For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஆங்கிலப் புத்தாண்டின் சுவாரஸ்யமான வரலாறு!

02:27 PM Dec 31, 2023 IST | admin
ஆங்கிலப் புத்தாண்டின் சுவாரஸ்யமான வரலாறு
Advertisement

ர்வதேச அளவில் நியூசிலாந்து நாட்டின் சமோவா பகுதியில்தான் முதன்முதலில் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. அதாவது இந்திய நேரப்படி டிசம்பர் 31-ம் தேதி 2023ம் ஆண்டு பிற்பகல் 3.30 மணி என்பது. இவர்களுக்கு சரியாக அதிகாலை 12 மணி ஆகிவிடும். புத்தாண்டையும் வரவேற்க தயாராகிவிடுவார்கள். உலகிலேயே முதல் முதலாக புத்தாண்டு இவர்களுக்கு பிறப்பதால், எப்போதுமே சற்று ஆடம்பரமாகவே கொண்டாடுவார்கள். லேசர் விளக்குள் ஒளிர, வாண வேடிக்கைகளுடன் கொண்டாட்டம் களை கட்டும். இதேபோல் இந்திய நேரப்படி டிசம்பர் 31-ம்தேதி பிற்பகல் 3.30 மணிக்கு நியூசிலாந்திலும் புத்தாண்டு கொண்டாட்டம் ஆரம்பமாகும். அடுத்த படியாக ஆஸ்திரேலியாவில் மாலை 6.30 மணியளவில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.  இப்படியாக ஜனவரி 1, மாலை 5.50 மணிக்கு பேக்கர் தீவு புத்தாண்டை கொண்டாடுகிறது. இது தான் புத்தாண்டு பிறக்கும் கடைசி தீவு நாடாகும். ஆக, ஒருநாள் முன்னதாக மாலை நேரத்தில் துவங்கும் புத்தாண்டானது, மறுநாள் மாலை வரை ஒவ்வொரு உலக நாடுகளும் கொண்டாடி மகிழ்கிறது.

Advertisement

பல்வேறு நாடுகளில் பட்டாசுகளை வெடித்தும் வான வேடிக்கைகளை நிகழ்த்தியும் மக்கள் புத்தாண்டை வரவேற்கின்றனர். இனிப்புகளைப் பரிமாறியும் பூக்களை வழங்கியும் புத்தாண்டு தருணங்கள் நினைவில் இருத்தப்படுகின்றன.உலகெங்கும் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கிலப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான வரலாறு இருக்கிறது.

Advertisement

இந்த புத்தாண்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. எனினும் அப்போது ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டாகக் கொண்டாடப்படவில்லை. அந்தக் காலகட்டத்தில் ரோமானிய காலண்டரில் 10 மாதங்கள் மட்டுமே இருந்தன. மார்ஷியஸ் நினைவாகப் பெயர் சூட்டப்பட்ட மார்ச் மாதம் முதல் மாதமாக இருந்தது. அதனால் மார்ச்சில்தான் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து ரோமானிய மன்னரான போம்பிலியஸ் இரண்டு மாதங்களைச் சேர்த்து மொத்தம் 12 மாதங்களாக்கினார். ஜனஸ் என்னும் ரோமானியக் கடவுளின் நினைவாக ஜனவரியஸ், பிப்ரவரியஸ் மாதங்கள் சேர்க்கப்பட்டன.

புகழ் பெற்ற மன்னரான ஜூலியஸ் சீசர், ஜூலியன் காலண்டரை உருவாக்கினார். அதில்தான் ஜனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அது உலகம் முழுவதும் பெரும்பாலானோர் பின்பற்றும் கிரிகோரியன் காலண்டரை ஒத்திருந்தது. கடவுள் ஜனஸைக் கவுரவிக்கும் விதமாக ரோமானியர்கள் அம்மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாட ஆரம்பித்தனர். புத்தாடை உடுத்தி மகிழ்ந்தனர். பரிசுகளைப் பரிமாறிக் கொண்டனர்.

எனினும் யேசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25-ம் தேதியையே (கிறிஸ்துமஸ்) புத்தாண்டாகக் கொண்டாட வேண்டுமென இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. அந்நாட்டு மக்கள் டிசம்பர் 25-ம் தேதியைக் கொண்டாடத் தொடங்கினர். குழப்பம் நீடித்த நிலையில் கடைசியாக கி.பி. 1500-களில் போப் கிரிகோரி என்பவர், லீப் ஆண்டை உருவாக்கி புதிய காலண்டரை உருவாக்கினார். இதைத்தொடர்ந்து கிரிகோரியன் காலண்டர் நடைமுறைக்கு வந்தது. இதைத்தான் இன்று நாம் பின்பற்றி, புத்தாண்டைக் கொண்டாடி வருகிறோம்.

புத்தாண்டு சபதம்

இது இன்றோ, நேற்றோ தொடங்கியதில்லை.இது இன்றோ, நேற்றோ தொடங்கியதில்லை. புத்தாண்டு சபதம் மேற்கொள்வது ஆதிகாலத்தில் இருந்தே வழக்கமாக இருந்திருக்கிறது. பாபிலோனியர்கள் புத்தாண்டில் பழைய கடன்களை அடைப்போம் என்றும் கடன் வாங்கிய பொருட்களைத் திருப்பித் தருவோம் என்றும் உறுதி பூண்டனர்.

ஆனால் கேக்கையும் தாண்டி, எலுமிச்சைப் பழம், ஆப்பிளெல்லாம் கொடுத்து வாழ்த்துச் சொல்லும் சம்பவங்களையும் கடந்து முன்னுக்கு வந்து நிற்கின்றன சபதங்கள்!

அநேகமாக, உங்கள் நண்பர்களோ உறவினர்களோ கூட உங்களிடம் புத்தாண்டு சபதத்தைச் சொல்லிப் பெருமைபடப் பூரித்துப் போயிருப்பார்கள். ‘இதைத்தானேடா போன வருஷமும் சொன்னே...’ என்று நீங்கள் நக்கலடித்திருக்கலாம்.

அவ்வளவு ஏன்... ‘மாப்ளே... இந்த வருஷமாவது புத்தாண்டு சபதக் கேஸ்ல ஜெயிச்சுக் காட்டுவியா’ என்று உங்களைக் கூட கலாய்த்திருப்பார்கள்.

சத்தியம் அவனுக்கு சர்க்கரைப் பொங்கல் என்பார்கள். அது சர்க்கரைப் பொங்கலா. தெரியவில்லை. ஆனால் சபதங்கள் சர்க்கரைப் பொங்கல்தான். புத்தாண்டில் தொடங்கி, பொங்கலுக்குள் முடிந்து விடுகிற, முடித்துக் கொள்கிற சபதங்களே இங்கே நிறைய உண்டு! அப்படியான சபதக்காரர்களே நம்மைச் சுற்றிலும். ஏன்... நாமே கூட! ஆம்.. நாமும் எத்தனையோ சபதங்களை ஏற்றிருப்போம் இல்லையா?, சில நாட்கள் முயற்சித்து கைவிட்டும் இருப்போம். இந்தப் புத்தாண்டில் இருந்தாவது எடுத்த சபதத்தை நிறைவேற்றுவோம். முடியவில்லையா?

எந்த சபதமும் செய்ய மாட்டேன் என்றாவது சபதம் எடுப்போம்.- என்ன சரியா?

அகஸ்தீஸ்வரன்

Tags :
Advertisement