For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

இண்டிகோ விமானங்களில் இன்று முதல் கட்டணம் குறைவு!

06:21 PM Jan 04, 2024 IST | admin
இண்டிகோ விமானங்களில் இன்று முதல் கட்டணம் குறைவு
Advertisement

டந்தாண்டு அக்டோபரில் கொண்டு வந்த எரிபொருள் கட்டணத்தை, ரத்து செய்வதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் டிக்கெட் கட்டணத்தில் ரூ.300 முதல் ரூ.1000 வரை குறையலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மற்றும் உள்நாட்டு சேவைகளில் இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இண்டிகோவை பின்பற்றி இந்தியாவில் வரும் நாட்களில் எல்லா விமான நிறுவனங்களிலும் விமான கட்டணம் கொஞ்சம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

2023 அக்டோபரில் தொடர்ச்சியான ATF விலை உயர்வை சமாளிக்கும் வகையில் இண்டிகோ விமான நிறுவனம் எரிபொருள் சர்ஜ் கட்டணத்தை அறிமுகப்படுத்தியது. இதனால் விமான கட்டணம் வேகமாக உயர்ந்தது.யணிகளின் கட்டணத்துடன் எரிபொருள் கட்டணத்தை கூடுதலாக அறிமுகம் செய்தது. அதன்படி, குறைந்தபட்சமாக 500 கீ.மீ. வரை பயணம் செய்பவர்களுக்கு கூடுதலாக ரூ.300 என்றும் 3,501 கி.மீ.க்கு மேல் பயணிப்பவர்களுக்கு ரூ. 1,000 என எரிபொருள் கட்டணமாக விதிக்கப்பட்டு வந்தது.

Advertisement

இந்த நிலையில், விமான எரிபொருள் விலையை ஒன்றிய அரசு குறைந்ததை தொடர்ந்து, பயணிகளுக்கு விதிக்கப்பட்டு வந்த எரிபொருள் கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளில் இந்த எரிபொருள் கட்டண ரத்து நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால ஒரு விமானச் சேவையின் செலவில் கிட்டத்தட்ட 40 சதவீதத்தைக் ஏடிஎஃப் கொண்டிருக்க முடியும் என்றும், இந்த நடவடிக்கை குறைந்த கட்டண விமானங்களில் பயணிப்பவர்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஏடிஎஃப் விலை குறைவதால் எப்படி பெட்ரோல் விலை குறைவதால் பஸ் டிக்கெட் விலை குறையுமோ அதேபோல் விமான டிக்கெட் விலையும் குறையுமாம்.

மேலும் செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில், IndiGo நிறுவனம் ரூ.188.93 கோடி நிகர லாபத்தைப் பெற்றுள்ளது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது,​​செயல்பாடுகளின் வருவாய் 19.57 சதவீதம் அதிகரித்து ரூ.14,944 கோடியாக உள்ளது. வருவாயும் உயர்ந்து உள்ளதால் இண்டிகோ நிறுவனம்.. தற்போது டிக்கெட் கட்டணங்களை குறைத்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளதை அடுத்து ஏனைய விமான நிறுவன அறிவிப்புகளையும் விரைவில் எதிர்பார்க்கலாம்.,

Tags :
Advertisement