிமைகள், குழந்தை தொழிலாளர், பாலியல் தொழிலாளர் என பல வழிகளில் தற்போதும் அடிமைகள் இன்னல்படுகின்றனர்.

ஆம்.. மனித குலம் தோன்றியபோது அது பொதுவுடமை சமூகமாகதான் இருந்திருக்கும். இயற்கையில் கிடைத்த காய் கனிகளையும், வேட்டையாடிய விலங்குகளையும் பகிர்ந்து உண்டான். அடுத்தகட்டமாக குழுகுழுவாகப் பிரிந்து வாழத்துவங்கினான். இந்தக் குழு ஆடு, மாடு போன்றவற்றை வளர்க்கத் துவங்கியது. மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே போக அவர்களுக்கான உணவின் தேவையும் அளவும் அதிகரித்தது. உணவுக்காக இந்தக் குழுக்கள் மோதிக்கொள்ளத் துவங்கின. இயற்கை வளங்களை பயன்படுத்திக் கொள்வதில் போட்டி ஏற்பட்டது. போட்டியில் தோற்ற ஆண்கள் கொல்லப்பட்டனர். அவர்களைச் சார்ந்த பெண்களை வெற்றி பெற்ற குழுவினர் கொண்டு சென்றனர். இதற்குப்பின் தோற்றுப்போன ஆண்களையும் அவர்கள் கொல்லவில்லை. தங்களுக்கு வேலை செய்யும் அடிமைகளாக்கிக்கொண்டனர். அப்போது தான் அடிமை சமுதாயம் உருவானது.

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அடிமைகள் அடிக்கடி மற்றவர்களுக்கு வேலை செய்வதற்கு அனுப்பப்பட்டதுடன், ஒரு உரிமையாளரிடமிருந்து மற்றொரு உரிமையாளருக்கு மாற்றியும் கொடுக்கப்பட்டனர். அடிமைகளை அடகு வைப்பது, விற்பது நிலச்சுவான்தார்களின் உரிமையாக இருந்தது.

ஒரு அடிமைக் குடும்பத்தில் பிறந்தவர் வாழ்நாள் முழுவதும் அடிமையாக இருந்து தான் இறக்கும்போது,இந்த அடிமை முறையை தனது சந்ததிகளுக்கு மாற்றிக் கொடுத்துவிட்டு பரம்பரை அடிமை முறைக்கு அவர்கள் குடும்பங்கள் இருந்தன. இந்த அடிமை முறை சென்னை மாகாணம், திருவாங்கூர் சமஸ்தானத்தில் திருமணத்தின்போது, வரதட்சணையாக அடிமைகளையும் சேர்த்துக் கொடுத்ததாகவும் (சீதனம்) சிற்றரசர்கள் தங்கள் மனைவிமார்கள் கொண்டுவந்த அடிமைகளை வேலை செய்யப் பயன்படுத்திக் கொண்டதாகவும் வரலாறு கூறுகிறது.

ஆடு, மாடுகளை வாங்குவதைப்போல, நாட்டு இளம் பெண்ணை விலைக்கு வாங்கி அவர்களை அனுபவித்து விட்டு பணம் உள்ள நிலச்சுவன் தார்களுக்கு அவர்களை விற்றுவிடும் பழக்கத்தை போர்ச்சுகீசியர்கள்கையாண்டு வந்ததாகவும் அடிமையாக வாங்கிய 7,8 பெண்களுடன் தான் நிலச்சுவான்தார்கள் உறங்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்றும் பேராசிரியர் சிவசுப்ரமணியன் தனது நூலில் மேற்கோள் காட்டுகிறார் என்ற செய்தியும் உள்ளன.

பண்ணையடிமைகளுக்கு சவுக்கடி கொடுப்பது, சாணிப்பால் தருவது, பெண்களின் மார்பகங்களைப் பிடித்துப் பிழிந்து ரத்தம் வரவைத்து ரசிப்பது போன்ற கொடூரங்கள் தஞ்சை மாவட்டத்தில் நிலவி வந்ததை விவசாய சங்கத் தலைவர்கள் இன்றும் நினைவு கூர்கின்றனர். மேற்சொன்ன இவையெல்லாம் இன்றும் தொடர்கின்றனவா எனக் கேட்டால் இல்லவே இல்லை என சட்டெனச் சொல்லிவிடலாம்.

நவீன கொத்தடிமை முறை இன்றும் தொடர்கிறது எனச் சொன்னால் காலிலும் கையிலும் விலங்கு போட்டிருக்கிறார்களா? தனியாக அவர்களை அடைத்து வைத்திருக்கிறார்களா? அவர்களின் குடும்பங்கள் நம்மைப் போன்ற மனிதர்கள் வாழ்ந்து வரும் நகரங்களுக்கு வருவதேயில்லையா? வீட்டை எழுதி வாங்கிக் கொண்டார்களா? என்ற கேள்விகளைக் கேட்கிறார்கள்.

மேற்கூறிய வடிவங்கள் எதிலும் இப்போது கொத்தடிமைகள் இல்லை. ஆனால் கொத்தடிமை முறை இருக்கிறது. எப்படி?

கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் 1976-ன்படி கடன் அல்லது உழைப்புச் சுரண்டலுக்காக ஒருவரின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் இழப்பது கொத்தடிமைத் தொழில் முறை எனப்படும். அத்துடன் கொத்தடிமைத் தொழில் உள்ளவர்களுக்கு குறைந்தபட்சக் கூலி வழங்கப்படமாட்டாது. விருப்பப்பட்ட வேலையைச் செய்யும் சுதந்திரம் இருக்காது. வேலை முடிந்தவுடன் விருப்பப்பட்ட இடங்களுக்குச் சொல்லும் உரிமை இருக்காது. அத்துடன் உழைப்பின் விளைவுகளை சந்தை நிலவரப்படி விற்பனை செய்யும் உரிமையும் இருந்தது. இதன்படி பார்ப்போமேயானால் உழைப்புச் சுரண்டலுக்காக மனிதர்களை வைத்து மனித வணிகம் நடந்து வருகிறது.

அதே சமயம் பண்டைய இந்தியாவில் வாங்கி, விற்கும் அடிமைகள் பெரிய அளவில் இருந்ததாக தெரியவில்லை. அதே நேரத்தில், தமிழ்நாட்டில் சோழர் காலத்தில் அடிமை முறை இருந்ததாகக் கூறப்படுகிறது. ராஜாக்களும், வசதி படைத்தவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கியுள்ளனர். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது. இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமை விற்பனைப் பத்திரம் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அடிமை தீண்டா அடிமை என்றழைக்கப்பட்டார். அடிமைகள் மீது ஆடு, மாடுகளுக்கு இடுவது போல் இலச்சினை பொறிக்கப்பட்டன. அரண்மனை அடிமைகளுக்குப் புலிச் சின்னம், சிவன் கோவில் அடிமைகளுக்கு திரிசூலச் சின்னம், வைணவ கோவில் அடிமைகளுக்குச் சங்குச் சின்னம் இடப்பட்டன.

இந்நிலையில் மதங்களும் மன்னர்களும் அடிமைகளை நல்ல முறையில் நடத்த கோரினாலும், 18- ம் நூற்றாண்டின் பின் பகுதியில்தான் அடிமைமுறையை மொத்தமாக ஒழித்து கட்டுவதற்கான குரல்கள் எழுந்தன. இவை முதலில் இங்கிலாந்தில் வில்லியம் வில்பர்போர்ஸ் என்பவரால் பிரசாரம் செய்யப்பட்டன. இவர் 1787-ல் ஆரம்பிக்கப்பட்ட 'அடிமை ஒழிப்பு குழுவின்" முதல் தலைவர்.

பிரெஞ்சு புரட்சியின் போது முதல் குடியரசு பிரகடனம் செய்யப்பட்ட பின், அடிமைமுறை தடை செய்யப்பட்டது. மாவீரன் நெப்பொலியன் தலைவராக ஆனவுடன், அடிமைதனத்தின் பல தடைகள் நீக்கப்பட்டன. 19- ம் நூற்றாண்டில் பல நாடுகள் அடிமை முறையை தடை செய்து ஒழித்தன.

அடிமைகளில் பலர் பலசாலிகளாக இருந்தனர். அவர்கள் கூடி பேச வாய்ப்புகள் வழங்கப்படாமல் இருந்தது. சிந்தனை மற்றும் கருத்து வெளியிடும் உரிமையும் பறிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்தான் ஹைத்தி நாட்டில் 1791, ஆகஸ்ட் ஆகஸ்ட் 23 ம் தேதி அடிமைகள் புரட்சி செய்தனர். ஐ.நாவின் நடவடிக்கையால் சிலி 1823-ல், ஸ்பெயின் 1837-ல், டொமினிகன் குடியரசு 1844-ல், ஈகுவடார் 1854-ல், பிரேசில் 1888-ல் அடிமை முறையைத் தடை செய்தன.

இந்த வணிகம் தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், ஈரோடு, கோவை, கரூர், நெல்லை போன்ற அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகிறது. இதையும் தாண்டி மனிதர்கள் தமிழகத்தில் குஜராத், ஒடிசா, பிஹார் போன்ற வடமாநிலங்களிலிருந்தும் இந்த மனித வணிகத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

நாட்டிற்கோ, சமூகத்துக்கோ, கலாசாரத்துக்கோ, தனிப்பட்ட நபருக்கோ உலகில் யாரும் யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது என்கிறது ஐ.நா. அதே நேரத்தில் அடிமை, கொத்தடிமை முறை ஒழிப்பு என்பது அரசாலோ, தனி நபராலோ, தனி இயக்கங்களாலோ, ஊடகங்களாலோ சாத்தியமாகும் சாதாரணமான விஷயமல்ல. அனைவரும் ஒருங்கிணைந்து செய்ய வேண்டிய பணி. முதலில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சகமனிதனை மனித மாண்புடன் நடத்தும் மனநிலை ஒவ்வொருவருக்குள்ளும் மலரவேண்டும்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
Advertisement