அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: நிபந்தனைகள் விபரம்!
“ஒரு மாநிலத்தின் முதல்வராகவும், ஒரு தேசிய கட்சியின் தலைவராகவும் கெஜ்ரிவால் உள்ளார். அவர் மீது தீவிரமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவர் தண்டிக்கப்படவில்லை. சமூகத்திற்கு அவரால் ஆபத்து ஏதும் இல்லை. கெஜ்ரிவாலுக்கு 21 நாட்கள் ஜாமின் வழங்குவதால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. 21 நாட்கள் அவர் சிறையில் இருந்தாலும் அல்லது வெளியில் இருந்தாலும் எந்த மாற்றம் ஏற்படாது.“ என்று கூறி சுப்ரீம் கோர்ட் ஊழல் முறைகேடு வழக்கில் ஜெயிலில் இருக்கும் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு இன்று இடைக்கால ஜாமீன் வழங்கியது.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்திய வரலாற்றிலேயே முதல்வர் பதவியிலிருக்கும்போது கைதுசெய்யப்பட்ட முதல் நபர் கெஜ்ரிவால்தான். இதற்கு முன்பு கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவருமே, தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தான் கைதாகியிருக்கின்றனர். சமீபத்தில், அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனும் தனது பதவியை ராஜினாமா செய்த பின்னரே கைதுசெய்யப்பட்டார். ``கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டிருந்தாலும், சிறையிலிருந்தே ஆட்சி செய்வார். தேர்தலில் கெஜ்ரிவால் பிரசாரம் செய்யக்கூடாது என்றே அவரைக் கைதுசெய்திருக்கின்றனர்!'' என்றது ஆம் ஆத்மி. இந்நிலையில் அவர் பல முறை ஜாமின் கேட்டு கோர்ட்டை நாடினார். ஆனால் பலமுறை நிராகரிக்கப்பட்டது. தேர்தல் பிரசாரம் செய்ய விடாமல் தடுக்கும் முயற்சி என கெஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது.இதனை ஏற்ற சுப்ரீம் கோர்ட் வரும் ஜூன் 1 ம் தேதி வரை ஜாமினில் விட உத்தரவிட்டனர்.
கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த நிபந்தனைகள் இதோ:
* சிறையில் இருந்து வெளியே வருவதற்கு முன்னர் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பிணை பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.
* லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்தாலும், முதல்வர் அலுவலகத்திற்கோ அல்லது டெல்லி தலைமைச் செயலகத்திற்கோ செல்லக்கூடாது.
* கவர்னர் சக்சேனாவின் அனுமதியின்றி எந்த ஆவணத்திலும் கையெழுத்து போடக்கூடாது
* டெல்லி அரசின் மதுபானக் கொள்கை குறித்தோ அல்லது தன் மீதான குற்றச்சாட்டு குறித்தோ எங்கும் விவாதிக்கக்கூடாது.
* சாட்சிகளை தொடர்பு கொள்ளக்கூடாது
கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய நீதிபதிகள் கூறியதாவது:
ஒரு மாநிலத்தின் முதல்வராகவும், ஒரு தேசிய கட்சியின் தலைவராகவும் கெஜ்ரிவால் உள்ளார். அவர் மீது தீவிரமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவர் தண்டிக்கப்படவில்லை. சமூகத்திற்கு அவரால் ஆபத்து ஏதும் இல்லை. கெஜ்ரிவாலுக்கு 21 நாட்கள் ஜாமின் வழங்குவதால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. 21 நாட்கள் அவர் சிறையில் இருந்தாலும் அல்லது வெளியில் இருந்தாலும் எந்த மாற்றம் ஏற்படாது.அவர் மீதான வழக்கு 2022 ஆக., மாதம் பதிவு செய்யப்பட்டது. ஆனால், இந்தாண்டு மார்ச் 21ல் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். வழக்குப்பதிவாகி ஒன்றரை ஆண்டுகள் அவர் வெளியில் இருந்துள்ளார். அவர் முன்பே கைது செய்யப்பட்டு இருக்க வேண்டும் அல்லது பிறகு கைது செய்திருக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆக தேர்தல் பிரச்சாரத்திற்காக சிறையில் இருக்கும் ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கு இந்திய நீதிமன்றம் நிவாரணம் வழங்குவது இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே இதுதான் முதல் முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது