For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

இந்தியாவின் முதல் பிராந்திய அதிவேகமான நமோ - பாரத் ரயில் - பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்! .

07:09 PM Oct 20, 2023 IST | admin
இந்தியாவின் முதல் பிராந்திய அதிவேகமான நமோ   பாரத்  ரயில்   பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
Advertisement

ம் நாட்டின் முதல் செமி ஹைஸ்பீடு பிராந்திய ரயில் சேவையான 'நமோ பாரத்' சேவையை உத்தரப் பிரதேசத்தில் பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். உத்தரபிரதேசத்தில் ஷாஹிபாபாத் மற்றும் துஹாய் டிப்போ ரயில் நிலையங்களை இணைக்கும் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன் மூலம், இந்தியாவில் மிதல் பிராந்திய விரைவு ரயில் சேவை (ஆர்ஆர்டிஎஸ்) செயல்பாட்டுக்கு வந்துள்ளது.முன்னதாக, பிராந்திய விரைவு ரயில் சேவையான (Regional Rapid Train Service) இதன் பெயர் ‘ரேபிட் எக்ஸ்’ என இருந்தது. நேற்றைய தினம் இதன் பெயர் ரேபிட்எக்ஸ் என்பதிலிருந்து நமோ பாரத் என மாற்றப்பட்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Advertisement

தொடர்ந்து, அந்த ரயிலில் பிரதமர் மோடி பயணித்தார். அப்போது பள்ளி மாணவர்கள் உள்பட ரயிலில் பயணித்தவர்களிடம் அவர் கலந்துரையாடினார். “நமோ பாரத் என்பது மாற்றத்திற்கான பிராந்திய மேம்பாட்டு முயற்சியாகும். இது நகரங்களுக்கு இடையேயான பயணத்திற்கு அதிவேக ரயில்களை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.” என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Advertisement

இந்தியாவிலுள்ள மாநில நகரங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்தை நவீனமயப்படுத்தும், பிராந்திய விரைவு ரயில் சேவைக்கான (Regional Rapid Train Service) திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். இந்த வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவைக்கு பிறகு, முக்கியமான நடவடிக்கையாக நமோ பாரத் தொடங்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ரயில், மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கக் கூடியது. எனினும், இது 160 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் மட்டுமே இது இயக்கப்படும். முழுமையாக குளிரூட்டப்பட்ட இந்த ரயில், பாதுகாப்பானதாகவும், சவுகரியங்கள் நிறைந்ததாகவும் இருக்கும். ரயில் பெட்டியில் பயணிகள் படிப்பதற்காக இதழ்கள், கால்கள் வைக்கும் இடத்தில் மிதியடி உள்ளிட்ட வசதிகள் இருக்கும். இதில் ஒரு பெட்டி பிரிமியம் பெட்டியாகவும், ஒரு பெட்டி மகளிருக்கானதாகவும் இருக்கும். கடைசி பெட்டி, வீல் சேர் அல்லது ஸ்டெரெச்சர் மூலம் பயணிகள் ஏறும் வகையில் வசதிகள் இருக்கும்.

டெல்லி - காஜியாபாத் - மீரட்டுக்கு இடையேயான 17 கி.மீ. தொலைவு வழித்தடத்தில் ஷாஹிபாபாத், காஜியாபாத், குல்தார், துஹாய், துஹாய் டிப்போ ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன. உலகத் தரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த ரயில் நிலையங்களில் 15 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். அதிகபட்சமாக 180 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் இந்த ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பயணிகளின் வருகைக்கு ஏற்ப 5 நிமிட இடைவெளியில் ஒரு ரயிலை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.30,000 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை பானிபட் வரையில் நீட்டிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Tags :
Advertisement